July 2012 : week 3

 • #NowPlaying ‘பழமுதிர் சோலை’யில் ‘ச்’ வரக்கூடாதுதான், ஆனாலும் நல்ல பாட்டு
 • #NowPlaying ‘மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே, நான் சொல்லும் பாடலெல்லாம், நீ தந்த யாசகமே!’ எழுதியது வாலிதானே?
 • #NowPlaying ‘இளவட்டம் கை தட்டும்’, சரணத்தில் எங்கிருந்தோ தயக்கமாக எட்டிப் பார்க்கும் சமர்த்துப் பையன்போல் SPBயின் குரல்.. ஆஹா! ஆஹா!
 • ‘மை டியர் மார்த்தாண்டன்’ is one fantastic album! Boy, this Raja literally ran a ‘brilliance factory’ those days, mass producing quality!
 • And, Rahman fans can say he hand crafts goods, making more fame, money in the process :>
 • நங்கை வகுப்பில் தினம் விளக்குகளைக் கவனித்து Off செய்யவேண்டுமாம். இந்தப் பொறுப்புக்குப் பெயர் ‘எலக்ட்ரிக் லீடர்’ராம், அடங்கொக்கமக்கா!
 • #NowPlaying நெஞ்சத் தொட்டு ஆளும் ராசய்யா
 • Someone develop a ‘rudeness check’ plugin for MS outlook, it is much more important than Spell Check and grammar check!
 • நெடுநாள் சந்தேகம், பார்க்கில் உட்கார்ந்திருக்கும் எல்லா ஜோடிகளும் ஃபோனில் மணிக்கணக்காக அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள்?
 • 4 ஜோடியில் ஒன்று மாடம் செருகின லாப்டாப்புடன். வங்கிபோல் ஃபேஸ்புக்கில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்து அப்’டேட்’ செய்கிறார்களோ?
 • நங்கையின் பள்ளித் தோழி 2நாள் லீவ்,’உன் நோட்ஸைக் காபிசெஞ்சு தா’ என்று காலி நோட்டைக் கொடுத்திருக்கிறாள்,இதுவும் உட்கார்ந்து எழுதுது #ஏமாளி
 • பில்லா2 வெற்றியா, தோல்வியா என்று யாரும் ஜெயமோகனைக் கேட்கவில்லையா? ஆச்சர்யம்தான்
 • #NowPlaying ’வானெங்கும் தங்க விண்மீன்கள்’ பாட்டை ஒருவாட்டி கேளுங்கள், ‘கண்ணே கலைமானே’வின் வெளிச்சத்தில் காணாமல் போன நிஜ நிலா
 • சமையல் நிகழ்ச்சிகளில் சமைப்பவர் அருகே நிற்கும் தொகுப்பாளினிகள் வில்லுப்பாட்டில் பின்னே உட்கார்ந்து ‘ஆமா’ போடுவோரை நினைவுபடுத்துகிறார்கள்
 • மேங்கோ தொக்காம், அதே மீட்டர்ல மாங்காய்ன்னு சொன்னா கொறஞ்சுபோய்டுவியா தாயீ?
 • ஆ! சமைத்துக்கொண்டே பாட ஆரம்பித்துவிட்டார். பாட்டு முடிவதற்குள் தொக்கு ரெடியாகிவிடுமாம், லாஜிக்!
 • டாக்டர்கள் எல்லாரும் (வழுக்கையர் உள்பட) அழகாயிருப்பது எப்படி?
 • மாடிப்படிக்குப் பதில் ‘மச்சுப்படி’ என்கிறார் ஒருவர், அழகான வார்த்தை!
 • சாவி ஆரம்பத்தில் போர்ட் எழுதும் வேலை பார்த்தார், இளைஞர் என்பதால் யாரும் நம்பிப் புது ஆர்டர் தரவில்லை,ஒரு தந்திரம் செய்தார் 1/3
 • தெருவில் நடப்பது,எங்கேனும்போர்டில் எழுத்துஅழிந்திருந்தால் உளளேபோய் அதை நிரப்பிவதாக சொல்வார்,ஒப்புக்கொள்வர்,அப்படியே clientbase பெருக 2/3
 • ஒரு பத்திரிகை ஆபீசில் அப்படி எழுதித் தந்த போர்டுக்குக் காசு தராமல் இழுத்தடிக்க, பதிலுக்கு வேலை கேட்டார், எழுத்தாளரானார் 3/3
 • ‘எங்க சின்ன ராசா’ பாடல்களுக்கு லிரிக்ஸ் யார்? தாவணிக்கு விளக்கம் சொல்லும் வரி ரசனையோடு உள்ளது :>
 • ‘இருவரும் ஒருவர் தம்மின் வென்றிலர், தோற்றிலார்’ : ராவணன், சுக்ரீவன் சண்டை drawல் முடிந்ததைக் கம்பர் சொல்வது :>
 • அங்கதனைத் தூது அனுப்பும்போதே லட்சுமணன் மறுக்க, ‘இது சும்மா உல்லுலாக்காட்டிக்குதான்’ என்பதுபோல் கோடி காட்டுகிறான் ராமன் 1/2
 • அங்கதனுக்கும்சமாதானத்தில் விருப்பமில்லைபோல,ராமன் சொன்ன சேதியைப் பத்தாக்கி ராவணனை அவமானப்படுத்திச் சீண்ட,தூது வெற்றிகரமான தோல்வி,போர் 2/2
 • உருப்படியா ஒரு வேலை செய்யும்போதுதான் மொக்கை மீட்டிங்குகள் வழிமறிக்கும்
 • 57000 rupees for a bicycle? Wow!
 • Dei, face it, you can’t interview people, you don’t know how to #note_to_self
 • In a meeting about how to conduct interviews. People are sharing really funny stories, Complex equations, emotions flowing 🙂
 • #NowPlaying வானம் நமக்கு வீதி… யுவன் ஷங்கர் ராஜா நல்லாப் பாடியிருக்காப்ல!
 • கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது,இந்தக் கொம்பு இல்லாக் காளையிடம் வம்பிழுக்காது… சூப்பர்! லிரிக்ஸ் யாரு?பஞ்சுவா? @kanapraba
 • தமிழ்ல ‘அண்டர்’அச்சீவர்ன்னா இந்திரன்தான்! #fb
 • இன்று படித்த கம்பன் பாட்டு, ராவணனை அடித்து அவன் கிரீடங்களைப் பறித்து வந்த சுக்ரீவனை ராமன் பாராட்ட, அவன் சொல்லும் பதில்: ’கிரீடமா முக்கியம்? அவனுடைய தலைகளை பறிக்காமல் விட்டுவிட்டேனே, வெறுங்கையோடு வந்தேனே!’ அதே சேதிதான் இங்கேயும் 🙂
 • செம காத்து!!!! #ஆடி #அம்மி
 • ‘Sure’ means many things, to many people!
 • டேய், திரும்பத் திரும்ப எத்தனைவாட்டிடா அதையே சொல்றது? #யாருக்கோ
 • பக்கத்து வீட்டில் ஒருவர் authentic செட்டிநாட்டுப் பலகாரங்களைக அங்கிருந்தே கூரியர்மூலம் வரவழைத்து விற்கப்போகிறாராம். அவர் வாழ்க!
 • உப்பிட்டு என்றால் உப்புமா, ஒப்பட்டு என்றால் போளி… கன்பூஷன்ஸ் ஆஃப் கன்னடா
 • அமர்:சண்டை,அமர்க்களம்:போர் நிகழும் இடம்,கம்பன் இப்படிதான் பயன்படுத்துகிறான்,நாம் சொல்லும் பாராட்டு ‘அமர்க்கள’த்துக்கும் இதே அர்த்தம்தானா?
 • Learnt today : seems பயன்படுத்தும்போது to be அவசியமில்லை, Seem எனும்போது to be அவசியமாகிறது. Thanks @Ethirajans and @elavasam
 • Talking to my neighbor who runs a trading company with annual turnover 150Crores.He wants to learn computer, email etc.,why not twitter Sir?
 • உடனடித் தேவை : பஸ்ஸில் சுற்றியிருப்போரைப் பற்றிக் கவலைப்படாமல் ஸ்பீக்கர் போட்டுப் பாட்டுக் கேட்போரின் ஃபோன்களை முடக்கவல்ல ஒரு வைரஸ்
 • ஓர் எழுத்தாளர் தன் கதை அச்சுக்கோத்தபின் ப்ரூஃப் ரீடிங்கின்போது மார்ஜின்களில் இன்னொரு மடங்கு எழுதுவாராம்,இணையத்தில் பலர் அப்படி என என்ஊகம்
 • ‘எண்பதுகளில்’ என்று எழுதுவார்கள், ஆனால் எஸ். ரா. ’1981களில்’ என்று எழுதுகிறாரே, என்ன அர்த்தம்?
 • #NowPlaying அன்னமே எந்தன் சொர்ணமே, உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே, கன்னமே மதுக் கிண்ணமே, அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
 • கங்கை அமரன் நல்ல கவிஞரா என்று தெரியாது, ஆனால் சொல் அழகு புரிந்த பிரமாதமான பாடலாசிரியர். சாட்சிக்கு ’இந்த மான்’ பாட்டுமட்டுமே போதும்!
 • @writerpara நம் நண்பர் ஒருவர் ‘சுமார் 24.37 கிலோ’ என்று எழுதுவாரே 😉
 • வேற்று மொழி Idioms, Phrases, Special Usagesஐயெல்லாம் தமிழில் மொழிபெயர்த்தால் சகிக்காது., இணையான தமிழ்ப் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம் 1/2
 • உதாரணமாக, is it rocket science? என்பது ‘அது பெரிய ராக்கெட் செலுத்தும் அறிவியலா?’ என்பதைவிட ‘கம்ப சூத்திரமா?’என்றால் அதிகம் ருசிக்கும் 2/2
 • தமிழுக்குப் புதுப் பயன்பாடுகள் அவசியம், அவை மொட்டை மொழிபெயர்ப்புகளாக இருக்கலாகாது. பல பழந்தமிழ் பயன்பாடுகளையே இப்போது காணோம்
 • ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுவதன் அவஸ்தை இது. தமிழில் நல்ல வார்த்தைவளம், கலாசாரப் புரிதலை வளர்த்தால் நன்றாயிருக்கும்
 • என் டைம்லைனில் எல்லாரும் நோலன், நோலன் என்கிறார்கள். ராமருக்கு உதவிய வானரப் படைத் தளபதிகளில் ஒருவராக இருக்குமோ? :>
 • எனக்குத் தெரிந்த batman ஒரு சூப்பர் ஹீரோ, பெயர் சச்சின் :>
 • #LalbaghNatureWalk அற்புதமாக இருந்தது. அங்குள்ள செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகளில் சிலவற்றை மிக எளிமையாக விளக்கிச் சொன்னார்கள் |1
 • #LalbaghNatureWalk Botany/ Zoology படிக்காத, ஆனால் இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட இருவர் 3 மணி நேரம் எங்களை அற்புதமாக நடத்திச் சென்றனர் |2
 • #LalbaghNatureWalk இந்தச் சில மணி நேரங்களில் கற்றது சொற்பம்தான், ஆனால், மரங்களும் பிராணிகளும் நம்மைவிட புத்திசாலிகள் என்பதுணர்ந்தோம் |3
 • #LalbaghNatureWalk முக்கியமான விஷயம், இந்த நிகழ்ச்சி planned agenda எதுவும் இன்றி மிக இயல்பாக நடத்தப்பட்டது, உதாரணமாக |4
 • #LalbaghNatureWalk நிகழ்ச்சி நடத்தியவர் காலில் ஒரு பூச்சி ஊர்ந்தது. சட்டென்று அதைக் கையில் எடுத்து விளக்க ஆரம்பித்துவிட்டார் |5
 • #LalbaghNatureWalk பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பறவையின் குரல் கேட்டது, சட்டென்று அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார் |6
 • #LalbaghNatureWalk இப்படி randomஆகச் சென்றாலும், அத்தனை சுவாரஸ்யம், ஒரு நிமிடம்கூடப் போரடிக்கவில்லை. காரணம், |7
 • #LalbaghNatureWalk ஒவ்வொரு மரத்தின் தன்மை, இலை, பட்டை, பூ, காய், கனி, அது எந்த நாட்டிலிருந்து வந்தது, அதுபற்றிய மத நம்பிக்கைகள்… |8
 • #LalbaghNatureWalk அந்த மரம் வளரத் துணைபுரியும் பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், அவ்வப்போது பொது அறிவுத் துணுக்குகள் |9
 • #LalbaghNatureWalk தகவல்கள் மேலோட்டமாக இன்றி, ஆழமாகவும், அதேசமயம் போரடிக்காமல் கதை போலவும், தேவையான டெமோவுடனும் இருந்தன |10
 • #LalbaghNatureWalk இதற்காக அவர்கள் ஓர் இலையைக்கூடப் பறிக்கவில்லை, காய், பழம் என எல்லாமே கீழே உதிர்ந்திருந்தவற்றை வைத்தே விளக்கினர் |11
 • #LalbaghNatureWalk எனக்கு ரொம்ப பிடித்தவை, அத்திப்பழத்து ஆண், பெண் குளவிகளின் சோகக் கதை, அத்திப்பழம் ஏன் அசைவப் பழம் 😉 |12
 • #LalbaghNatureWalk தொட்டால் சிணுங்கிச் செடி எப்படிச் சிணுங்குகிறது? ஹைதர் அலி நட்ட மாமரம் இப்போதும் பழுப்பது உண்மையா? |13
 • #LalbaghNatureWalk பெங்களூரின் மிக உயரமான மரம் எங்கே இருக்கிறது? இளம் பூக்கள் வண்ணமயமாகவும் முதிர்ந்தவை மங்கியும் இருப்பது ஏன்? |14
 • #LalbaghNatureWalk அசோகமரத்தைப் பெண்கள் காலால் உதைப்பது ஏன்? கண்ணன் பால் குடித்தது எந்த மரத்து இலையில்? |15
 • #LalbaghNatureWalk அஞ்ஞாதவாசத்தின்போது பாண்டவர்கள் ஆயுதங்களை மறைத்துவைத்த மரம் எது? Venom, Poison என்ன வித்தியாசம்? |16
 • #LalbaghNatureWalk கற்பூரம் எந்த மரத்திலிருந்து வருகிறது? அது இப்போ ரசாயனமானது ஏன்? குங்குமம்? ‘குரங்குப் புதிர்’ என்ற மரப்பெயர் ஏன்? |17
 • #LalbaghNatureWalk பறவை இறக்கைக்கும் பேன்ட் ஜிப்புக்கும் என்ன சம்பந்தம்? இசைக் கருவிகளைச் செய்யப் பலா மரம் பயன்படுவதேன்? |18
 • #LalbaghNatureWalk ’Sausage Tree’ மரத்தின்கீழ் காரை நிறுத்தக்கூடாது, ஏன்? ஒரு மரத்தை இன்னொரு மரம் கழுத்தைப் பிடித்து நெரிப்பதேன்? |19
 • #LalbaghNatureWalk ’சல்லே ஹன்னு’ பழத்தின் சுவை என்ன? நீல விதை கொண்ட தாவரம் எது? பச்சை எறும்பு எது? Rain Treeக்கு அந்தப் பெயர் ஏன்? |20
 • #LalbaghNatureWalk இதெல்லாம் தெரியணும்ன்னா, அணுகுக : http://www.ecoedu.in/ 🙂 |21/21
 • இன்றைய #LalbaghNaturalWalk நடத்தியவர்கள் Ulhas Anand and T. S. Srinivas
 • காலை நேர லால்பாக் இதுதான் முதன்முறை பார்க்கிறேன். அருமையான காற்று, எங்கு நோக்கினும் நடப்போர், ஓடுவோர், குன்றேறுவோர்
 • ‘சூர்யோதயம் ஒரு சிறுமியாகி, ஸ்கூல் யூனிஃபார்மில் போவது போல’ என்று இன்றைய முதல்வரின் பால பருவத்தை வர்ணிப்பவர் ஆர்? #க்விஸ் :>
 • லாண்ட்மார்க் : பழைய பொம்மையைத் தந்து சக்கரம் சுற்றினால் அதிர்ஷ்டப் பரிசு. சேகரிக்கப்படும் பொம்மைகள் ஏழைக் குழந்தைகளுக்குச் செல்லும்
 • வென்றவர் தோற்பர்,தோற்றவர் வெல்குவர்,நின்றவர் தாழ்வர்,தாழ்ந்தோர் உயர்குவர்: அட,’வாழ்க்கை ஒரு வட்டம்டா’ டயலாகுக்கும் கம்பர்தான் ஒரிஜினலா?:>
 • வைரமுத்துவின் புகழ் பெற்ற ‘தெய்வம் தந்த பூ’ என்ற வரி முதன்முதலில் இடம் பெற்றது ஒரு ராஜா பாட்டில்தான். தெரியுமா? அது எந்தப் பாட்டு? #க்விஸ்
 • #NowPlaying ‘சின்னச் சின்னச் சொல்லெடுத்து’ யேசுதாஸ் குரலில் சூழலுக்கேற்ற இரக்கமே இல்லை, ஏதோ காதல் பாட்டுபோல் பாடிப்போகிறார், அதனால் 1/2
 • ஜானகி tail enderருடன் ஆடும் விவிஎஸ் லஷ்மண்போல் பாரஞ்சுமக்கிறார் 2/2
 • Disney has released a book about Rahul Dravid. Good, but Disney??
 • #NowPlaying ‘அரச்ச சந்தனம்’… பல வருடங்கள் கழித்துக் கேட்கிறேன், மெட்டிலும், spb குரலிலும் என்ன ஒரு ஃப்ரெஷ்னஸ்!
 • #க்விஸ் ‘சூர்யோதயம் ஒரு சிறுமியாகி, ஸ்கூல் யூனிஃபார்மில்’ என இன்றைய முதல்வரின் பால பருவத்தை வர்ணித்தவர், வாலி
 • #க்விஸ் ‘தெய்வம் தந்த பூ’ என்ற பதம் இடம் பெற்ற ராஜா பாடல், ‘ஓ மானே மானே மானே’ (வெள்ளை ரோஜா) இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை :>
 • ’சின்னத் தம்பி’ போன்ற ஒரு படத்துக்கு வைரமுத்து என்ன பாடல் வரிகளை எழுதியிருப்பார் என்று யோசிக்கிறேன். சிரிப்பு வருகிறது 🙂
 • ’நான் நல்ல பொண்ணு’ என்று சொல்லிவிட்டு, ஒரு pause விட்டு ‘தானேப்பா?’ என்கிறாள் சின்னவள் :>
 • ’அப்படிதானே?’ என்று கேட்கத் தெரியவில்லை, ‘தானே’ என்பதைத் தனிக் கேள்வியாக்கிவிடுகிறாள். மழலை இலக்கணம்
 • ஃபேஸ்புக்குக்குப் பின்னணி இசை அமைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், ராஜாவாவது ரஹ்மானாவது… எஸ். ஏ. ராஜ்குமார்தான் பொருந்துவார்!
Advertisements

July 2012 : Week 2

 • கவிமணி ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ நூலில் ‘துப்பட்டா’ என்று ஓர் ஆடையின் பெயர் வருகிறது. இன்றைய சுரிதார் துப்பட்டாவா அது?
 • Feeling human, no no, feeling sleepy
 • Ok. Mission today : visit http://news.google.com , search for ‘federer’, read all results, drink coffee when tired
 • கலைஞர் டிவியில் தான்சேன் சிவாஜி விளக்குகளைக் கோபமாக முறைத்து முறைத்தே எரியச்செய்கிறார்
 • பேசுவது மானம், இடை பேணுவது காமம் : ராவணனிடம் கும்பகர்ணன் #கம்பன்டா
 • My wife’s conclusion, EMails are junk, SMSes are WIN
 • Age certifications for books? Now, that’s very interesting! Wondering which of my favorite books will get an A or U or UA or XXX rating 😉
 • இன்று அலுவலகத்திலிருந்து வீடு வரும் வழியில் சிமென்ட் ரோட்டில் ஒரு பாம்பு விறுவிறுவென்று குறுக்கே ஊர்ந்தது. இதுவரை 20 பேரிடம் சொல்லிவிட்டேன்
 • ஒரே பிரச்னை, யாருமே ஆச்சர்யப்படமாட்டேன் என்கிறார்கள். திடீரென்று நகரத் தெருவில் பாம்பு எதிர்ப்படுவது எத்தனை விநோதம்!
 • திருப்பதி சென்று வந்த @schokkan எனக்கான லட்டைக் கூரியரில் அனுப்பியிருப்பதாக அறிகிறேன். அவர் வாழ்க!
 • கூரான பென்சிலைவிட, லேசாக மழுங்கிய பென்சில்தான் அடிக்கோடிட வசதி #வெட்டியாராய்ச்சி
 • இந்த அஷ்வினி ஹேர் ஆயில் அஞ்சு லிட்டர் கேன்களில் கிடைக்காதா?
 • ‘அப்பா, நம்ம செடிக்குத் தண்ணிமட்டும் போதுமா? டெய்லி என்னோட காம்ப்ளான்ல கொஞ்சம் அதுக்கு ஊத்தட்டுமா? வேகமா வளருமே’ என்கிறாள் சின்னவள் :>
 • மனைவியார் ‘நாங்க ஃபேஸ்புக் வாங்கியிருக்கோம்,6000ரூ ஆச்சு’ என்கிறார் யாரிடமோ.யம்மாடி,அது ஃபன்புக். ஃபேஸ்புக்கை வாங்கப் பல கோடி தேவைப்படும்
 • ஒரு தம்ளர் நிறைய லஸ்ஸியை மனைவியார்மீது ஊற்றினேன் #ஊப்புகள்
 • #NowPlaying மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ… எங்கும் துளி பிசிறில்லாத perfect song!
 • ராஜா எங்கே, எதற்காக, என்ன உணர்வுகளைத் தூண்ட வீணையைக் கையிலெடுக்கிறார் என்று யாராவது ஆராய்ச்சி செய்யலாம்
 • any சக விசிறிகள் for the lovely swarnalatha melody ‘ஒனப்பத்தட்டு புல்லாக்கு வாங்கித்தர்ரேன் ராசய்யா’?
 • Oops, vasan eye care is selling discount coupons for eye surgery. Medical field is becoming FMCG??
 • Suddenly, Chrome has become the most used app in my phone. Safari was good, but Chrome is amazing when it comes to user experience |1
 • People hate typing in phone. speed in which Chrome (Rightly)guesses the URL I am trying to type, makes it much better than Safari / Opera |2
 • Chrome’s sync with other devices is another lovely feature, I am a Chrome fan for life 😉 |3/3
 • Thillumullu dialogues by Visu. Who would’ve thought Rajni : Visu combo will click so superbly (another Rajni : Visu combo : Mr. Bharath)
 • A subordinate goes on maternity leave for 6 months, Wants to be ‘in touch’ with IT @ her convenient time, Not sure what to suggest her!
 • பில்லா2: சூப்பர் என்பர் சிலர்,தேறாது என்பர் சிலர்,ஹிட்டென்பார் சிலர்,துட்டில்லை என்பார் சிலர்,ஸ்டைலென்பார் சிலர்,வெறும் நடையென்பார் சிலர்
 • என் முந்தின ட்வீட் பில்லா2 ‘பார்த்து’ எழுதிய விமர்சனம் என்று நம்பப்போகும் அப்பாவிகள் பலர் ட்விட்டரில் உளர், அது அவசியமே இல்லை என்பதுணரார்
 • இன்று தெரிந்துகொண்ட புதுச்சொல் : கூவம் = ஒழுங்கான வடிவம் இல்லாத கிணறு
 • ‘திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும்’ என்கிறார் கம்பர். திமிங்கிலம் தெரியும், அதென்ன திமிங்கிலகிலம்? 1/2
 • திமி : ஒரு வகை மீன். திமிங்கிலம் : திமியை விழுங்கக்கூடிய பெரிய மீன். திமிங்கிலகிலம் : திமிங்கிலத்தை விழுங்கக்கூடிய பெரிய்ய்ய மீன் 2/2
 • புரட்சிகர பாலிஸியாகத் தொடங்குபவை சடங்குகளாகச் சென்று முடிவதைச் சிறுகதையாக எழுதிப் புலம்பவா, கட்டுரையாக்கவா? டில்பர்ட்போலச் சிரிக்கவா?
 • #NowPlaying ‘காதல் கசக்குதய்யா’ அஸால்ட்டா சிக்ஸரடிக்கறதுன்னா இதான்!
 • ‘காதல் கசக்குதய்யா’ முடிஞ்சதும் ‘ஜனனி ஜனனி’ ஆரம்பிச்சா என்னய்யா அர்த்தம்? :>
 • #NowPlaying தத்தித் தரிகிட தரிகிட ததிங்கிணத்தோம்!
 • #NowPlaying விலைவாசி போலே விஷம்போல ஏறும் இந்தப் பாடல்! Of course, it does!
 • Yet another song where SPB does Malaysia, and wins! ஆடி மாசம் காத்தடிக்க
 • திட்டுவதற்காகவேனும் இணையத்தவர்கள் எல்லாப் படங்களையும் முதல் நாளே பார்த்துவிடுகிறார்கள்போல. திரைத் தயாரிப்பாளர்களுக்கு புது மார்க்கெட்!
 • அம்மா, ஆடு, இலை, ஈ, உரல், ஊதல், எறும்பு, ஏணி, ஐவர், ஒட்டகம், ஓணான், ஔவை, எஃகு
 • A new snack bar @ Bangalore. Name? Brindavana Bonda Bazaar. Of course!
 • ‘ம்யூசிக் டைரக்டர் பேட்டி’ என்று அட்டையில் அறிவிக்கிறது கல்கி. ‘இசை அமைப்பாளர்’ என்ற வார்த்தைக்கு என்ன குறைச்சல்??!
 • ஹரியண்ணாவுடன் 4 மணி நேரம் கம்ப ராமாயண அரட்டை! Thanks to @jeeves_k
 • ஹரி கிருஷ்ணன் போன்றோரைச் சந்திக்கும்போதுதான், நம் வாசிப்பு எத்தனை அற்பம் என்று புரிகிறது, துளி அலட்டல் இல்லாத பேச்சு, தெளிவு, நேர்மை!
 • மல்லேஸ்வரத்தில் அருகருகே இரு தியேட்டர்களில் நான் ஈ, பில்லா2 படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. விடுமுறை தின மாலை எனினும், இரண்டிலும் ஈயோட்டல்தான்
 • மல்லேஸ்வரத்தின் ‘சம்பிகே சாலை’ பல மாடி ஷாப்பிங் மால் ஒன்றை அப்படியே படுக்கவைத்தாற்போலிருக்கிறது. மலிவு விலையில் தமிழகமே கிடைக்கிறது
 • //மல்லேஸ்வரம்// கிருட்டினா ஸ்வீட்ஸ் எதிர்ப்பட்டால் மைசூர் பா வாங்கலாம் என்று பார்த்தேன். காணோம்
 • கேடிவியில் தர்மத்தின் தலைவன். ரஜினி மீண்டும் தோன்றும் காட்சியில் சுஹாசினி மயங்கி விழ, தென்மதுரை வைகை நதியை அதிஆவேசமாகப் பாய வைக்கும் ராஜா
 • கம்பெனிகாள், டிஷர்ட்டில் QR பொம்மை அச்சிடுவது மிக நல்ல innovative ஐடியாதான். ஆனால் தயவுசெய்து ஆண்கள் டிஷர்ட்டோடு நிறுத்திக்கொள்ளவும்
 • #NowPlaying நாத்து நடும் வேளையிலே பாட்டு ஒண்ணு வேணும், பாட்டுக்குள்ளே மாமனுக்கு சேதி சொல்லவேணும்
 • ‘சின்ன வீடு’ வெச்ச பய எப்படி ‘வெள்ள மனம் உள்ள மச்சான்’ ஆவான்? #டவுட்டு
 • ‘என் உயிர்த் தோழன்’ ஆல்பம் மொத்தமும் ஆயிரம் கம்ப ரசமேதான், சிநேகிதன் படமுன்னா ராஜாவுக்குத் தனி அக்கறை!
 • டிகேசி ‘வட்டத் தொட்டி’ நடத்திய காலத்தில், குற்றாலம், கன்னியாக்குமரி என்று ஊர் ஊராக முகாமிட்டுக் கம்பனைச் சேர்ந்து படிப்பார்களாம்!
 • அரை நூற்றாண்டுமுன் ரசிகமணி கல்கியில் கம்பரை விளக்கியபோது ‘பாட்டு வேணாம், உரைமட்டும் எழுதுங்க’ என்பார்களாம் வாசகர்,இப்போதும் அதே நிலைமை 🙂
 • //பாட்டு வேணாம், உரைமட்டும்//இதற்கு ரசிகமணி சொல்லும் உவமை ‘கன்றுக்குட்டி ஓட்டமாக ஓடும்,ஆற்றில் தண்ணீரைக் கண்டதும் பக்கென்று நின்றுவிடும்’
 • ’டிகேசி கடிதங்கள்’ என்ற புத்தகம் வாசிக்கிறேன், முந்தைய, அடுத்த ட்வீட்கள் பல அதிலிருந்து சுட்டவை #டிஸ்க்ளெய்மர்
 • //டிகேசி கடிதங்கள்// 1941ல் கச்சேரியில் யாரும் தமிழ்ப் பாட்டுப் பாடுவதில்லை, தமிழில் பாடுவோருக்கு 10000 பரிசு அறிவித்தார் அண்ணாமலையார்
 • //டிகேசி கடிதங்கள்// ’கம்பர் கடல், சாதாரணக் கடல் இல்லை, நம்மோடு கண்ணாமூச்சி ஆடும் கடல்’ என்கிறார், என்ன உவமை! பிரமிக்கிறேன்

July 2012 : Week 1

 • ‘போர் செய்தி’ என்றால் ‘சண்டை புரிவாய்’ (செய்தி வினைச்சொல்) ஒரு ‘ச்’ சேர்த்து ‘போர்ச் செய்தி’ என்றால் ‘சண்டைபற்றிய செய்தி’ (பெயர்ச்சொல்) :>
 • ஹிந்தி விளம்பரங்களைத் தமிழில் முழிபெயர்க்கும் புத்திசாலிகளே, குறைந்தபட்சம் ‘பன்ட்டி’மாதிரியான பெயர்களையாவது மாற்றித் தொலையுங்களேன்‪
 • #NowPlaying‬ பூவிலே மேடை நான் போடவா… IMO Raja’s bestest short song
 • #NowPlaying‬ ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’.. பாடல் முழுக்க அளபெடை(?) போன்ற நீட்டிப்புகள் நிறைய… இதயம்ம்ம்ம் இளமைஐஐஐ கங்கைஐஐஐ
 • ‘என்ன சமையலோ’வில் மனோரமாவுக்குப் பின்னணி பாடுவது யார்? சுனந்தாவோ? ‘அடியே மோகனா, அடுப்படி எனக்கென்ன சொந்தமா?’
 • ‘கண்ணிமையில் தூண்டில் இட்டு’ன்னு எழுதறார்ய்யா, இவரைப்போய் ‘சாமியாரு’ங்கறாங்களே!
 • ‪#NowPlaying‬ ‘முல்லை அரும்பே, மெல்லத் திரும்பு’… ரசிகர்களுண்டா? 🙂
 • Federer Survives to play yet another QF, May be a SF too 🙂
 • நானும் ‘பில்லா 2’ ட்ரெய்லர் பார்த்தாச்சுய்யா. என்னை ட்விட்டர்லேர்ந்து தள்ளிவெச்சுடாதீங்க!
 • சின்ன மகள் படிக்கப் பழகுகிறாள். கண்ணில் படுவதையெல்லாம் எழுத்துக் கூட்டுகிறாள். அம்மாவின் ஃபோனைப் பார்த்து ‘நோக்கய்யா’வாம் :>
 • கேளிர் = உறவினர், கேளீர் = கேளுங்கள் … நீங்கள் என்ன சொல்லவந்தீர்கள்?
 • #NowPlaying‬ ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரத் தேங்கா, இங்க பாருங்கோ நார்த்தங்கா முத்தின மாங்கா #ஹௌபொயட்டிக்!
 • In the first quarter of 2012, EBooks generated $282 million in sales, compared to $230M for print : Association of American Publishers. Wow!
 • Publishers are already marketing test books digitally, before print edition. readers’ feedback will be incorporated into the print version
 • In Tawna Fenske’s romantic caper “Getting Dumped”, readers can choose which of three suitors they want the heroine to pursue ‪#ebooks‬
 • Previous 3 tweets are from a lovely WSJ article
 • Ordered a tamil book online from a famous literary publication, paid, no book came, repeated phone calls, no use 1/2
 • one Facebook message, book delivered. Social media much more efficient, even @ literary publications 🙂 2/2
 • There is a mobile app for mosquito removal thro vibrations 🙂 ‪#really‬
 • நங்கையின் பரத நாட்டிய வகுப்புக்கு புது யூனிஃபார்ம், ஜீன்ஸ் பேன்ட். பலே!
 • ஏழெட்டு வயதுப் பிள்ளைகளின் ஆகப் பெரிய சவாலாக இருப்பது, Monkey Bars!
 • ’நாளைக்கு அஞ்சப்பர்ல டீம் டின்னர்’ என்று அழைத்தார் அலுவலக நண்பர். ’அடியேன் சைவம், யு பீப்பிள் என்ஜாய்’ என்றேன்
 • #ARivumathiSongs‬ நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே, செம்பூவே பூவே, சுட்டும் சுடர்விழி, ஆலோலங்கிளித் தோப்பிலே, மன்னன் கூரைச் சேலை, வந்தேமாதரம்
 • ‪#ARivumathiSongs‬ அத்தினி சித்தினி, கண்ணுக்குள்ள கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி, முத்தமிழே முத்தமிழே
 • #ARivumathiSongs‬ உதயா உதயா உளறுகிறேன், மாலை என் வேதனை கூட்டுதடி, விழியும் விழியும் உரசும்போது
 • ‪#ARivumathiSongs‬ பொய் சொல்லக்கூடாது காதலி
 • ‪#ARivumathiSongs‬ A HUGE collection http://arivumathiayya.blogspot.in (Link via @arasu1691 )
 • #ArivumathiSongs ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ பாட்டுல ‘ஒத்தயில போகும் ஒத்தயடிப் பாத உச்சந்தல வகுடாச்சே, உச்சி மல ஏறும் வண்டித் தடம் போல ரெட்ட ஜட விழுதாச்சே’,excellent!
 • #ArivumathiSongs‬ லிஸ்ட் பார்த்து வியப்போருக்கு ஒரு விஷயம், அநேகமாக அவர் ஆங்கிலம் கலந்து பாடல் வரிகளை எழுதியதே இல்லை
 • ராத்திரியில் ஒரு மணி நேரம் ட்விட்டரைத் தவிர்த்தால் முழுசாக 75 பக்கம் படிக்கமுடிகிறது. புத்திக்குத் தெரியுது
 • ‘அடியேன்’ என்ற அற்புதமான வார்த்தையின் பணிவுப்பொருளை அசிங்கப்படுத்துவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்
 • ’தட்டுமுட்டு சாமான்’ என்பதற்கு என்ன அர்த்தம்? கொச்சை மொழி என்று நினைத்தேன், கம்பரில் வருகிறது (அனுமன் அடிக்க) ‘தட்டு முட்டு ஆடின தலைகள்’
 • ஒரு பெரிய தொழிலதிபரின் சுயசரிதை படிக்கிறேன். சற்றே நீளமான Marketing Brochure 😉 1/3
 • நான் இப்படியாக்கும்,அப்படியாக்கும் என பக்கத்துக்கு பக்கம் அலட்டும் இவர் இந்த புத்தகத்தை எழுதியபின் ஏமாற்று கேஸில் மாட்டி சிறைசென்றவர் 2/3
 • அந்த ஞானத்துடன் இதைப் படித்தால் சிரிப்போ சிரிப் 3/3
 • இன்று தெரிந்துகொண்டது : கடு = விஷம். ‘கடுத்த கண்டன்’ (விஷக் கழுத்தன்) என்று சிவனைப் பாடுகிறார் வள்ளலார். கடுகடுப்பும் அவ்வாறே
 • ராவணன் வீரம் காமத்தால் மாசுபட்டதை ‘கொச்சை ஆண்மை’ என 2சொற்களில் முடித்துவிடுகிறான் அனுமன்.’சொல்லின் செல்வன்’என்று ராமன் சும்மாவாசொன்னான்?
 • சரோஜாதேவி இன்னும் சற்று கண் மை பூசினால் முகமூடிமாதிரி ஆகிவிடும்
 • காட்டில் வசித்த ராமர் எப்பவும் ப்ளேட் விளம்பர மாடல்போல க்ளீன் ஷேவராக இருப்பது எப்படி? :ராமானந்த சாகர் ராமாயண சீரியல்பற்றி ஆர்.கே. நாராயண்
 • Logged a support request with Videocon. Immediately got SMS with name, phone number of the person who will be working on our issue. Nice!
 • ‪#NowPlaying‬ ‘Chittu TV’, Kannada version of ‘Chutti TV’
 • A friend (in IT) says his company has a rigid policy of 40 hours a week work. If anyone works beyond 40 hours, their manager gets a warning
 • காலச்சுவடு பத்திரிகையில் ‘கோலிவுட்பஜ்.காம்’ இணைய தளத்துக்கு விளம்பரம் தருவோரின் உளவியல் என்னவாக இருக்கும்?
 • ஆரும் என்னோடு பேச வராததால், நான் பாட்டு லிஸ்ட் போடப்போறேன், ‪#HoneymoonSongs‬
 • #HoneymoonSongs‬ யார் யார் யார் அவர் யாரோ, புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, வனிதாமணி வன மோகினி
 • ‪#HoneymoonSongs‬ காதல் ஒரு கண்ணில் காமம் மறுகண்ணில் இதுதான் தேனிலா (வைரமுத்து!)
 • ‪#HoneymoonSongs‬ ’பூங்காற்று உன் பேர் சொல்ல’ … ஹனிமூன் பாட்டா அது? நினைவில்லை!
 • ‪#HoneymoonSongs‬ உன் அழகுக்குத் தாய் பொறுப்பு
 • ‪#HoneymoonSongs‬ ம்ஹூம், எல்லாப் படத்துலயும் ஹீரோ, ஹீரோயினுக்குக் கடைசிக் காட்சில திருமணம் பண்ணா எப்படிய்யா ஹனிமூன் சாங்க்ஸ் வரும்
 • ஒரு கார்ட்டூன் பார்த்தேன். வகுப்பில் ஆசிரியர் கேட்கிறார், ‘ஸ்மைலீஸ்தவிர வேறு இடங்களிலும் செமிகோலன் பயன்படும் என்று யாருக்குமே தெரியாதா?’
 • Just got a mail “Buy Genuine Facebook Followers in Bulk” ‪#Serious‬
 • சந்த அழகு மிகுந்த கம்பன் பாட்டு ஒன்றை நங்கைக்கு வாசித்துக்காட்டினேன். ‘அஸ்கு லஸ்கா பாட்டுமாதிரி இருக்குப்பா’ என்றாள்
 • ’என் அழகு கண்ணின் மணி, உன் அழகு பொன்னின் மணி’ என்பதையெல்லாம் ‘லிரிக்ஸ்’ என்று எழுதித் தருவோருக்குக் கூசாதோ?!
 • ‪#NowPlaying‬ பூசைக்கேத்த பூவிது … சித்ராவுக்கு முதல் டூயட் கங்கை அமரனுடன், who would have thought!!
 • ஓவியர் ஜெயராஜின் தம்பிக்கு அவர் தந்தை ‘ஹரிச்சந்திரன்’ என்று ஆசையாகப் பெயர் வைத்தாராம், சர்ச் பாதிரியார்கள் அதை ஏத்துக்கலையாம் (இந்துப் பெயர்) |1/2
 • ஆகவே, ‘ஹாரி’ என்று சட்டப்படி பெயரைப் பதிவு செய்து, வீட்டில் ’ஹரி’ என்று அழைத்தார்களாம் :))) |2/2
 • ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ பாட்டின் ஹம்மிங் பகுதியைமட்டும் கவனித்துக் கேளுங்கள். ஒரு முழுப் பாட்டுக்குரிய அக்கறை அதில் தெரியும்
 • Ah, 14 years completed since I joined my first job, will I get ‘Pattabhishekha’ now? :))
 • குப்பை = குவியல். ரத்தினக் குப்பை, செல்வக் குப்பை
 • Who wrote ‘Chinna veedu jaaggiratha’ song? Neat and crisp, funny and to the point! (Answer : Chinna Konar, Got it via @kavi_rt)
 • நண்பர் மின்னஞ்சல்.’அமெரிக்க பயணம். 20+ மணி எப்படி ஓட்டுவது என கவலை,உங்க புத்தகம் படித்தேன்,இரண்டே பக்கங்களில் தூக்கம் வந்துவிட்டது.நன்றி’
 • ‘இவளொரு இளங்குருவி’ is a rough draft, and ‘எங்கிருந்தோ இளங்குயிலின்’ is the final version. Stunning orchestration for a soso situation!
 • ‘ச்சலக்கு ச்சலக்குச் சேல’ன்னா என்னதான் அர்த்தமாயிருக்கும்?
 • ஜிக்கிமணாளன் ஏ. எம். ராஜா இசையமைத்த பாடல்களைப்பற்றிப் பேச இதுவே உகந்த தருணம்!
 • என் கட்சி:பெயர்ச்சொல்லில் கிரந்தம் இருப்பின் உரியவர் அனுமதியுடன்மட்டுமே திருத்தலாம்.மற்ற சொல்களில் இருப்பின் சொல்லை மாற்றலாம்,எழுத்தையல்ல
 • பல நூற்றாண்டுகளுக்குப்பின் நாளை காலை தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருப்பதால்…
 • Years that are divisible by 100 are not leap years? Never knew that! ‪#facepalm‬ (But years that are divisible by 400 are leap years)
 • Leap year rule : Year divisible by 4 AND (Not divisible by 100 OR divisible by 400). By this rule, 1896, 1904, 2000 leap years, 1900 is not
 • பலாப்பழம் 60 ரூ, அறுத்துச் சுளை பிரித்துத் தர 20 ரூ, நூறுக்கும் மேற்பட்ட சுளைகள் கிட்டின
 • ஆஹா! தேன் பலா, செம டேஸ்ட் :> எங்கள் வீட்டுக்கு வந்தால் கிடைக்கும் :>>>>
 • ஜெயநகர் பயணம். மற்ற வேலைகள் கிடக்க, மையாஸில் காஃபி, ஓமப்பொடி உண்டு :>
 • பெரியவளுக்கு விளையாட Hula Hoops வாங்கித் தந்தேன்.சின்னவள் குக்கர் கேஸ்கட்டை எடுத்துக்கொண்டு ‘என் பொம்மைக்கு இது ஹூலா ஹூப்ஸ்’ என்கிறாள் 🙂
 • #NowPlaying‬ தூரி தூரி மனதில் ஒரு தூரி. இளைய தளபதியின் அம்மாவுக்கு ஆஷா,சாதனாபோல் வடக்கத்தி குரல்,ஒரே வித்தியாசம்,சுத்தமான தமிழ் உச்சரிப்பு
 • #NowPlaying‬ மணக்கும் சந்தனமே… 90s ராஜாவைக் கவனிக்காதவர்கள் தேடிக் கேட்கவேண்டிய அட்டகாசமான பாட்டு (படம்: தர்மா)
 • #NowPlaying‬ ஹோலி ஹோலி ஹோலி… ட்ரம்ஸும் தபேலாவும் பாக்யராஜ் ஆட வசதியாக ஸ்லோமோஷனில் தவழ்கிறது, ஆளுக்கேத்த தாளம் என்றால் இதுதான்
 • ‘காட்டுவழி போற பொண்ணே’க்கும் ‘குண்டுமணி குலுங்குதடி’க்கும் பத்துப் பதினைந்து வித்தியாசங்களே உள
 • Ticketing system @ post office, no crazy queue, not being thrown table to table, all streamlined by technology. Good!
 • SPB sings like Malaysia Vasudevan in ‘Oru Poovanathila’. Wondering why!
 • பொருத்தமாகத் தலைப்பு வைத்தல் : அழிந்துவரும் ஆய கலைகளில் ஒன்று (சேலைக்கல்ல)
 • #NowPlaying‬ ‘இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்?’ Prelude, பல்லவி, அனுபல்லவி, சரணங்கள், Interludes என பிரித்துப்பார்க்க முடியாத injection moulded song!
 • சிறு டீக்கடைகளுக்கு வரும் இளம் பெண்கள் விடுதியிலிருந்தே சொந்தக் கோப்பையைக் கொண்டுவருவது ஒரு நல்ல பழக்கம். ஆண்களும் பின்பற்றலாம்!
 • ஹரிவன்ஷ்ராய் பச்சனின் ‘மதுஷாலா’ படிக்க ஆரம்பித்தேன்.என் தக்கனூண்டு ஹிந்தி ஞானத்துக்கே இதன் அழகு பிடிபடுகிறது, ஆனால் முழுக்கப் புரியலை 1/2
 • யாராவது மதுஷாலாவைத் தமிழில் வடித்துத் தந்தால் நன்றாயிருக்கும். வாலி பலவிதங்களில் பொருந்துவார் 😉 2/2
 • Infibeam wants me to review the books I bought a week back. I don’t read THAT fast, buddy :>
 • அடியேன் இன்று மதியம் 12 முதல் லாண்ட்மார்க்கில் இருப்பேன். ரசிகர்கள் கட்டவுட்டுக்கு ஏற்பாடு செய்யலாம்
 • Conflict of interest : what’s the Tamil equivalent? ‪#wondering‬
 • //Landmark Annual Sale// இன்று முதல் தவணையாகச் சென்றுவந்தேன். வழக்கம்போல் ரூ 49, 99, 199 புத்தகக் குவியல்களே சுவாரஸ்யம்
 • //Landmark Annual Sale// சென்ற வருடம் வெளிநாட்டுப் பத்திரிகைகளை 50 ரூபாய்க்கு விற்றனர், இந்த வருடம் ரூ 60
 • //Landmark Annual Sale// ஆங்காங்கே சில தமிழ்ப் புத்தகங்களும் தென்பட்டன. பொன்னியின் செல்வன் 3ம் பாகம்மட்டும், ரூ 49
 • //Landmark Annual Sale// ’Indian History, for kids’ என்ற நல்ல புத்தகம் 50% தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆனால் முதல் பாகத்தைக் காணோம்
 • //Landmark Annual Sale// இங்கு செல்வோர் பழைய புத்தகங்களின்மீது பாய்வது நல்லது, புதியவை ஆன்லைனில்தான் நல்ல விலை
 • //Landmark Annual Sale// புத்தகங்களைவிட, Video CDக்களில்தான் சிறந்த ஆஃபர், all VCDs ‘Buy 3 @ Rs 99’. சகல மொழிப் படங்களும்
 • //Landmark Annual Sale// டிவிடிகள் 20 முதல் 50% தள்ளுபடியில். ஒலக சினிமாக்கள் உள்பட
 • //Landmark Annual Sale// நான் என் மகள்களுக்குப் பிடித்த ‘Noddy’ VCDகள் அனைத்தும் தலா ரூ 33க்கு வாங்கினேன், ஒரிஜினல் விலை தலா ரூ 199
 • //Landmark Annual Sale// ஆடை ரகங்கள், Home Furnishing items அனைத்தும் 70% விலை குறைத்துத் தள்ளிவிடுகிறார்கள், ஆர்வமுள்ளோர் முந்துக
 • //Landmark Annual Sale// எனக்குத் தெரிந்து இந்த சேலில் நாள் ஆகஆகப் புத்தகங்கள் விலை குறையும்,கடைசிநாள் பெரும்பாலானவை ரூ 49க்குக் கிட்டும்
 • லாண்ட்மார்க்கில் பில் போடக் காத்திருந்தபோது கவனித்தது, பத்தில் 9 பேர் ரசீதைக் கவனிப்பதோ சரிபார்ப்பதோ இல்லை, தப்பு கண்ணுங்களா!
 • //Landmark// என் முதுகுப்பையை Baggage counterல் தந்தால் வாங்கிக்கொள்ள மறுத்தனர், ‘உள்ளே கொண்டு போலாம் சார்’ என்றார்கள் <Contd>
 • //Landmark// ’முதுகில் கனமான பை இருந்தால் என் shopping experience will be poor’ என்றேன், ’பரவால்ல சார், கொண்டுபோங்க’ என்கிறார்கள் <Contd>
 • //Landmark// வாங்க வருகிறவனுக்கு இந்த அற்ப சவுகர்யங்களைக்கூடச் செய்து தராவிட்டால் ஆன்லைன் வெப்சைட்களுக்குதான் லாபம் என்பதறிக
 • அட, சொல்ல மறந்தேனே, //Landmark Annual Sale// வீட்டுக்குள் Bar அமைப்பதற்கான பாத்திரங்கள், உபகரணங்கள் அனைத்தும் 70% தள்ளுபடியில் 😉
 • பெங்களூரில் ‘நான் ஈ’ தமிழ் அல்லது தெலுங்கு போஸ்டர் இல்லாத சுவர்கள் மிக அபூர்வம். சம்பந்தப்பட்ட தியேட்டர்களிலும் நல்ல கூட்டம் #அவதானிப்
 • குழந்தைகளுக்குக் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்தச் சொல்லிக்கொடுங்கய்யா, ஸ்கூல் பாடமெல்லாம் அப்புறம்
 • மழையில் வாக்கிங் போய்ச் சரித்திரத்தில் இடம் பிடிக்க நினைத்தேன். குடையை எடுத்துப் பிரிப்பதற்குள் நின்றுவிட்டது
 • முத்து காமிக்ஸின் அடுத்த பிரமாண்ட இதழ் 400+ பக்கங்கள், முழு வண்ணம், விலை ரூ 400 #சூப்பரு

June 2012 : Week 4

 • பீட்ரூட் துருவிக்கொண்டிருந்தேன். அதிலிருந்து வழியும் சாறைக் காட்டி, ‘மெதுவாத் தேய்ப்பா, பீட்ரூட்க்கு வலிச்சு அழுது!’ என்கிறாள் மகள்
 • ’கதுப்பு’ என்றால் கன்னம் என்று அர்த்தமாம்.மாம்பழத்தின் இருபக்கத் துண்டுகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டியவன் பெரிய ரசிகனாகதான் இருக்கவேண்டும்
 • இன்று ட்விட்டரில் ஏதோ பிரச்னை கிளம்பி அடங்கியதாகத் தெரிகிறது. பகல் நேரத்தில் டைம்லைனை அதிகம் பார்க்காமலிருப்பதன் பலன்களில் இதுவுமொன்று!
 • கராச்சி பிஸ்கோத்துண்கிறேன். பாகிஸ்தான் வாழ்க! அந்த நாட்டின் பேரைச் சொல்லி இந்திய ஹைதராபாதில் இதைத் தயாரிப்போரும் வாழ்க!
 • பெரிய புராணம் பாடிய சேக்கிழாரின் நிஜப் பெயர், ‘அருண்மொழி’ #இன்றுஒருதகவல்
 • Teaching @NangaiN what செல்வன், செல்வி, திரு, திருமதி means. Now she is listing all செல்வன்s, செல்விs, திருs & திருமதிs she knows
 • நங்கைக்கு இன்றுமுதல் பெரிய புராணக் கதைகள் ஆரம்பம். அடுத்த 63 டின்னர்களுக்குப் பிரச்னையில்லை!
 • நம்மவரில் வரும் ‘வாத்தியங்கள் இல்லாத’ பாடல் ராஜா இசை என்று அறிகிறேன் :soundcloud.com/sridhar-gs/s… (Link via @tpkd_ ) |1
 • எனக்கு இந்த (நம்மவர்) பாடல் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதேபோல் ’மாயாபஜார்’ என்ற படத்தில் ராஜா முயன்ற ‘பொறந்து வந்தது’ பாடலும் |2
 • என்னைப் பொறுத்தவரை தமிழில் வாத்தியங்கள் இல்லாமல் வந்த ஒரே நல்ல பாட்டு என்றால், ரஹ்மானின் ‘ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல’தான் |3/3
 • அதெப்படிய்யா அவரை நேர்ல பார்த்தவங்க ஒருத்தர் பாக்கியில்லாம ‘ராஜா சார் ரூம் கோயில்மாதிரி’ன்னே சொல்றீங்க? #டெம்ப்ளேட் 😉
 • இன்று கற்றுக்கொண்ட புது வார்த்தை : உஞற்றுதல் = முயற்சி செய்தல்
 • இன்று தெரிந்துகொண்ட சொல் : நாதஸ்வரம்/ நாகசுரத்துக்குத் தமிழ்: ‘ஏழில்’ (7 சுரங்கள் தோன்ற இடமான கருவி) Ref: திருவெம்பாவை ‘ஏழில் இயம்ப’
 • ஒருத்தன் காதல்வயப்படுகிறான். அவளை நினைத்து ஏக்கப் பெருமூச்சுடன் விழுந்து கிடக்கிறான். அதைப் பார்த்த இன்னொருவன் இப்படிப் பாடுகிறான்: |1
 • என்னாச்சு இவனுக்கு? இவன் தன்னோட உயிரைப் பெருமூச்சுங்கற அம்மியில வெச்சு அரைக்கறானே! |2
 • ஆனா, அம்மியில் அரைக்கப் பொருள்மட்டும் போதுமா, அது குழையறதுக்கு அப்பப்போ நீர் விடணுமே? |3
 • அதுவும் உண்டு. பெருமூச்சு எனும் அம்மி, அதுல உயிர்தான் தேங்காய், பொட்டுக்கடலை, அதை அரைக்கறதுக்கு நீர், அவளோட நினைவு / காதல் |4
 • இத்தனையும், அரை விருத்தத்தில் சொல்லிவிடுகிறான் கம்பன். சுந்தர காண்டத்தில் சொல்லப்படும் ராவணனின் காதல் அது |5
 • காவிஅம் கண்ணி (சீதை) தன்பால் கண்ணிய காதல் நீரால், ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு (ராவணன்) அரைக்கின்றான்! #கம்பேன்டா |6/6
 • பிரபலங்கள் ஸ்கூல்பிள்ளைகளைப்போல் சண்டையிடும்போது,மிக முதிர்ச்சி,தெளிவுடன் சானியாஎழுதியுள்ள இக்கடிதம்ஆசுவாசமளிக்கிறது goo.gl/fb/6LB0f
 • சானியா தெளிவாக எழுதுகிறாரேஎன்று ஆச்சர்யப்படுவது ஆணாதிக்கம் அல்ல,மீடியா அவர்மீது சுமத்திய கவர்ச்சிபொம்மை பிம்பத்துக்கு அவரும்ஒத்துழைத்தார்
 • இக்கடிதம் பேசுவது ‘சண்டை’கள்குறித்த அருவருப்பைமட்டுமா?பெண் சாதனைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன (அ) மிகைப்புகழ்ச்சியால் ஒதுக்கப்படுகின்றன
 • சானியாவை ஸ்டெஃபியுடன் ஒப்பிட்டு ‘இவர் ஒண்ணும் பெரிசா சாதிக்கலை’ என்கிறோம். ஆனால் ப்யாஸ், பூபதியின் டபுள்ஸ் வெற்றிகளை அங்கீகரிக்கிறோம்
 • சானியா டபுள்ஸில் ஜெயித்தால், அது அவர் பார்ட்னரின் திறமையால் என்கிறோம். ‘சானியா வெறும் set property’ என்றவர்கள் உண்டு
 • இந்தக் கடிதம் சானியாவின் PRO எழுதியதாகவே இருக்கட்டும், அது கேட்கிற ‘நாக்கைப் பிடுங்கிக்கொள்’ கேள்விகள் மிக நியாயமானவை. அவ்வளவே
 • ஆஃபீஸ் வரும் வழியில் ஒரு ப்ளே ஸ்கூல். அங்கே தினசரிக் காட்சி, கேட் அருகே மரத்தடியில் ஒளிந்தபடி உள்ளே தயக்கமாக எட்டிப்பார்க்கிற சில தாய்கள்
 • நான் ஏன் ‘நுனி’யை ‘நுணி’ என்றே உச்சரிக்கிறேன்? #facepalm
 • #NowPlaying ‘கவிதை கேளுங்கள்’ a song with so many twists and turns!
 • #NowPlaying கட்டி வெச்சுக்கோ எந்தன் அன்பு மனச… மலேசியா வாசுதேவன் தி க்ரேட்!
 • Social Media Gender Balance – Women Like Pinterest, Twitter, Men Like Reddit, Google+ … I am VERY surprised 🙂
 • #NowPlaying ‘துள்ளித் துள்ளிக் குதிக்குது நெஞ்சம் நீ அருகே வந்து நின்றால்’ (இந்தப் பாட்டு எத்தனை பேருக்குத் தெரியுதுன்னு பார்க்கலாம்!)
 • ‘ஓய்வெடு நிலவே’ பாட்டுல ஒரு காமெடி, ‘கடைவரை நான் உந்தன் கூட வருவேன்’னு ஒரு வரி வரும் :))))
 • Just finished reading Amar Chitra Katha’s comic version of Ruskin Bond stories Blue Umbrella & Angry River. Very good!!
 • Dear Google, please name one of your Android versions as ‘Masaal dosai’
 • All bank ads in india only have northie faces, isn’t it some form of racism? :-S
 • Testing an Recruitment app, feels strange to ‘apply’ to a company where I am working for past 9 years 🙂 that too with my office mail ID :))
 • Tamil Publishers, music sellers have a phone number in their products, but |1
 • when we contact them, 90% of them don’t know anything about their own products, except popular ones |2
 • Also they talk as if we are disturbing them, ‘இவன் எப்படா ஃபோனை வைப்பான்’ish tone |3
 • They don’t consider customer service / prospect / lead management as part of their business at all! |4/4
 • நண்பர் அபார்ட்மெண்ட்க்கு MLA வருகை. எல்லாரும் குறை சொல்ல, அவர் கூலாக ‘இங்கே 300 ஓட் இருக்கு, போன எலக்‌ஷன்ல 15 ஓட்தான் பதிவானது’ என்றாராம். Even politicians using data / analytics / BI?
 • இன்றைய பாடல் : நான் பேச வந்தேன், சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
 • Google Chrome Browser for iPhone? I want one, please!
 • In this social age, there are some event management companies who ask you to call a phone number and register. Grow up, Guys!
 • நேபாளத்துலேர்ந்து ஒரு கிரிக்கெட் டீம் வருதா? எதுக்கு? சச்சின்கூட கஷ்டப்பட்டு அந்த 100வது 100 அடிச்சு முடிச்சாச்சே!
 • பெப்ஸி, கோககோலாவில் 10 மில்லி ஆல்கஹால் இருக்குன்னு ஒரு டுபாக்கூர் மெயில். 10 மில்லி ஆல்கஹால் பெப்ஸியைவிட காஸ்ட்லி இல்லையோ? :>
 • @elavasam மாத்’திரை’ என்றால் 48 இஞ்ச் எல்சிடி டிவியா? :>
 • Pinterest is a great tool. But it’s categories are very few and hence, their recommendation engine is Junk!
 • பெற்றோரே, பிள்ளை ஸ்கூல் பஸ் ஏறிய மறுநொடி திரும்பி வீட்டுக்குள் ஓடுவதேன்? பஸ் தெருமுனை திரும்பும்வரையாவது குழந்தைக்கு உங்கள் டாட்டா அவசியப்படுவது புரியாதா?
 • What are the best ways to manage ‘wait time’? It’s impossible to make it 0,but how to make customers feel good abt waiting?Your experiences?
 • I have only 3 rupees in my purse. Need to go to ATM. Suddenly someone comes & repays the money they owe me. Thank god for keeping me lazy :>
 • Just read an article where a 10 year old girl says ‘when I grow up, I want to be a great writer like Chetan Bhagat’. Sigh!
 • #NowPlaying கோயில் காளை … This album has some fantastic songs, in case you missed them due to ‘captain’ factor 😉
 • #NowPlaying magic journey…. Usha Uthup didn’t sing much in Tamil? Malgudi suba took her place, huh?
 • #NowPlaying செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ.That strategic pause between both interludes and respective charaNams, Wow
 • Someone should make an ARivumathi playlist, such a consistency, that too in தூய தமிழ்
 • #NowPlaying நில்லாத வைகையிலே, நீராடப் போகையிலே, சொல்லாத சைகையிலே, நீ ஜாடை செய்கையிலே…
 • Multigrain is the new buzzword in food industry.Biscuits,soup,bread,Atta.. Except mineral water& ice cream, all other items claim to have it
 • எங்கு பார்த்தாலும் ‘ரூபாய் மதிப்புக் குறையுது’ன்னு கட்டுரைகள், அப்டீன்னா என்ன அர்த்தம்? இந்த அற்பனுக்கும் புரியறாப்ல ஏதாவது விளக்கம்?
 • காந்தியை ‘Bapu’ என்பார்கள். இதைத் தமிழில் எப்படி எழுதுவது? ‘பாபு’ என்றா? ‘பாப்பு’ என்று எழுதினால் குஷி விஜய், ஜோதிகா ஞாபகம்
 • கோகுலத்தில் நான் எழுதிவரும் ‘இயங்குவது எப்படி?’ தொடர் ஜூலைமுதல் ஆங்கில கோகுலத்திலும் வருகிறது. வாய்ப்பிருந்தால் வாசிக்கவும். நன்றி
 • இன்று ரெண்டு அபூர்வமான புத்தகங்கள் பழைய புத்தகக் கடையில் தலா ரூ 20க்குக் கிடைத்தன #பேரின்பம்
 • Just finished reading the amazingly creative comicbook ‘DIY Dentistry& other alarming inventions’ by Andy Riley.This guy mustbe an engineer!
 • ராஜு முருகன் படத்துக்கு யார்ய்யா ம்யூசிக்? இளையராஜாவா இருக்காதுன்னு தெரியும், ஜிவிபிரகாஷ்ன்னு சொல்லிடாதீங்க
 • வெண்பாமைத் தெலுங்குக்குக் கொண்டுசென்ற @rgokul வாள்க வாள்க
 • @rgokul @rsgiri பஜ்ஜியும் வடையும் பாதாம் அல்வாவும் / லஜ்ஜையின்றித் தின்னத்தான் லைஃபு
 • ஒரே நேரத்தில் 60+ ஸ்டம்புகள் நட்டு,யார்யாருக்கு வீசுகிறார்கள்,யார்யாரைக் கேட்ச் பிடிக்கிறார்கள் என்பதே புரியாத 20+ கிரிக்கெட்போட்டிகள் |1
 • 20+ கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் ஒரு விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நடக்கிறேன். எல்லா மொழிகளிலும் வம்பு, வழக்குகள் |2
 • விக்கெட் கீப்பர் கையில் ஒரு பேட்டைத் தரும் அட்டகாசமான யோசனையை யார் கண்டுபிடித்திருப்பார்கள்? |3/3
 • இன்று காஞ்சிபுரம் இட்லி சித்தித்துள்ளது :>
 • ’தாரே ஜமீன் பர்’ ஏன் இன்னும் தமிழில் வரவில்லை என்கிறார் மனைவியார். உங்களுக்குத் தெரியுமா?
 • கோவையின் பிரபலமான ஏ1 சிப்ஸ் என் மகள்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பெங்களூருவில் ஒரு கடையில் கிடைத்துக்கொண்டிருந்தது, இப்போது இல்லை 😦
 • தமிழில் மரபுக் கவிதை எழுத விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் : ‘கவி பாடலாம்’ By கிவாஜ. Free download : http://www.tamilvu.org/library/nationalized/pdf/46.KI.VA.JA/KAVIPAADALAM(119).pdf
 • நம்ம மூமா வேலையை ஆரம்பிப்பமா? #NowPlaying ’சரிகமபதநி சொல்லித்தர்றேன், ஒருவாட்டி’
 • Parents trying to ‘perfect’ their kids’ craft works, are hurting their creativity AND self confidence at the same time
 • மொட்டை மாடியில் பிய்த்துதறும் காற்று #NowEnsoying
 • ’தமிழில் மளிகைப் பொருள்கள் லிஸ்ட் கிடைக்குமா?’ என்று கஸின் கேட்கிறார். யாராவது உத்தமர்கள் எக்ஸெலில் எழுதிவைத்திருக்கிறீர்களா?
 • ரெடிமேட் மளிகை சாமான் லிஸ்ட் : ட்விட்டர் நண்பர்கள் அனுப்பியதில் ரொம்பப் பிடித்தது இது : https://docs.google.com/spreadsheet/ccc?key=0ArpO9YC4iJ3ZdDd4a1pZY2RPcnl6R0lkTGk2dGM5eXc#gid=0
 • மளிகை சாமான் லிஸ்ட் கேட்ட கஸினுக்கு ட்விட்டர் நண்பர்கள் தந்ததை அனுப்பினேன். ‘அட! ட்விட்டர்ல எல்லாரும் நல்ல பசங்கபோல’ என்று வாழ்த்தினார்:)
 • ஆடைகளை முன்வைத்துப் பாட்டெழுதும் பழக்கம் (எகா: பாவாடை தாவணியில் பார்த்த உருவமா) வழக்கொழிந்துவிட்டதா? இன்னுமுள்ளதா?
 • ’இனிமேல் புத்தகங்களைப் படித்த இடத்திலேயே போட்டுவிட்டுப் போனால் தூக்கி எறிந்துவிடுவேன்’ என்கிறார் மனைவியார். இதென்ன அராஜகம்?
 • நான் எழுதிய ‘மென்னுலகம்’ தொடர் புத்தகமாக வந்துள்ளது. மதி நிலையம் வெளியீடு. பதிப்பகத்தார் மொழ நீளத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளனர்!
 • என்னுடைய ’மென்னுலகம்’ தொடர் புத்தக வடிவில். மதி நிலையம் வெளியீடு. ஃபோன் : 04428111506 http://pic.twitter.com/YvKf5mxl
 • @vrsaran பொதுவாகத் தானே தேர்ந்தெடுத்த எதுவும் மனைவிக்குப் பிடிக்காமல் போகாது, இதில் கணவனும் உண்டு :> @amas32
 • கிசுகிசுவாகக்கூட எழுதமுடியாத ஆப்வியஸ் வம்புகளை என்ன செய்து தொலைக்க?
 • ’எதையும் எதற்கும் எக்சேஞ்ச் செய்யலாம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்ததுமுதல் மனைவியாரின் நடவடிக்கைகள் சரியில்லை