பிள்ளையார் குண்டாதான் இருக்கணும்

 1. nchokkan
  லாண்ட்மார்க்(அ) பெங்குவின்(அ) இருவருக்கும் 25ம் பிறந்தநாள்,ரஸ்கின் பாண்ட் பெங்களூரு வந்திருந்தார்,புத்தக வெளியீடு,பேச்சு,கேக் வெட்டல் |1
 2. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// எளிமையாக இருக்கிறார், மிக எளிமையாகப் பேசுகிறார், வெள்ளந்திச் சிரிப்பு, 1950களில் இருந்து எழுதுகிறார் |2
 3. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// இந்த கூட்டத்துக்கு வந்திருந்த பலர் அவரது நெடுநாள் வாசகர்கள்,அவர் எழுதத் தொடங்கி பல வருடங்கள் கழித்துப் பிறந்தவர்கள் |3
 4. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// ஒவ்வொருவரும் அவரது வெவ்வேறு புத்தகங்களை, கதைகளை, சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டிக் கொண்டாடினார்கள் |4
 5. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// ஆச்சர்யமான விஷயம், இதில் பல புத்தகங்கள் இப்போது அச்சில் இல்லை, இத்தனை நாள் நினைவு வைத்திருந்து பாராட்டினால்… |5
 6. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// அதுதானே ஓர் எழுத்தாளருக்கு எப்பேர்ப்பட்ட பெருமை! அத்தனை பாராட்டையும் அவர் எளிய புன்னகையுடன் ஏற்றார் |6
 7. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// குழந்தைகள், அவர்மீது விழுந்து பிடுங்காத குறை, ஒரு சுட்டி ‘நீங்க ஏன் குண்டா இருக்கீங்க?’ என்று முதல் கேள்வி :)) |7
 8. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// அதற்கு அவர் ’பிள்ளையார் குண்டா இருந்தால்தானே அழகு?’ என்று பதில் சொன்னார் 😉 |8
 9. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் மிசௌரி சென்றபோது, அவருடைய வீட்டைத் தேடியிருக்கிறார்கள், அட்ரஸ் கொண்டு அல்ல |9
 10. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// அவர் தனது கதைகள், கட்டுரைகளில் எழுதிய அடையாளங்களை வைத்தே அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துமிருக்கிறார்கள் |10
 11. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// இன்னும் சிலர் அவரது கதைகள் நிகழும் இடங்களுக்கு (பெரும்பாலும் ரயில் நிலையங்கள் 😉 நேரில் சென்று அனுபவித்துள்ளனர் |11
 12. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// ஃபிக்‌ஷன் எழுத்தே அருகி வரும் நிலையில், இப்படி ஒரு தீவிர ஃபிக்‌ஷன் ரசிகர் படையைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது |12
 13. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// கேள்வி கேட்ட ஒருவர் ‘ஞான பீட விருது ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய எழுத்துக்கும் தரப்படவேண்டும்’ என்றார் |13
 14. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// அதற்கு ர.பா. சொன்ன பதில் அபாரம்,‘ஆங்கிலத்தில் எழுதுவோருக்குப் பல விருதுகள் உள்ளன,ஏன் Regional Writersமேல் பொறாமை?’ |14
 15. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// பின்னர் அவர் தனது கவிதை(ஓடாதீர்கள்)ப் புத்தகத்தை வெளியிட்டார், ஒரு சுமார் கவிதையைப் படித்தார் |15
 16. nchokkan
  //ரஸ்கின் பாண்ட்// எந்த அலட்டலும் இல்லாமல் மொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார், அவரது எழுத்துதான் காரணம் |16/16
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s