July 2012 : week 3

 • #NowPlaying ‘பழமுதிர் சோலை’யில் ‘ச்’ வரக்கூடாதுதான், ஆனாலும் நல்ல பாட்டு
 • #NowPlaying ‘மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே, நான் சொல்லும் பாடலெல்லாம், நீ தந்த யாசகமே!’ எழுதியது வாலிதானே?
 • #NowPlaying ‘இளவட்டம் கை தட்டும்’, சரணத்தில் எங்கிருந்தோ தயக்கமாக எட்டிப் பார்க்கும் சமர்த்துப் பையன்போல் SPBயின் குரல்.. ஆஹா! ஆஹா!
 • ‘மை டியர் மார்த்தாண்டன்’ is one fantastic album! Boy, this Raja literally ran a ‘brilliance factory’ those days, mass producing quality!
 • And, Rahman fans can say he hand crafts goods, making more fame, money in the process :>
 • நங்கை வகுப்பில் தினம் விளக்குகளைக் கவனித்து Off செய்யவேண்டுமாம். இந்தப் பொறுப்புக்குப் பெயர் ‘எலக்ட்ரிக் லீடர்’ராம், அடங்கொக்கமக்கா!
 • #NowPlaying நெஞ்சத் தொட்டு ஆளும் ராசய்யா
 • Someone develop a ‘rudeness check’ plugin for MS outlook, it is much more important than Spell Check and grammar check!
 • நெடுநாள் சந்தேகம், பார்க்கில் உட்கார்ந்திருக்கும் எல்லா ஜோடிகளும் ஃபோனில் மணிக்கணக்காக அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள்?
 • 4 ஜோடியில் ஒன்று மாடம் செருகின லாப்டாப்புடன். வங்கிபோல் ஃபேஸ்புக்கில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்து அப்’டேட்’ செய்கிறார்களோ?
 • நங்கையின் பள்ளித் தோழி 2நாள் லீவ்,’உன் நோட்ஸைக் காபிசெஞ்சு தா’ என்று காலி நோட்டைக் கொடுத்திருக்கிறாள்,இதுவும் உட்கார்ந்து எழுதுது #ஏமாளி
 • பில்லா2 வெற்றியா, தோல்வியா என்று யாரும் ஜெயமோகனைக் கேட்கவில்லையா? ஆச்சர்யம்தான்
 • #NowPlaying ’வானெங்கும் தங்க விண்மீன்கள்’ பாட்டை ஒருவாட்டி கேளுங்கள், ‘கண்ணே கலைமானே’வின் வெளிச்சத்தில் காணாமல் போன நிஜ நிலா
 • சமையல் நிகழ்ச்சிகளில் சமைப்பவர் அருகே நிற்கும் தொகுப்பாளினிகள் வில்லுப்பாட்டில் பின்னே உட்கார்ந்து ‘ஆமா’ போடுவோரை நினைவுபடுத்துகிறார்கள்
 • மேங்கோ தொக்காம், அதே மீட்டர்ல மாங்காய்ன்னு சொன்னா கொறஞ்சுபோய்டுவியா தாயீ?
 • ஆ! சமைத்துக்கொண்டே பாட ஆரம்பித்துவிட்டார். பாட்டு முடிவதற்குள் தொக்கு ரெடியாகிவிடுமாம், லாஜிக்!
 • டாக்டர்கள் எல்லாரும் (வழுக்கையர் உள்பட) அழகாயிருப்பது எப்படி?
 • மாடிப்படிக்குப் பதில் ‘மச்சுப்படி’ என்கிறார் ஒருவர், அழகான வார்த்தை!
 • சாவி ஆரம்பத்தில் போர்ட் எழுதும் வேலை பார்த்தார், இளைஞர் என்பதால் யாரும் நம்பிப் புது ஆர்டர் தரவில்லை,ஒரு தந்திரம் செய்தார் 1/3
 • தெருவில் நடப்பது,எங்கேனும்போர்டில் எழுத்துஅழிந்திருந்தால் உளளேபோய் அதை நிரப்பிவதாக சொல்வார்,ஒப்புக்கொள்வர்,அப்படியே clientbase பெருக 2/3
 • ஒரு பத்திரிகை ஆபீசில் அப்படி எழுதித் தந்த போர்டுக்குக் காசு தராமல் இழுத்தடிக்க, பதிலுக்கு வேலை கேட்டார், எழுத்தாளரானார் 3/3
 • ‘எங்க சின்ன ராசா’ பாடல்களுக்கு லிரிக்ஸ் யார்? தாவணிக்கு விளக்கம் சொல்லும் வரி ரசனையோடு உள்ளது :>
 • ‘இருவரும் ஒருவர் தம்மின் வென்றிலர், தோற்றிலார்’ : ராவணன், சுக்ரீவன் சண்டை drawல் முடிந்ததைக் கம்பர் சொல்வது :>
 • அங்கதனைத் தூது அனுப்பும்போதே லட்சுமணன் மறுக்க, ‘இது சும்மா உல்லுலாக்காட்டிக்குதான்’ என்பதுபோல் கோடி காட்டுகிறான் ராமன் 1/2
 • அங்கதனுக்கும்சமாதானத்தில் விருப்பமில்லைபோல,ராமன் சொன்ன சேதியைப் பத்தாக்கி ராவணனை அவமானப்படுத்திச் சீண்ட,தூது வெற்றிகரமான தோல்வி,போர் 2/2
 • உருப்படியா ஒரு வேலை செய்யும்போதுதான் மொக்கை மீட்டிங்குகள் வழிமறிக்கும்
 • 57000 rupees for a bicycle? Wow!
 • Dei, face it, you can’t interview people, you don’t know how to #note_to_self
 • In a meeting about how to conduct interviews. People are sharing really funny stories, Complex equations, emotions flowing 🙂
 • #NowPlaying வானம் நமக்கு வீதி… யுவன் ஷங்கர் ராஜா நல்லாப் பாடியிருக்காப்ல!
 • கொம்பிருக்கும் காளைக்கெல்லாம் தெம்பிருக்காது,இந்தக் கொம்பு இல்லாக் காளையிடம் வம்பிழுக்காது… சூப்பர்! லிரிக்ஸ் யாரு?பஞ்சுவா? @kanapraba
 • தமிழ்ல ‘அண்டர்’அச்சீவர்ன்னா இந்திரன்தான்! #fb
 • இன்று படித்த கம்பன் பாட்டு, ராவணனை அடித்து அவன் கிரீடங்களைப் பறித்து வந்த சுக்ரீவனை ராமன் பாராட்ட, அவன் சொல்லும் பதில்: ’கிரீடமா முக்கியம்? அவனுடைய தலைகளை பறிக்காமல் விட்டுவிட்டேனே, வெறுங்கையோடு வந்தேனே!’ அதே சேதிதான் இங்கேயும் 🙂
 • செம காத்து!!!! #ஆடி #அம்மி
 • ‘Sure’ means many things, to many people!
 • டேய், திரும்பத் திரும்ப எத்தனைவாட்டிடா அதையே சொல்றது? #யாருக்கோ
 • பக்கத்து வீட்டில் ஒருவர் authentic செட்டிநாட்டுப் பலகாரங்களைக அங்கிருந்தே கூரியர்மூலம் வரவழைத்து விற்கப்போகிறாராம். அவர் வாழ்க!
 • உப்பிட்டு என்றால் உப்புமா, ஒப்பட்டு என்றால் போளி… கன்பூஷன்ஸ் ஆஃப் கன்னடா
 • அமர்:சண்டை,அமர்க்களம்:போர் நிகழும் இடம்,கம்பன் இப்படிதான் பயன்படுத்துகிறான்,நாம் சொல்லும் பாராட்டு ‘அமர்க்கள’த்துக்கும் இதே அர்த்தம்தானா?
 • Learnt today : seems பயன்படுத்தும்போது to be அவசியமில்லை, Seem எனும்போது to be அவசியமாகிறது. Thanks @Ethirajans and @elavasam
 • Talking to my neighbor who runs a trading company with annual turnover 150Crores.He wants to learn computer, email etc.,why not twitter Sir?
 • உடனடித் தேவை : பஸ்ஸில் சுற்றியிருப்போரைப் பற்றிக் கவலைப்படாமல் ஸ்பீக்கர் போட்டுப் பாட்டுக் கேட்போரின் ஃபோன்களை முடக்கவல்ல ஒரு வைரஸ்
 • ஓர் எழுத்தாளர் தன் கதை அச்சுக்கோத்தபின் ப்ரூஃப் ரீடிங்கின்போது மார்ஜின்களில் இன்னொரு மடங்கு எழுதுவாராம்,இணையத்தில் பலர் அப்படி என என்ஊகம்
 • ‘எண்பதுகளில்’ என்று எழுதுவார்கள், ஆனால் எஸ். ரா. ’1981களில்’ என்று எழுதுகிறாரே, என்ன அர்த்தம்?
 • #NowPlaying அன்னமே எந்தன் சொர்ணமே, உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே, கன்னமே மதுக் கிண்ணமே, அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
 • கங்கை அமரன் நல்ல கவிஞரா என்று தெரியாது, ஆனால் சொல் அழகு புரிந்த பிரமாதமான பாடலாசிரியர். சாட்சிக்கு ’இந்த மான்’ பாட்டுமட்டுமே போதும்!
 • @writerpara நம் நண்பர் ஒருவர் ‘சுமார் 24.37 கிலோ’ என்று எழுதுவாரே 😉
 • வேற்று மொழி Idioms, Phrases, Special Usagesஐயெல்லாம் தமிழில் மொழிபெயர்த்தால் சகிக்காது., இணையான தமிழ்ப் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம் 1/2
 • உதாரணமாக, is it rocket science? என்பது ‘அது பெரிய ராக்கெட் செலுத்தும் அறிவியலா?’ என்பதைவிட ‘கம்ப சூத்திரமா?’என்றால் அதிகம் ருசிக்கும் 2/2
 • தமிழுக்குப் புதுப் பயன்பாடுகள் அவசியம், அவை மொட்டை மொழிபெயர்ப்புகளாக இருக்கலாகாது. பல பழந்தமிழ் பயன்பாடுகளையே இப்போது காணோம்
 • ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுவதன் அவஸ்தை இது. தமிழில் நல்ல வார்த்தைவளம், கலாசாரப் புரிதலை வளர்த்தால் நன்றாயிருக்கும்
 • என் டைம்லைனில் எல்லாரும் நோலன், நோலன் என்கிறார்கள். ராமருக்கு உதவிய வானரப் படைத் தளபதிகளில் ஒருவராக இருக்குமோ? :>
 • எனக்குத் தெரிந்த batman ஒரு சூப்பர் ஹீரோ, பெயர் சச்சின் :>
 • #LalbaghNatureWalk அற்புதமாக இருந்தது. அங்குள்ள செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகளில் சிலவற்றை மிக எளிமையாக விளக்கிச் சொன்னார்கள் |1
 • #LalbaghNatureWalk Botany/ Zoology படிக்காத, ஆனால் இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட இருவர் 3 மணி நேரம் எங்களை அற்புதமாக நடத்திச் சென்றனர் |2
 • #LalbaghNatureWalk இந்தச் சில மணி நேரங்களில் கற்றது சொற்பம்தான், ஆனால், மரங்களும் பிராணிகளும் நம்மைவிட புத்திசாலிகள் என்பதுணர்ந்தோம் |3
 • #LalbaghNatureWalk முக்கியமான விஷயம், இந்த நிகழ்ச்சி planned agenda எதுவும் இன்றி மிக இயல்பாக நடத்தப்பட்டது, உதாரணமாக |4
 • #LalbaghNatureWalk நிகழ்ச்சி நடத்தியவர் காலில் ஒரு பூச்சி ஊர்ந்தது. சட்டென்று அதைக் கையில் எடுத்து விளக்க ஆரம்பித்துவிட்டார் |5
 • #LalbaghNatureWalk பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பறவையின் குரல் கேட்டது, சட்டென்று அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார் |6
 • #LalbaghNatureWalk இப்படி randomஆகச் சென்றாலும், அத்தனை சுவாரஸ்யம், ஒரு நிமிடம்கூடப் போரடிக்கவில்லை. காரணம், |7
 • #LalbaghNatureWalk ஒவ்வொரு மரத்தின் தன்மை, இலை, பட்டை, பூ, காய், கனி, அது எந்த நாட்டிலிருந்து வந்தது, அதுபற்றிய மத நம்பிக்கைகள்… |8
 • #LalbaghNatureWalk அந்த மரம் வளரத் துணைபுரியும் பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், அவ்வப்போது பொது அறிவுத் துணுக்குகள் |9
 • #LalbaghNatureWalk தகவல்கள் மேலோட்டமாக இன்றி, ஆழமாகவும், அதேசமயம் போரடிக்காமல் கதை போலவும், தேவையான டெமோவுடனும் இருந்தன |10
 • #LalbaghNatureWalk இதற்காக அவர்கள் ஓர் இலையைக்கூடப் பறிக்கவில்லை, காய், பழம் என எல்லாமே கீழே உதிர்ந்திருந்தவற்றை வைத்தே விளக்கினர் |11
 • #LalbaghNatureWalk எனக்கு ரொம்ப பிடித்தவை, அத்திப்பழத்து ஆண், பெண் குளவிகளின் சோகக் கதை, அத்திப்பழம் ஏன் அசைவப் பழம் 😉 |12
 • #LalbaghNatureWalk தொட்டால் சிணுங்கிச் செடி எப்படிச் சிணுங்குகிறது? ஹைதர் அலி நட்ட மாமரம் இப்போதும் பழுப்பது உண்மையா? |13
 • #LalbaghNatureWalk பெங்களூரின் மிக உயரமான மரம் எங்கே இருக்கிறது? இளம் பூக்கள் வண்ணமயமாகவும் முதிர்ந்தவை மங்கியும் இருப்பது ஏன்? |14
 • #LalbaghNatureWalk அசோகமரத்தைப் பெண்கள் காலால் உதைப்பது ஏன்? கண்ணன் பால் குடித்தது எந்த மரத்து இலையில்? |15
 • #LalbaghNatureWalk அஞ்ஞாதவாசத்தின்போது பாண்டவர்கள் ஆயுதங்களை மறைத்துவைத்த மரம் எது? Venom, Poison என்ன வித்தியாசம்? |16
 • #LalbaghNatureWalk கற்பூரம் எந்த மரத்திலிருந்து வருகிறது? அது இப்போ ரசாயனமானது ஏன்? குங்குமம்? ‘குரங்குப் புதிர்’ என்ற மரப்பெயர் ஏன்? |17
 • #LalbaghNatureWalk பறவை இறக்கைக்கும் பேன்ட் ஜிப்புக்கும் என்ன சம்பந்தம்? இசைக் கருவிகளைச் செய்யப் பலா மரம் பயன்படுவதேன்? |18
 • #LalbaghNatureWalk ’Sausage Tree’ மரத்தின்கீழ் காரை நிறுத்தக்கூடாது, ஏன்? ஒரு மரத்தை இன்னொரு மரம் கழுத்தைப் பிடித்து நெரிப்பதேன்? |19
 • #LalbaghNatureWalk ’சல்லே ஹன்னு’ பழத்தின் சுவை என்ன? நீல விதை கொண்ட தாவரம் எது? பச்சை எறும்பு எது? Rain Treeக்கு அந்தப் பெயர் ஏன்? |20
 • #LalbaghNatureWalk இதெல்லாம் தெரியணும்ன்னா, அணுகுக : http://www.ecoedu.in/ 🙂 |21/21
 • இன்றைய #LalbaghNaturalWalk நடத்தியவர்கள் Ulhas Anand and T. S. Srinivas
 • காலை நேர லால்பாக் இதுதான் முதன்முறை பார்க்கிறேன். அருமையான காற்று, எங்கு நோக்கினும் நடப்போர், ஓடுவோர், குன்றேறுவோர்
 • ‘சூர்யோதயம் ஒரு சிறுமியாகி, ஸ்கூல் யூனிஃபார்மில் போவது போல’ என்று இன்றைய முதல்வரின் பால பருவத்தை வர்ணிப்பவர் ஆர்? #க்விஸ் :>
 • லாண்ட்மார்க் : பழைய பொம்மையைத் தந்து சக்கரம் சுற்றினால் அதிர்ஷ்டப் பரிசு. சேகரிக்கப்படும் பொம்மைகள் ஏழைக் குழந்தைகளுக்குச் செல்லும்
 • வென்றவர் தோற்பர்,தோற்றவர் வெல்குவர்,நின்றவர் தாழ்வர்,தாழ்ந்தோர் உயர்குவர்: அட,’வாழ்க்கை ஒரு வட்டம்டா’ டயலாகுக்கும் கம்பர்தான் ஒரிஜினலா?:>
 • வைரமுத்துவின் புகழ் பெற்ற ‘தெய்வம் தந்த பூ’ என்ற வரி முதன்முதலில் இடம் பெற்றது ஒரு ராஜா பாட்டில்தான். தெரியுமா? அது எந்தப் பாட்டு? #க்விஸ்
 • #NowPlaying ‘சின்னச் சின்னச் சொல்லெடுத்து’ யேசுதாஸ் குரலில் சூழலுக்கேற்ற இரக்கமே இல்லை, ஏதோ காதல் பாட்டுபோல் பாடிப்போகிறார், அதனால் 1/2
 • ஜானகி tail enderருடன் ஆடும் விவிஎஸ் லஷ்மண்போல் பாரஞ்சுமக்கிறார் 2/2
 • Disney has released a book about Rahul Dravid. Good, but Disney??
 • #NowPlaying ‘அரச்ச சந்தனம்’… பல வருடங்கள் கழித்துக் கேட்கிறேன், மெட்டிலும், spb குரலிலும் என்ன ஒரு ஃப்ரெஷ்னஸ்!
 • #க்விஸ் ‘சூர்யோதயம் ஒரு சிறுமியாகி, ஸ்கூல் யூனிஃபார்மில்’ என இன்றைய முதல்வரின் பால பருவத்தை வர்ணித்தவர், வாலி
 • #க்விஸ் ‘தெய்வம் தந்த பூ’ என்ற பதம் இடம் பெற்ற ராஜா பாடல், ‘ஓ மானே மானே மானே’ (வெள்ளை ரோஜா) இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை :>
 • ’சின்னத் தம்பி’ போன்ற ஒரு படத்துக்கு வைரமுத்து என்ன பாடல் வரிகளை எழுதியிருப்பார் என்று யோசிக்கிறேன். சிரிப்பு வருகிறது 🙂
 • ’நான் நல்ல பொண்ணு’ என்று சொல்லிவிட்டு, ஒரு pause விட்டு ‘தானேப்பா?’ என்கிறாள் சின்னவள் :>
 • ’அப்படிதானே?’ என்று கேட்கத் தெரியவில்லை, ‘தானே’ என்பதைத் தனிக் கேள்வியாக்கிவிடுகிறாள். மழலை இலக்கணம்
 • ஃபேஸ்புக்குக்குப் பின்னணி இசை அமைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், ராஜாவாவது ரஹ்மானாவது… எஸ். ஏ. ராஜ்குமார்தான் பொருந்துவார்!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s