சட்னி அரைக்கும் காதலன்

 1. nchokkan
  ஒருத்தன் காதல்வயப்படுகிறான். அவளை நினைத்து ஏக்கப் பெருமூச்சுடன் விழுந்து கிடக்கிறான். அதைப் பார்த்த இன்னொருவன் இப்படிப் பாடுகிறான்: |1
 2. nchokkan
  என்னாச்சு இவனுக்கு? இவன் தன்னோட உயிரைப் பெருமூச்சுங்கற அம்மியில வெச்சு அரைக்கறானே! |2
 3. nchokkan
  ஆனா, அம்மியில் அரைக்கப் பொருள்மட்டும் போதுமா, அது குழையறதுக்கு அப்பப்போ நீர் விடணுமே? |3
 4. nchokkan
  அதுவும் உண்டு. பெருமூச்சு எனும் அம்மி, அதுல உயிர்தான் தேங்காய், பொட்டுக்கடலை, அதை அரைக்கறதுக்கு நீர், அவளோட நினைவு / காதல் |4
 5. nchokkan
  இத்தனையும், அரை விருத்தத்தில் சொல்லிவிடுகிறான் கம்பன். சுந்தர காண்டத்தில் சொல்லப்படும் ராவணனின் காதல் அது |5
 6. nchokkan
  காவிஅம் கண்ணி (சீதை) தன்பால் கண்ணிய காதல் நீரால், ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு (ராவணன்) அரைக்கின்றான்! #கம்பேன்டா |6/6
Advertisements

June 2012 : Week 3

 • 16000+ seats in Bangalore schools reserved for underprivileged families, as per RTE, but only 2384 applicants. Some Conspiracy?!
 • குழந்தைகளை பள்ளியில் drop செய்யவரும்பெற்றோர் night dress,shortsல் வரக்கூடாதாம்,விட்டா அவங்களுக்கும் யூனிஃபார்ம்அறிவிச்சுக் காசுபண்ணுவாங்க
 • ’ராம கிருஷ்ண விஜயம்’ மாத இதழ் சென்ற ஆண்டு வரையிலான 90 வருட இதழ்கள் முழுமையையும் ஸ்கான் செய்து டிவிடியாக வெளியிடுகிறது, விலை ரூ 400 |1
 • இந்த டிவிடியை இப்போதே முன்பதிவு செய்து வாங்கினால் ரூ 100 தள்ளுபடி : http://www.chennaimath.org/estore/91-years-of-sri-ramakrishna-vijayam-a-dvd-collection |2
 • ’ராம கிருஷ்ண விஜயம்’ archiveல் எனக்கு அதிக ஆர்வம் இல்லை, ஆனால் இந்த Concept ரொம்பப் பிடித்துள்ளது,விகடன்,கல்கி,குமுதமெல்லாம் செய்தால்? |3
 • ஒரு பத்திரிகையின் பல வருட இதழ்கள் ஈபுக்காக (legal) கிடைத்தால், நமக்கு வேண்டியதைக் கொத்தி எடுத்துச் சேர்க்கலாம் |4
 • உதாரணமாக, பொன்னியின் செல்வன் வெளியானபோது வந்த ஓவியங்களுடன் வாராவாரம் படிக்கலாம், அந்தக் கால விளம்பரங்கள், துணுக்குகள் |5
 • குறிப்பாக, பூந்தளிர், ரத்னபாலா போல் இப்போது நின்றுபோய்விட்ட சிறுவர் இதழ்களின் archiveகள் Legal மென்பிரதியாகக் கிடைத்தால் ஆஹா! |6/6
 • ’முப்பாலும் சோறும் உண்ண’ என்று முக்கூடற் பள்ளுவில் ஒரு வரி. ‘முப்பால்’ என்றால் திருக்குறள் மேட்டர் இல்லை, நிஜமான மூன்று பால்கள் 1/2
 • //முப்பால்// ஆட்டுப்பால், பசும்பால், தேங்காய்ப் பால் மூன்றையும் சோற்றில் பிசைந்து சாப்பிட்டார்களாம் 2/2
 • மலையாளிகள் பேசும்போதே பாட்டுமாதிரி இருக்கும். வைரமுத்துவும் அப்படிதான் எதையும் ராகம் போட்டுப் பேசுகிறார் 🙂
 • கறுப்பு = கோபம், கருப்பு = நிறம். நீங்களே யோசியுங்கள், கரி : கருமை : கருப்பு : கரிசல் : கார் .. இதில் எங்கேயும் வல்லின ‘ற’ இல்லை
 • ‘What successful people do before breakfast’ என்றொரு மெயில் வந்துள்ளது, டூத் பேஸ்ட் விளம்பரமாக இருக்குமோ?
 • One headache reduced, our company takes care of our IT Returns, they have all the documents to process it so that we can relax. Good!
 • கலைஞர் டிவி அப்துல் ஹமீது நிகழ்ச்சி : ‘பிரபலங்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்’ளாம்… பன்மைக்கு எப்படிய்யா ‘தனது’ வரும்???!
 • கொஞ்சம் ஒழுங்காக சீர் பிரித்துக் கொடுத்தால் கம்பனை நேரடியாகவே படிக்கலாம், உரை அவசியப்படாது
 • #NowPlaying அட மாப்புள்ள, சும்மா மொறக்காதே மச்சான் சொன்னாக் கேளு, SPB பூந்து வெளாடுகிறார்
 • அடுத்த #NowPlaying ‘அடி கண்ணாத்தா’, இந்த ‘சிவா’ படத்தில் எல்லாப் பாடல்களும் SPBயின் ராஜாங்கம்தான், except ஜனகராஜ் டூயட் ‘வெள்ளிக்கிழமை’
 • ’ஏர்க்கண்டிஷன் வண்டி’ என்று ஓர் இடத்தில் படித்தேன், குபுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது :))))
 • Realized I am wasting lot of time on mobile twitter, downloaded a book to read in phone. And then I am tweeting this, sigh!
 • What happens when an ATM has less cash than safe level?Does it refuse cash to every1?Or pays ‘platinum’ customers?Any1 knows the algorithm?
 • I tell @ksnagarajan ‘கொத்தனார் அமெரிக்காலேர்ந்து வந்திருக்கார்’ and my mother looks at me sympathetically@elavasam
 • Met someone from “toostep”, they specialize in recruitment solutions,nice product, quite simple& intuitive,well integrated with Social media
 • Just back from a super jolly ’employee grievances’ session with my team mates, sema arattai with HR :>>>
 • நாளை வரப்போகும் ஒருவருக்காக நானே பாதாம் அல்வா செய்திருக்கிறேன். அவர் சமர்த்தாக பஸ் ஏறினால் அல்வா சித்திக்கும் :>
 • அல்வாக்குரியவர் வந்துவிட்டார் :>
 • குளுக்கோஸ் பவுடருக்கு @nangain சூட்டியுள்ள பெயர் ‘ஜில்லு ஜீனி’ :>
 • Paes, bhupathi, boppanna ego war, என்னத்தச் சொல்ல! கிரிக்கெட்டர்ஸ் பரவாயில்லைபோல 😦
 • ஏன்தாயீ, உன் எடையைவிட கனமா வாட்ச் கட்டிருக்கியே, தடுக்கி விழுந்துடமாட்டே?#யாருக்கோ
 • வாழ்நாளில் முதன்முறையாக, எங்கேயும் எதையும் சிந்தாமல், சிதறாமல் ஸ்பூனில் சாப்பிட்டுமுடித்த@writerpara வுக்கு வாழ்த்துகள் :>
 • Going to meet lord kichami @ iskcon temple, with @writerpara
 • இஸ்கான் தரிசனம் ஆனது. நங்கைக்குப் பிடித்த பிங்க், பர்ப்பிள் நிற ஆடைகளில் கண்ணன், ராதா, பலராமன் ஜொலிப்பு :>
 • இஸ்கானில் புதுசு : சாஷேயில் கங்கா நீர் (220ml ரூ 25), பிளாஸ்டிக்கில் கில்லி தாண்டல் (நிஜமா!) & அருமையான வாழ்த்து அட்டைகள் (ரூ 5)
 • ‘தேரி மேரி கஹானி’ என்ற படத்தின் போஸ்டர்கள் நன்றாயுள்ளன, மூன்று தலைமுறைக் காதல் theme
 • Dear Sellinam, why not a ‘Save as note’ feature? It will be very useful!
 • Maiyas restaurant Bangalore uses itouch devices for order taking.Nice,but that makes the waiters focus on screen& their usual smile vanished
 • ஒரு நிமிடத்துக்கு 10 ‘probably’ பயன்படுத்தினா உன்னை எப்படிய்யா நம்பறது? :>
 • @ பார்க். பக்கத்து சீட்டில் ஒரு காதல் ஜோடி. வந்து உட்கார்ந்ததும் சத்தமாகப் பேச்சைத் தொடங்குகிறது, ‘ஆஃபீஸ்லயும் பெஞ்ச், இங்கேயுமா?’
 • iPhone charger cable Rs 1100? Poda Dei!
 • ரொம்ப போரடிக்குது. ’தேவர் மகனை ரீமேக் செய்யறாங்களாம்’ன்னு கொளுத்திப்போடுவோமா?
 • நன்றாக யோசித்துவிட்டேன், இதுதான் சரி: சிவாஜிக்குப் பதில் பிரகாஷ்ராஜ், கமலுக்கு ஜெயம் ரவி, நாஸருக்குப் பசுபதி #தேவர்மகன்ரீமிக்ஸ்
 • ’அப்பா, தூக்கமே வரலை, உன்கூட உட்கார்ந்து நானும் படிக்கட்டுமா?’ என்று புத்தகத்தோடு நடந்து வரும் மகளுக்காகப் பெரிதுவக்கிறேன்!
 • இந்த ’நளவெண்பா’வில் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு அசரடிக்கும் வரியாவது இருந்துவிடுகிறது, உம்: ‘வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கி’ 1/2
 • காதல்வயப்பட்ட பொண்ணுக்கு ராத்திரி புழுக்கமா இருக்காம், ‘இரவே, நீ சூரியனை விழுங்கிட்டுப் பிறந்ததால் இப்படி வெக்கையா?’ங்கறா! 2/2
 • //நளவெண்பா// தமயந்தி உடம்பிலிருந்து வீசும் அனல் தாங்காமல், அவள் கூந்தல் பூக்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகளின் சிறகுகள் தீய்ந்துடுதாம்!
 • //நளவெண்பா// தமயந்தி உடல் முழுக்க மன்மதன் அம்புகள் துளைத்து எரிக்க, அவள் நெருப்புக்கு நடுவே தவம் செய்வதுபோல் தெரிந்தாளாம்
 • //நளவெண்பா// ஊரே தூங்கிவிட்டது என்பதைச் சொல்வதற்கு, ‘யாழ் தாம் உள்ளுறை புகுத’ என்கிறார், யாழ்களைப் பொட்டிக்குள் வெச்சுப் பூட்டிடாங்களாம்
 • //நளவெண்பா// ‘இரவே, நீ தின்னும் இரையோ நான்?’ : தமயந்தி!
 • //நளவெண்பா// ஒரே புலம்பல்ஸா இருக்கு, ஜிவ்வுன்னு 50 பாட்டைத் தாண்டி நளன் : தமயந்தி முதலிரவுக்குப் போய்டுவோமா? :>
 • //நளதமயந்தி// முதலிரவுக் காட்சியின் முதல் பாடல், முதல் வரி ‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி’… என்னா வார்த்தைத் தேர்வுய்யா 😉
 • //நளவெண்பா// ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவர் எனும் தோற்றம் இன்றி, புனலுக்கே புனல் கலந்தார்ப்போல் வேலானும் காரிகையும் சேர்ந்தார்!
 • //நளவெண்பா// வல் ஓடும் : சூதாட உதவும் தாயக்கட்டைகள் வெட்கப்பட்டு ஓடும்படி… ம்ஹூம், சென்சார்ட், தேடிப் படிச்சுக்கோங்க 😉
 • ’Future Writer, Future Entrepreneur’ என்று ஒருவருடைய ட்விட்டர் Bio, நல்லது!
 • நேற்று சொல்ல மறந்தது, @elavasam தங்கியிருந்த அறையின் எல்லா உச்சி மூலைகளிலும் ஸ்பீக்கர்கள் தலைநீட்டியிருந்தன (Surround Sound) 1/2
 • எனக்கென்னவோ அவற்றைத் திடீரென்று பார்க்க உளவுக் கேமெராக்கள்போல் தெரிந்தது, ஜாக்கிரதை @elavasam :> #குட்நைட்
 • ஜூன், ஜூலை என்பதை நான் ரொம்ப நாள் ஜுன், ஜுலை என்றே தவறாக எழுதிவந்தேன், ’அர்ஜுனன்’தவிர வேறு எங்கேயாவது ‘ஜு’ என்ற எழுத்து பயன்படுகிறதா?
 • Found an easy way to escape telemarketing calls, just tell them you are on a roaming network& ask them to call later. They usually forget 😉
 • க்யூவில் எனக்குமுன்னே நிற்பவரின் ஜீன்ஸில் பாக்கெட் இல்லை, பாக்கெட்போல் ஓர் ஓவியம்தான் உள்ளது. எதற்கு?அவர் பர்ஸை எங்கே வைப்பார்? #கன்பூஷன்
 • பாரதிதாசனுக்குப் புலிக்கறி ரொம்பப் பிடிக்குமாம் 🙂 ‘தமிழர் உணவு’ புத்தகத்தில் வாசித்த தகவல் :>
 • பிள்ளைகளுக்கு நிலவைக் காட்டி சோறூட்டுவது ஏன்?மேலே பார்க்க உணவுக்குழாய் விரியும், உணவு எளிதாக இறங்கும் : ’தமிழர் உணவு’ புத்தகத்திலிருந்து

 

நளவெண்பாவிலிருந்து கொஞ்சம்…

 1. nchokkan
  இந்த ’நளவெண்பா’வில் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு அசரடிக்கும் வரியாவது இருந்துவிடுகிறது, உம்: ‘வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கி’ 1/2
 2. nchokkan
  காதல்வயப்பட்ட பொண்ணுக்கு ராத்திரி புழுக்கமா இருக்காம், ‘இரவே, நீ சூரியனை விழுங்கிட்டுப் பிறந்ததால் இப்படி வெக்கையா?’ங்கறா! 2/2
 3. nchokkan
  //நளவெண்பா// தமயந்தி உடம்பிலிருந்து வீசும் அனல் தாங்காமல், அவள் கூந்தல் பூக்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகளின் சிறகுகள் தீய்ந்துடுதாம்!
 4. nchokkan
  //நளவெண்பா// தமயந்தி உடல் முழுக்க மன்மதன் அம்புகள் துளைத்து எரிக்க, அவள் நெருப்புக்கு நடுவே தவம் செய்வதுபோல் தெரிந்தாளாம்
 5. nchokkan
  //நளவெண்பா// ஊரே தூங்கிவிட்டது என்பதைச் சொல்வதற்கு, ‘யாழ் தாம் உள்ளுறை புகுத’ என்கிறார், யாழ்களைப் பொட்டிக்குள் வெச்சுப் பூட்டிடாங்களாம்
 6. nchokkan
  //நளவெண்பா// ‘இரவே, நீ தின்னும் இரையோ நான்?’ : தமயந்தி!
 7. nchokkan
  //நளவெண்பா// ஒரே புலம்பல்ஸா இருக்கு, ஜிவ்வுன்னு 50 பாட்டைத் தாண்டி நளன் : தமயந்தி முதலிரவுக்குப் போய்டுவோமா? :>
 8. nchokkan
  //நளதமயந்தி// முதலிரவுக் காட்சியின் முதல் பாடல், முதல் வரி ‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி’… என்னா வார்த்தைத் தேர்வுய்யா 😉
 9. nchokkan
  //நளவெண்பா// ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவர் எனும் தோற்றம் இன்றி, புனலுக்கே புனல் கலந்தார்ப்போல் வேலானும் காரிகையும் சேர்ந்தார்!
 10. nchokkan
  //நளவெண்பா// வல் ஓடும் : சூதாட உதவும் தாயக்கட்டைகள் வெட்கி ஓடும்படி… ம்ஹூம், சென்சார்ட், தேடிப் படிச்சுக்கோங்க 😉

June 2012 : Week 2

Big Mistake … I sorted tweets in descending order instead of ascending order, Please read this post alone from the bottom, sorry for the inconvenience 🙂

 1. nchokkan
  இத்தனைக்கும் பூங்காக்களுக்கென்று இவர்கள் ஏதும் கூடுதல் tax வசூலிப்பதாகத் தெரியவில்லை. மற்ற (மா)நகராட்சிகளும் செய்யலாம்? |12/12
 2. nchokkan
  பத்துக்கு ஐந்து பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் பகுதி தனியே மணல் தீவாக இருக்கும், அவையும் நன்கு பராமரிக்கப்படுகின்றன |11
 3. nchokkan
  காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் திறந்துவைத்துவிட்டு மீதி நேரம் பராமரிப்பு வேலைகள் நடக்கும். மிக நேர்த்தியாகவே |10
 4. nchokkan
  இப்படிச் சில குறைகள் இருப்பினும், நிறைகள் அதிகம், அதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான பூங்காக்கள் தினமும் 4 மணி நேரம்தான் ஓபன் |9
 5. nchokkan
  இதேபோல், நடக்கும் வசதியுள்ள பூங்காக்களில் எல்லாம் இசை கேட்கும் ஸ்பீக்கர் வசதி இருக்கும், ஆனால் பெரும்பாலும் அவை இயங்குவதில்லை |8
 6. nchokkan
  பத்துக்கு நான்கு பூங்காக்களின் மத்தியில் Water Fountain இசைக்கு ஏற்ப நடனமாடும் குழாய்கள் இருக்கும், ஆனால் பெரும்பாலும் அவை இயங்காது 😉 |7
 7. nchokkan
  அநேகமாக எல்லாப் பூங்காக்களிலும் போதுமான அளவு பெஞ்ச்கள், தெளிவான நடைபாதை, பலர் அமர்ந்து பேசும் மேடை, புல்வெளி, பூச்செடிகள் இருக்கும் |6
 8. nchokkan
  பெங்களூருபோல் பூங்காக்களை அக்கறையுடன் பராமரிக்கும் இன்னொரு நகரம் (இந்தியாவில்) பார்க்கமுடியாது, சின்னஞ்சிறு பூங்காக்களில்கூடப் பசுமை |4
 9. nchokkan
  மரங்கள் இல்லாத வெற்று நிலங்களுக்கு ‘ஆட்டத மைதானா’ (விளையாட்டு மைதானம்) என்று அழைக்கிறார்கள், அனைத்துக்கும் கன்னடத்தில் பெயர்ப்பலகைகள் |4
 10. nchokkan
  கன்னடர்கள் இதைப் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார்கள். நான் பார்த்த எல்லா ‘உபவன’ங்களிலும் மரங்கள் இருந்தன. மற்றவை வெறும் ‘பார்க்’ |3
 11. nchokkan
  இன்றுதான் தெரிந்துகொண்டேன், அது சமஸ்கிருதச் சொல், உபவனம் = மரங்களுடன் கூடிய பூங்கா |2
 12. nchokkan
  பெங்களூரில் பல பூங்காக்களுக்கு ‘உபவனம்’ என்று (கன்னடத்தில்) பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளேன்,ஆனால் அதன் பொருள் புரிந்ததில்லை |1
 13. nchokkan
  ஃபேஸ்புக்கில் எப்பப்பார் ‘வெளிநாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று புரட்சி நடக்கிறது. ஃபேஸ்புக் உள்நாட்டுத் தயாரிப்பா என்ன?
 14. nchokkan
  ’முதல்மரியாதை’யின் ’தரும மகராசா தலயக் கவுந்தீக’போன்ற லயத்தில் ஒரு பாட்டு இயக்குனர் கேட்க, ‘சுத்திச் சுத்தி வந்தீக’ எழுதினேன் : வைரமுத்து
 15. nchokkan
  If @madhankarky writes for that ராஜா சின்ன ரோஜா tune now, he may write ‘ஒரு ஐபேடு இல்லையென்றால் பாரதம் இல்லை’ :>
 16. nchokkan
  @ a session by one Mr Amit Bansal, one fellow asks a question ‘why there are too many Bansal entrepreneurs out there?’ :)))
 17. nchokkan
  Any product managers here? Why not much is written about this skill? (when compared to project management) @ChPaiyan @eramurukan @bseshadri
 18. nchokkan
  நிதியமைச்சர் அவரிடத்தில் நாட்டை ஒப்படைத்தால் / கதிமோட்சம் உண்டா கூறு
 19. nchokkan
  முப்படைக்குத் தளபதி முகர்ஜி என்றே / ஒப்படைக்கத் தயாரிவ் வூர்
 20. nchokkan
  ஜனங்களின் அதிபதி ஜாலி பதவியாமே / கணக்கின்றிப் பயணங்கள் காண்
 21. nchokkan
  மமதாவும் யாதவும் மருவாதி இழந்தார்காண் / சமர்த்தாக பிரணாபைச் சகி
 22. nchokkan
  மங்காத்தா ஆடியும் மைசான்ஸு வரலைன்னு / சங்மா புலம்புறார் சலித்து
 23. nchokkan
  பிரதீபா பாட்டீல் பேக்பண்ணிக் கிளம்புவதால் / பிரணாபும் ரெடியானார் பார்
 24. nchokkan
  பிரணாப்பு முகர்ஜி பிரசிடென்டா ஆவதனால் / மறத்தமிழன் கலாமை மற
 25. nchokkan
  ‘மனம்கொத்திப் பறவை’ன்னா அது noun, ஒர் ஸ்பேஸ் விட்டு ‘மனம் கொத்திப் பறவை’ன்னா, முழுமை பெறாத வாக்கியம் 🙂
 26. nchokkan
  #NowPlaying இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது : என்ன பளிச்சென்று ஒரு வர்ணனை, கண்ணதாசன்ய்யா!
 27. nchokkan
  //சேதன் பகத் டிஷர்ட்// வாசகம்ன்னா சுருக்கமா இருக்கணும், சின்னக் கட்டுரையே எழுதினா முயற்சி செஞ்சு படிக்கறவனைத் தப்பா நினைக்கமாட்டாங்களோ?:>
 28. nchokkan
  #NowPlaying மதுர மரிக்கொழுந்து வாசம்… எழுதியது கங்கை அமரனா? மானோட பார்வை மீனோட சேரும்… அழகு!
 29. nchokkan
  In 80s, Tamil movies without duet songs were rare? I can think of Johny, Kizhakku vaasal, Rettai Vaal kuruvi… Anything else?
 30. nchokkan
  /ராஜாதிராஜா உன் தந்திரங்கள்/2ம்சரணத்தின் தாளம் டப்பாங்குத்துக்குரியது,ஆனால் மெட்டுமட்டும் அதே,’ராக்குமுத்து’வின் நிறைவு நிமிடம்போல வித்தை
 31. nchokkan
  #NowPlaying ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…இந்தப் பாட்டில் விசேஷமாக எதுவுமேஇல்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே 2nd interlude : WOW!
 32. nchokkan
  Daughter thinks eating mango directly is wrong, ‘அடிப்பாவி, துண்டு போட்டுத் தின்பதுதான் unnatural’ என்றேன், நம்ப மறுக்கிறாள் :))
 33. nchokkan
  Very bored @ work, asked iTunes what are the top 3 songs I played in phone till date : தூளியிலே ஆடவந்த, கேளடி கண்மணி & ஓ வசந்த ராஜா
 34. nchokkan
  Launch of a new novel, a romance story, and it’s being launched by a senior Dr in Neurosciences, Ah, I don’t want to miss this speech 😉
 35. nchokkan
  Times of India’s spiritual column ‘Speaking tree’ is now a brand by itself, they have a weekly newspaper and Spiritual Networking website 🙂
 36. nchokkan
  வெளிநாட்டவர்களின் ’ட்விட் பயோ’க்களில் செல்லப் பிராணிகளைப் பற்றிய குறிப்புகளை அதிகம் காண்கிறேன், இது என்னமாதிரி உளவியல்?
 37. nchokkan
  ட்விட்டருக்கென்றே பிறந்தவர் என்றால் இந்த ராபினு சர்மாதான், அப்புறம் தலாய் லாமா
 38. nchokkan
  ரொம்பப் போரடிக்குது, ’சாய்ந்து சாய்ந்து’ ஃபுல் வெர்ஷன் வந்தாலாவது யுவன் ஷங்கர் ராஜாவைச் ‘சாத்து சாத்து’ன்னு சாத்தலாம் :>
 39. nchokkan
  பர்ஸனல் வேலையால் ஆபீஸுக்கு 2 மணி நேரம் லேட், உறுத்தலாக இருந்ததால் அரைநாள் லீவ் போட்டேன்,‘அதெல்லாம் வாணாம்’ன்னு பாஸ் ரிஜெக்டட்,அவர் வாள்க!
 40. nchokkan
  //தேவா// ’விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி’ : மேலோட்டமாகப் பார்க்க உரைநடைமாதிரிதான் இருக்கிறது, ஆனால் மிக அழகான மெட்டமைப்பு, பாடியவிதம்!
 41. nchokkan
  டிவியில் ‘காதலே நிம்மதி’ படம் தேவாவுக்காகக் கொஞ்சம் பார்த்தேன், தூர்தர்ஷன் செவ்வாய்க்கிழமை நாடகம்மாதிரி இருக்கிறது, இப்படி இருந்த சூர்யா!
 42. nchokkan
  There is a restaurant in Bangalore called ‘Mr Soup and Mrs Salad’ … Wondering what is the story behind the name :>
 43. nchokkan
  ‘இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய பேரழகிகளில் அவளும் ஒருத்தி’ :)))))))
 44. nchokkan
  சுத்தம், ‘மாங்காய்ங்கள்’ளாம் :))))))
 45. nchokkan
  நங்கை சொல்லும் பள்ளிக் கதைகளில் கற்பனை எத்தனை சதவிகிதம்? @nangain
 46. nchokkan
  ‘எங்க க்ளாஸ் டீச்சரோட பொண்ணு வேற ஸ்கூல்ல படிக்கறாளே, ஏன்?’ என்கிறாள் @nangain எங்கே ஆரம்பித்து விளக்க?
 47. nchokkan
  ஃபோனில் யாரோ, ஏதோ கேட்டார்கள், பதில் சொன்னேன், இப்போதுதான் தெரிகிறது,அவர் பெரிய ரைட்டராம், பெயர் சொல்லாமல் பேசியபோதே ஊகித்திருக்கணும்
 48. nchokkan
  Poor me, reviewing a newsletter with no idea about marketing language, these people look at me sympathetically cc: @_tharkuri
 49. nchokkan
  Relative’s son scores 472 in SSLC& joins commerce group.Reason? ‘I need time for daily miruthangam practice,science group won’t work.’ Good!
 50. nchokkan
  ‘தொலைபேசித்தவண்ணம் உள்ளனர்’ன்னெல்லாமா எழுதுவாங்க? 😦
 51. nchokkan
  Accenture introduces Vaahini, a social network for women professionals. Hmmmm
 52. nchokkan
  இந்த வாரம் இனிப்போடு தொடங்குகிறது, அலுவலக நண்பருக்கு இரட்டைக் குழந்தை(மகள்)கள் பிறந்துள்ளனர் 🙂

சோஷியல் மீடியா ரைம் :>

 1. nchokkan
  @balaav ட்விட்டர் மாமா ட்விட்டர் மாமா எங்கே போறீங்க? ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய நானும் போறேங்க
 2. nchokkan
  @balaav ஃபேஸ்புக் மாமா ஃபேஸ்புக் மாமா எங்கே போறீங்க? ப்ளாக் எழுத ஃபீட்பேக் போட நானும் போறேங்க
 3. nchokkan
  @balaav ப்ளாக் மாமா ப்ளாக் மாமா எங்கே போறீங்க? ஃபோர் ஸ்கொயரில் மேயராக நானும் போறேங்க
 4. nchokkan
  @balaav 4ஸ்கொயர் மாமா 4ஸ்கொயர் மாமா எங்கே போறீங்க? கூகுள் ப்ளஸ்ஸில் ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணப் போறேங்க
 5. nchokkan
  @balaav கூகுள் மாமா கூகுள் மாமா எங்கே போறீங்க? நான் எங்கே போவேன், இங்கேயேதான் கிடக்கப்போறேங்க :)))))

கம்ப ராமாயணம் : பாலகாண்டத்தில் ஒரு பகுதி

 1. nchokkan
  இன்றைக்குக் கம்பன் காலை. முனிவரோடு வீதியில் நடந்த ராமனை சீதைமட்டுமா பார்த்தாள்? பலபேர் ஜொள்ளு,கம்பர் அதை அட்டகாசமாகப் பதிவு செய்கிறார் |1
 2. nchokkan
  ’இத்தனை பெண்களின் விழிகளெல்லாம் பட்டுப்பட்டுதான் ராமன் தேகம் கருத்துவிட்டதா? அல்லது அவனது கரிய நிறம் அவர்கள் கண்களில் ஒட்டிக்கொண்டதா? |2
 3. nchokkan
  இன்னொரு பாட்டில், பெண் ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள், ‘என்னை அப்படியே கைத்தாங்கலாகப் படுக்கைக்குக் கொண்டுபோ’ என்கிறாள் |3
 4. nchokkan
  ’ஏண்டி? உனக்குக் கண் தெரியாதா?’ என்கிறாள் தோழி. ‘இல்லை, நான் என் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன், இனி திறக்கமாட்டேன்’ என்கிறாள் இவள் |4
 5. nchokkan
  ’ஏன் திறக்கமாட்டாய்?’ என்று விசாரிக்கிறாள் தோழி |5
 6. nchokkan
  ’ராமனைப் பார்த்தேன், அவன் என்னை விட்டுத் தப்பித்துப் போகமுடியாதபடி கண்களுக்குள் சிறை செய்துவிட்டேன்’ என்று பதில் வருகிறது |6
 7. nchokkan
  இன்னொரு பெண்ணின் புலம்பல், ‘ராமனும் தசரதனும் வாழும் தேசத்தில் ஒருவன் இந்த அப்பாவிப் பெண்ணைத் தாக்குகிறான், நியாயமா?’ |7
 8. nchokkan
  அப்பாவிப் பெண்ணைத் தாக்கிய அந்த ‘ஒருவன்’, மன்மதன். ராமனைப் பார்த்த அவள்மேல் மெல்லிய மேனி என்றும் பார்க்காமல் மலர் அம்பு விடுகிறானாம் |8
 9. nchokkan
  இன்னொருத்தி ‘இத்தனை பெரிய இளவரசன் ராமன், இவன் ஏன் வீதியில் தனி ஆளாக நடந்து வருகிறான்?’ என்கிறாள் |9
 10. nchokkan
  ’என்னடி பேத்தல் இது? ராமனோடு முனிவர் வர்றார், லட்சுமணன் வர்றான், நீ என்னடான்னா தனியா வர்றான்னு சொல்றியே?’ |10
 11. nchokkan
  ’அவங்களையெல்லாம் யார் பார்த்தாங்க? என் கண்ணுக்கு ராமன்மட்டும்தான் தெரிஞ்சான்’ என்கிறாள் இந்தப் பெண் |11
 12. nchokkan
  ராமனைப் பார்த்தவர்களும், முழுக்கப் பார்க்கலையாம், ’தோள் கண்டார், தோளே கண்டார்’ பாடல் எல்லாருக்கும் தெரியும், அதில் டாப் கடைசி வரி |12
 13. nchokkan
  எல்லாரும் ஒரு கடவுளைப் பார்த்துவிட்டு அவர்மட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள், நிஜமான முழுக் கடவுளைப் பார்த்தவர்கள் யாருமில்லை |12a
 14. nchokkan
  ’ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ என்று முடிக்கிறார் கம்பர். நாம் யானை கண்ட குருடர்களை ஒப்பிடலாம் |14
 15. nchokkan
  இன்னொருத்தி ‘சிபிச் சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவன்தானே இந்த ராமன், குலப் பெருமையில் கொஞ்சமும் இவனுக்கு இல்லையே’ என்று இகழ்கிறாள் |15
 16. nchokkan
  சிபி புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுத்தான்,ஆனால் இந்த ராமன் எங்களிடம் இருக்கும் உயிரைப் பறித்துக்கொள்கிறான், திருப்பித் தர மறுக்கிறான் |17
 17. nchokkan
  ’நயந்தார் உய்யத் தங்கள் இன்னுயிரும் கொடுத்தார் தமர், எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகல் இவன்’ 🙂 |18/18
 18. nchokkan
  காலை நேரத்தில் கம்ப ராமாயணத்தில் எந்தப் பக்கத்தையும் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கக்கூடாது. ஆஃபீசுக்கு லீவ் போடத் தோன்றும்!

அயோத்தி மன்னன் Transition Process

 1. nchokkan
  ராமனுக்குப் பட்டம் சூட்டுவது என்று சுயமாக முடிவெடுத்தாலும், தசரதன் உடனே அதைச் செயல்படுத்திவிடுவதில்லை,அதற்கென்று ஒரு மிக நீண்ட Process |1
 2. nchokkan
  Step 2 : வசிஷ்டர் தன் சம்மதத்தைச் சொல்கிறார் |3
 3. nchokkan
  Step 3 : மந்திரிகளின் சார்பாக சுமந்திரன் சம்மதம் சொல்கிறார் (குரல் ஓட்டுபோல், ‘முக ஓட்டு’ வைத்து முடிவு : face language) |4
 4. nchokkan
  மந்திரிகள் சார்பாகப் பேசும் சுமந்திரன், ‘நீ துறவறம் போகுமுன், ராமனுக்கு முடி சூட்டிவிடு’ என்கிறார் : Sequence முக்கியம் அரசே! |5
 5. nchokkan
  Step 4 : எல்லாருக்கும் நன்றி சொல்லும் தசரதன், ‘எனக்குத் தந்த அதே ஒத்துழைப்பை என் மகனுக்கும் தரவேண்டும்’ என்று கோருகிறான் |6
 6. nchokkan
  Step 5 : ராமனை வரவழைக்கிறான். கட்டளை இடவில்லை, தன்னுடைய தீர்மானத்தைக் காரணத்துடன் சொல்லி ‘பதவியை ஏற்றுக்கொள்வாயா?’ என்று கேட்கிறான் |7
 7. nchokkan
  Step 6 : ராமன் சம்மதம் (சந்தோஷத்தில் குதிக்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை, கடமை என ஏற்றான் என்கிறார் கம்பர்) |8
 8. nchokkan
  Step 7 : தசரதன் தன் சிற்றரசர்கள் அனைவரையும் வரவழைக்கிறான், அவர்கள் கருத்தைக் கேட்கிறான் |9
 9. nchokkan
  Step 8 : அவர்கள் ‘ராமன் தகுதியான அரசன்’தான் என்று சம்மதம் சொல்கிறார்கள். தசரதனுக்கு மகிழ்ச்சி, ஆனாலும் குறுக்குக் கேள்வி கேட்கிறான் |10
 10. nchokkan
  Step 9 : ’அரசர்களே, நீங்கள் நான் சொல்வதால் சம்மதித்தீர்களா? அல்லது நிஜமாகவே ராமனுக்கு ஒத்துழைப்புத் தருவீர்களா? உண்மையைச் சொல்லுங்கள்’|11
 11. nchokkan
  Step 10 : சிற்றரசர்கள் ராமனின் பெருமைகளைப் பட்டியல் போட்டு ‘நாங்கள் எடுத்த முடிவு Rationalதான்’ என்று உறுதிப்படுத்துகிறார்கள் |12
 12. nchokkan
  Step 11 : பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்தல் Step 12 : ராமனுக்கு வசிஷ்டரின் அறிவுரைகள் எட்ஸட்ரா |13
 13. nchokkan
  இப்படி ஒரு நுணுக்கமான / கச்சிதமான / எதையும் தவறவிடாத Process இயல்பானதா? அல்லது கம்பரின் ஆசையா? வால்மீகியைப் படித்தோர் சொல்லவும் |14/14