August : Week 4

 • கோவையிலிருந்து பெங்களூரு வரும் ’கொங்கு எக்ஸ்பிரஸ்’ ஒரு கட்டை வண்டிக்குச் சமம் என்பதறிக
 • நான் கல்லூரியில் படித்தபோது தவம் கிடந்த பழைய புத்தகக் கடைக்கு மகளை அழைத்துச் சென்றேன். அந்தக் கடைக்காரருக்கு அறிமுகப்படுத்தினேன் |1
 • ஒரே இடத்தில் அத்தனை புத்தகங்களைப் பார்த்தவுடன் அவளுக்குக் குஷி தாங்கவில்லை. ஆனந்தமாகப் புரட்ட ஆரம்பித்தாள் |2
 • ஐந்தே நிமிடம். புத்தகக் குவியலுக்கு நடுவில் கலைமகள்போல் அமர்ந்திருந்தாள். அந்த ஆனந்தத்தை வேறு எப்போதும் அவள் முகத்தில் பார்த்ததில்லை |3
 • குதிரைவாலி தானியம் இன்னும் இந்தியாவில் பயிரிடப்படுகிறது, கோவையில் ஒரு நாட்டு மருந்துக் கடையில் வாங்கினோம், கிலோ ரூ 84
 • ஆஹா! களாக்காய் என்ன ருசி! :>
 • GBKM is a famous movement in karnataka. It means ‘Gaanchali Bidi, Kannada Maathadi’ (forget English affections, speak in Kannada)
 • ’நெல் மூட்டை நிரப்பி, நெடுஞ்சாலை கடக்கும், வில் வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும்’… என்னவொரு காட்சி, வாலிக்கு வந்தனமு!
 • உயர் மறையெலாம் புகழும் கமலம், பாத கமலம், இசை ஞான வடிவான இறைவன் நீதான் என்று நான் தொழும், தலைவன் நீதான் என்று போற்றிடும், கமலம்!
 • பிள்ளைகளுக்கு தோசை வார்க்கையில், திருப்பிப் போட்டபின் என்ன உருவம் என்று தீர்மானித்துச் சொல்லுக, முன்பே கமிட் செய்துகொண்டால் பிரச்னை 🙂
 • “Wake Up Your Success” என்கிறார் ராபின் ஷர்மா. த்சொ த்சொ த்சொ … இவரை இனி ‘கார்ப்பரேட் எஸ்ஸே ராஜ்குமார்’ என்று அழைக்க விழைகிறேன்
 • மசாலா பாபட் என்பதுபோல் ஏமாற்று வேறில்லை
 • செம தூக்கக்கலக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன், நாளை எடிட் செய்ய படிக்கையில் அது பெங்காலி பாஷையில் இருந்தாலும் ஆச்சர்யப்படமாட்டேன்
 • இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ? 1/2
 • மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்கு கண்டேன், கால்வண்ணம் இங்கு கண்டேன் 2/2
 • ’ஒரு தாமரை பூ’, ’ஒரு தாமரைப் பூ’ ரெண்டுக்கும் அர்த்தம் வெவ்வேற. தெரியுமா? Guess 🙂
 • “Sidney Sheldon’s XYZ” என்று டைட்டில் போட்டு வேறு யாரோ நாவல் எழுதி வெளியிடுகிறார்களே, இது என்னமாதிரி அயோக்கியத்தனம்!
 • அரக்கர்களுக்குத் தோல்வி நெருங்க, பயம். Loyalty மறந்து, போர்க்களத்திலிருந்து தப்பி ஓடுகிறார்கள், இதைக் கம்பன் சொல்லும் அழகு : 1/2
 • அச்சம் கொண்டார், உண்ட சோறு நோக்கார், உயிருக்கே உதவி செய்தார்! 2/2
 • முந்தின ட்வீட்டில் ‘சோறு’ என்பதைச் ‘செஞ்சோறு’ என வாசிக்கவும், செம்மையான (நல்ல) சாப்பாடு
 • ’சின்ன தம்பி’யில் வைரமுத்து : ஒரு கற்பனை |1
 • பூமியின் பொக்கிஷம், வானத்துப் பொற்குடம், பூத்திட்ட தினம் இது, ஆஹா! |2
 • ஊரைச் சுற்றும் காற்று நீ, உன்னைச் சுற்றும் நாற்று நான், தேரில் ஏறிப் போகலாம், தேவ வேர்வை காணலாம் |3
 • கூவும் பறவையைக் கூட்டில் அடைக்கிற பாவக் குட்டையிந்த பாழும் உலகம்,அனல் மேவும் இடந்தனில் மீச்சிறு பனித்துளி நோவும் வேறென்ன மீதம்? |4
 • அன்னையின் தாலாட்டில் அன்புக்கும் இசையுண்டு, உன்னை மறந்திடு நீ, உன்மத்தம் கொண்டிடு நீ | 5
 • உச்சந்தலையிலே உண்டுபல பாட்டுகள், தச்சர் செதுக்கல்போல் சரிசெய்து தருவேன் நான், நச்சிப் பெண்பூவே நன்றாகக் கேள் நீ, மொச்சைக் கண்ணாலே மச்சானைப் பார் நீ ;))) |6
 • நீ எங்கே என் அன்பே, நீங்காத என் என்பே, பூங்காற்றில் உன் வாசம், புரியாத ஒரு நேசம் |7
 • அட, அப்பாவி க்ளர்க்குகளே! Executive Editor என்பதை ExEditor என்றா சுருக்குவீர்கள்? அவரும் கவனிக்காமல் கையெழுத்திட்டிருக்கிறார் :))
 • Doing an internal session @ office, on imagining / designing Infographics (not the tools, just visual thinking process)
 • ’சில குறள்கள்தவிர எந்தத் தமிழ்ப் பாட்டும் உனக்கு மனப்பாடமாத் தெரியலை, நீ என்ன பெரிய தமிழ் ஆர்வலன்?’ என்கிறார் மனைவியார். விழிக்கிறேன்
 • சீதை ஏன் ராமனுடன்காட்டுக்குபோனாள்? ‘60003மாமியார் தொல்லைஇல்லாம 14வருஷம் நிம்மதியாஓட்டலாமே!’ என்கிறார் T.S.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் :))
 • பெங்களூரு திடீர் மழையில் சிக்காமல் இருக்கச் சிறந்த வழி, கையில் குடை எடுத்துச் செல்வதுதான். அன்றைக்கு மழை வரவே வராது :>
 • தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்தும் யாம்? ’தா தா தா’ என்று உலகில்தான் அலைந்தோம், போதாதா? |1
 • நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே, எந்தாய் எனப் புகழவே : வள்ளலாரின் வெண்பா |2
 • முதல் வரியில் ‘தாதாதாதாதாதாதாக் குறை’ என்பதன் அர்த்தம், ‘ஏழு தா’, அது ‘எழு தா’ என சுருங்க, ‘எழுதா(த) குறை’, தலையெழுத்து சரியில்லை 🙂 |3
 • தலையெழுத்து சரியில்லை என்றால், நாம் என்ன செய்யமுடியும்? ‘தா தா தா’ என்று அடுத்தவர்களைக் கெஞ்சி அலைந்து பிழைக்கவேண்டியதுதான் |4
 • அலைந்தது போதும், என்றைக்கும் கெடாத மணியே, நமச்சிவாயா, இனி உன்னை ‘என் தந்தை’ என்று புகழ்ந்து வாழ்கிறேன், வேறு யாரிடமும் கையேந்தமாட்டேன் |5
 • வள்ளலாரின் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு, எளிமையாகவும் புரிகிறது, திருஅருட்பா முழுத் தொகுப்பு வாங்கப்போகிறேன் |6/6
 • ’உங்கபொண்ணுக்குபொறுமைகுறைவு,அரிசி,பருப்புகலந்துதந்துபிரிக்கசொல்லுங்க’ என்கிறார் அவளது ஆசிரியர்.அதுமாமியார்கொடுமை என்றல்லவாநினைத்தேன்
 • ராஜஸ்தான் தோழர் ஒருவர் தன் திருமணப் புகைப்படங்களை அனுப்பினார். என்னா அலங்காரம்! முகூ முடிந்து சாந்திமுகூ தொடங்க நாலு நாளாகும்போல 😉
 • அண்ணன் ’பேரரசு’ எழுதி, இசையமைத்துப் பாடி இயக்கியிருக்கும் ‘ராஜ ராஜ சோழா’ பாடலைப் பற்றி இங்கே ஒரு பய பேசுறானா? ஹூம்!
 • #NowPlaying சந்திரனைத் தொட்டது யார், என்ன ஒரு Stylish Tune (& Sujatha’s Humming) ரஹ்மான் வாழி!
 • வருடம் முழுக்க வாலியாக இரு, Performance Review, Appraisal சீசன் தொடங்கும்போது, வைரமுத்துவாகிவிடு! #புரியவேண்டியவங்களுக்குபுரியும் 😉
Advertisements

August : Week 3

 • Hmm, someone is writing a new book called “The Tao of Twitter” 🙂 #fb Aug 12, 2012
 • கிறு, கின்று, ஆநின்று மூன்றும் சரி, வருகிறான், வருகின்றான், வராநின்றான் எல்லாம் ஒன்றேதான்
 • ‘துப்போ எனத் துணியாம்வகை’ : கம்பன் …. துப்பு : வலிமை, ‘துப்புக் கெட்ட மனுஷன்’க்கு இப்போ அர்த்தம் புரிந்துகொண்டேன் 🙂
 • யுத்தகாண்டம் படிக்கும்போது கம்பர் கிரிக்கெட் வர்ணனை செய்தால் எப்படி இருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது 🙂
 • ‘மானின் இருகண்கள்’ பாட்டில்வரும் ‘மொய்குழல்’க்கு அர்த்தம்தேடினேன்,அடர்ந்த கூந்தலாம்,திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பயன்படுத்தியுள்ளார்
 • Pakistan didn’t win a single medal? Not even in high jump? 😉
 • ’எல்லா முத்தத்துக்கும் விலை உண்டு, ஒரே ஒரு முத்தத்தைத் தவிர’ என்கிறார் பகழிக்கூத்தர் |1
 • ’உன் கனிவாய் முத்தம் தனக்கு விலையில்லை, முருகா, முத்தம் தருகவே’ என்று அவர் பாடுவது, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் :> |2
 • தமிழில் ‘முத்தம்’ என்றால், Pearl Or Kiss, ரெண்டையும் சேர்த்த பகழிக்கூத்தர் : முத்தம் சொரியும் கடல் அலை வாய் முதல்வா, முத்தம் தருகவே |3
 • முத்துகள் நிரம்பிப் பொழியும் கடல் அலைகள் வந்து சேரும் வாயிலில் உள்ள திருச்செந்தூரில் குடிகொண்டுள்ள குழந்தை முருகா, முத்தம் கொடு! |4/4
 • சின்ன மகளுக்குக் கூட்டல் கணக்குச் சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார் மனைவி.சாப்பிடும்போதும் தூங்கும்போதும் ’5+3 எவ்ளோ?சொல்லு!’ என்கிறார்|1
 • வழக்கம்போல், நான் இதைக் கண்டித்தேன், ‘இன்னும் விரல் மடக்கக்கூட வரலை, சின்னப் பொண்ணைப் படுத்தாதே, பாவம்’ என்றேன், யார் கேட்டார்கள்? |2
 • ’அப்பா, ஒனக்கு ஒண்ணும் தெரியாது, சும்மா இரு!’ என்று அடக்கிவிட்டு, மடங்கியும் மடங்காத விரல்களால் அவள் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள் |3
 • இன்று காலை, என்னை வெறுப்பேற்றுவதற்காகவே, ஒரு காகிதம் முழுக்கக் கூட்டல் கணக்குகளை அம்மாவும் மகளுமாக நிரப்பியுள்ளார்கள் |4
 • சரி, அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று நானும் பார்த்தேன், ‘5 மைண்ட்ல வெச்சுக்கணும், 3 விரல்ல வெச்சுக்கணும், 6, 7, 8’ அவ்ளோதான் |5
 • எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டுவிட்டு, குழந்தை என்னிடம் கேட்டாள், ‘எனக்கு ஒரு கிஃப்ட் வாங்கிக் கொடுப்பா’ |6
 • ’வாங்குவதென்ன, உனக்காக ஓர் அறுசீர் ஆசிரிய விருத்தமே எழுதித் தருகிறேன்’ என்று சமாளித்தேன் 😉 |7
 • அஞ்சும் மூணும் எத்தனையோ, அழகாய் நீயே கணக்கிடுவாய், பிஞ்சு விரல்கள் தமைமடக்கிப் பாங்காய் எண்ணி அறிந்திடுவாய் |9
 • கொஞ்சல் மொழியில் விடைசொல்லிக் காகி தத்தில் எழுதிடுவாய், பஞ்ச வர்ணக் கிளியுனக்குப் பாட்டில் சொன்னேன் ஒருவாழ்த்து! |10/10
 • You can safely ignore articles and blogposts that start with ‘In Today’s Market Place’, 90% of them are junk #IMO
 • சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம்
 • #TwitterIn1947 My New Book “What Independent India Wants” will be released this November, Preorder @ Rs 1.40 : Chetan Bhagat
 • #TwitterIn1947 Dear Gandhiji, Today is My Birthday, Please RT, I will be very happy, Please Please Please Please
 • #TwitterIn1947 நான் இந்தியப் பொண்ணா இருந்ததாலதான் சினிமால பிரபலமாக இவ்ளோ நாளாச்சு : லதா மங்கேஷ்கர்
 • #TwitterIn1947 Bro, your latest movie is excellent, god bless : Raj Kapoor
 • #TwitterIn1947 ’பக்த மீரா’வின் திரைக்கதையை நான் எப்படி எழுதியிருப்பேன் என்றால்…. : பி. ஆர். மகாதேவன்
 • #TwitterIn1947 முதன்முறையாக பாரதியார் சார் எழுதின பாட்டைப் பாடுகிறேன், ஏவிஎம் சார் தயாரிப்பில் : டி. எம். சௌந்தர்ராஜன்
 • #TwitterIn1947 Freedom is not a word, but a sentence : Robin Sharma
 • #TwitterIn1947 RT if you prefer British rulers over Indian rulers
 • #TwitterIn1947 ஜின்னா, ஏன் இப்படி உளர்றே? நீ குடிச்சது ஜின்னா? ரம்மா? : பல கவிஞர்கள் 😉
 • #TwitterIn1947 சுதந்தர இந்தியாவில் புத்தகங்கள் எப்படி விற்குமோ தெரியவில்லை, நான் பிரிட்டனுக்கே சென்று குடியேறப்போகிறேன் : நீரு சவேதிதா
 • #TwitterIn1947 லாகூர் நெடுஞ்சாலையில் ஒரு புளியங்காய் வியாபாரியுடன் தனியே நடந்த அனுபவத்தை நினைத்தாலே கண்ணில் நீர் கோக்கிறது
 • #TwitterIn1947 ஒலிம்பிக்கில் நாலு தங்க மெடல் வாங்கத் துப்பில்லை, உங்களுக்கெல்லாம் சுதந்தரம் ஒரு கேடா? : பலர் 😉
 • #TwitterIn1947 நான் எழுதிய ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகஸ்ட் 19 அன்று வெளியாகும் : ஹிஹி ;))))
 • #TwitterIn1947 இன்று இரவு #365Processல் ‘காந்தி ஒரு PMI’ கட்டுரை வெளியாகும் : @ChPaiyan
 • #TwitterIn1947 இந்த வார ‘நீயா நானா’வில், ‘வெள்ளையனை வென்றது காந்தியா, நேதாஜியா’ சிறப்பு விவாதம்
 • #TwitterIn1947 ’பகலினில் பட்லராய் இரு, இரவினில் ஹிட்லராய் இரு’ : லேட்டஸ்ட் படத்தில் வாலியின் வாலிப வரிகள் ;)))
 • #TwitterIn1947 வெங்காய பக்கோடா, இதைக் கண்டுபிடித்தவனுக்குப் பாதி பாகிஸ்தானைக் கொடுத்துவிடலாம் : @writerpara
 • #TwitterIn1947 அன்புள்ள ஜெயமோகன், காந்திதான் நம் பிரதமராகியிருக்கவேண்டும் என்பது என் கருத்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 • #TwitterIn1947 காந்தி சுதந்தரம் வாங்கித் தந்ததாகச் சொல்கிறார், அதற்கான பத்திரம் இருக்கிறதா? இல்லாவிடில் அவர் ஃப்ராட் : @spinesurgeon
 • #TwitterIn1947 இந்த வார விகடனில் ஆரம்பம், காந்தி எழுதும் ’சுதந்தரத்தின் கதை’
 • #NowPlaying ‘Thenmozhi anbuth Thenmozhi’ song is a super rich plum cake, or இஞ்ச் இஞ்சாப் பார்த்துப் பார்த்துச் செதுக்கின பொற்சிலை
 • #NowPlaying ‘Thenmozhi anbuth Thenmozh’ Tune, singing, orchestration everything very innovative, so much packed in a 5.5 minutes song!
 • ‘கான கருங்குயிலே’ (பூந்தோட்டக் காவல்காரன்) பாட்டுக்கு தொகையறா (மாப்புள்ள, நல்ல புள்ள) பாடுவது யார்? பி. சுசீலாவா?
 • #NowPlaying ‘கவிகள் உனை வடிக்க, (அதனால்) காலமெல்லாம் நிலைத்தாயே’… பக்திப் பாட்டுக்கு நடுவே நைஸாகப் பகுத்தறிவு? 😉
 • இன்றைய எம். எஸ். சுப்புலஷ்மி நிகழ்ச்சிக்கு வழித்துணையும், நிகழ்ச்சி முடிந்தபின் பலாப்பழ ஐஸ்க்ரீமும் தந்த @lalitha_ram வாழ்க :> |1
 • //MS Multimedia Presentation// பெரும்பாலும் புகைப்படங்கள், கச்சேரிப் பதிவுகள், சில வீடியோக்கள் வழியாகச் சுருக்கமான கதை சொன்னார்கள் |2
 • //MS Multimedia Presentation// எனக்குக் கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆகவே நடுவில் கதை தேடிக்கொண்டிருந்தேன் |3
 • //MS Multimedia Presentation// புகைப்படங்களில் 15 வகை ’மைக்’குகளை எண்ணினேன், காலர் மைக், வயர்லெஸ் மைக் தவிர சகலமும் |4
 • /MS Multimedia Presentation/ அன்றைய இந்தியப் பிரபலங்கள் பலர் புகைப்படங்களில் தென்பட்டார்கள், யார் எவர் என Captions இல்லாதது பெரிய குறை |5
 • //MS Multimedia Presentation// எம்.எஸ்.ஸுக்குப் புகைப்படங்கள் உவப்பானவைபோல, வீடியோப்படங்கள் உவப்பில்லைபோல, என் அவதானிப்பு |6
 • //MS Multimedia Presentation// வீடியோ படம் எடுக்கிறவரை, குறிப்பாக க்ளோஸப் எடுத்தால் சங்கடமாகப் பார்க்கிறார், கண் தடுமாறுகிறது |6
 • //MS Multimedia Presentation// ’என்னைச் சுதந்தரமாப் பாட்டுப் பாட விடேன்ய்யா’ என்பதுபோல் ஒரு பாவனை, முகம் திருப்பிக்கொள்கிறார் |8
 • //MS Multimedia Presentation// பாடலுக்கு நடுவே உம்மாச்சி பெயர் வந்தால், அனிச்சையாக அவர் கரம் குவிகிறது, அநேகமாக எல்லா வீடியோவிலும் |9
 • //MS Multimedia Presentation// நிகழ்ச்சியின் குறைகள் என்று பார்த்தால், நடத்தியவர் பேச்சு சுமார், எப்பப்பார் ‘சம்திங் ஸ்பெஷல்’ |10
 • //MS Multimedia Presentation// Contentம் சரிவர ஒருங்கிணைக்கப்படவில்லை, எத்தனை Window தாவல்கள், ஒரு PPT போதுமே |11
 • //MS Multimedia Presentation// நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தோம், எம்.எஸ். பெயரில் பர்ஃப்யூம் விற்றுக்கொண்டிருந்தார்கள் |12/12 (பின்னர் தெரிந்துகொண்டது, எம். எஸ். பெரிய பர்ஃப்யூம் ரசிகையாம், அதனால்தான் இப்படி Brandingபோல)
 • மனைவியார் பூரிக்கட்டையுடன் வருகிறார். சப்பாத்தி இட உட்கார்கிறேன் :> #ட்விட்டர்ப்ரேக்
 • 1 Hour into Embar’s Harikatha and I am a lifetime fan now, He is AMAZING 🙂
 • திருக்குறள் + உரை ஆடியோ புஸ்தகமாம். வரிசையாகக் கேட்பதற்கா அது? ரெஃபரன்ஸ் புத்தகம், ஆடியோவில் ஒத்துவரும் என்று தோன்றவில்லை
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 1. யயாதி (‘காண்டேகர்) 2. ஜனனி (லாசரா) 3. அர்த்தமுள்ள இந்து மதம் (கண்ணதாசன்) |1
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 4. காற்றின் கையெழுத்து (பழநிபாரதி) 5. பாலும் பாவையும் (விந்தன்) 6. கள்வனின் காதலி (கல்கி) |2
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 7. ஜயஜய சங்கர ஹரஹர சங்கர (ஜெயகாந்தன்) 8. நெஞ்சுக்கு நீதி (மு.க.) 9. கோதைத் தீவு (வ.ரா.) |3
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 10. திருவரங்கன் உலா (புஷ்பா தங்கதுரை) |4/4
 • ‘வாய் கொண்டு சொல்லற்கு ஏற்ற வலி(மை)’ என்கிறார் கம்பர், வெறும் வாய் வீரத்தை எள்ளல் செய்ய இன்றைக்கும் பொருந்தும் 🙂
 • Anybody offering a degree course in common sense? No? They should! #OfficeBlues
 • I signed up for pinterest using my twitter ID, as a result, I get info whenever my twitter friends join pinterest. Very smart 🙂
 • இன்று மாலை நடைக்கு உதித் நாராயண் பாடல்கள்மட்டும் கேட்கலாமா என்று ஒரு யோசனை :>
 • stores count how many ppl visit them, Crossword bookshop counts men, women, children separately, wondering what they do with this data
 • தமிழின் ‘ர’ எழுத்தைக் காட்டி, ‘ஏ’ என்று படித்தாள் சின்னவள். ‘தப்பும்மா’ என்றால் மறுக்கிறாள், ’எங்க மிஸ் அப்படிதான் சொல்லித்தந்தாங்க.’ |1
 • அவள் பள்ளியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பதால், ஏதோ தெரியாமல் உளறுகிறாள் என்று நினைத்தோம். அப்புறம் புத்தகத்தை எடுத்துக் காட்டினாள் |2
 • ஹிந்தியின் ‘ஏ’ (ए), தமிழின் ‘ர’ கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கிறது. இப்ப யார் முட்டாள்? 🙂 |3/3
 • ’பாமினி’ என்ற புராதன Fontல் எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது #அடடே
 • நிஜ வாழ்க்கைல இயல்பாப் பேசறவங்ககூட ஃபேஸ்புக்ல நுழைஞ்சுட்டா கவிதை, தத்வம்ன்னு மாறிடற ரசவாதத்தை ஆராவது ஆராய்ஞ்சு டாக்டர் ஆகலாம்
 • ஒரு biography படிக்க எடுத்தேன், ’கதைநாயகரின் வெளிநாட்டுப் பயணங்கள்’ என்று தனியே ஒரு சாப்டர். அதில் உலக மேப்பே வருகிறது!
 • Pinocchio வெறும் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அது ஒரு நாவலாமே. அந்தக் காலப் படங்களுடன் அட்டகாசமாக உள்ளது, வாங்கிவிட்டேன்
 • உங்கள் முதல் சம்பளத்தின் முதல் ரூபாயை (அல்லது டாலரை) என்ன செய்தீர்கள்? நினைவிருக்கா? :>
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// அதற்குச் சில நாள்கள் முன்பாகக் கையில் பணம் போதாமல் உடன் பணிபுரியும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தேன் |1
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// சம்பளம் வாங்கினதும் முதல் வேலையாக அதைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் அதை வாங்க மறுத்துவிட்டார் |2
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// ’முதல் செலவு இப்படி இருக்கக்கூடாது, கோயிலுக்குப் போய் உண்டியல்ல 1 ரூபா போட்டுட்டு வா’ என்றார் |3
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// அவர் சொன்னபடி செய்தேன், அதன்பிறகே அவர் கடன் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் |4/4
 • ’முதல் சம்பளத்தை என்ன செய்தீர்கள்’ என்று அம்மா, மனைவியைத் (தனித்தனியே) கேட்டேன், ‘எங்க அப்பாகிட்ட கொடுத்தேன்’ என்றார்கள் ஒரேமாதிரி :>
 • A colleague says ‘HR should also be Marketing the company among prospective employees.’ hmm, they should do ‘After Sale Support’ too 🙂
 • ‘சல்வார் கமீஸ் அணிந்த பெண்களே’ என்று எழுதியிருந்தாலும் மெட்டில் உட்கார்ந்திருக்கும்,’சுமந்த’ என்றது வாலியின் குறும்பு :> உடை சுமை 😉
 • Usually Raja uses tabla for regular song& drums for interludes,in ‘yeriyil oru oodam’, for some reason he uses Tabla only in interludes
 • நங்கைக்கு இன்றைய கதை சோழன் நலங்கிள்ளியைப் பற்றி. ‘என்னப்பா, Boyக்குப் போய் Girlமாதிரி பேர் வெச்சிருக்காங்க?’ என்று சிரிக்கிறாள் :>
 • கோவைக்குக் குறும்பயணம், வழி நெடுக, 10 மரங்கள் சேர்ந்தாற்போல் தென்பட்டால் அங்கே ஒற்றையடிப்பாதை அமைத்து ஓர் எஞ்சினியரிங் காலேஜ் உள்ளது
 • ‘கரம், சிரம் புறம் நீட்டாதீர்’… எத்துணை அழகான, நேர்த்தியான வாசகம்!
 • இடுப்பு எலும்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவரைச் சுத்தத் தமிழில் ‘அரை வைத்தியர்’ எனலாம் :>
 • ‘அட்ட கத்தி’ என்றால் கிரந்தம் தவிர்த்த எட்டு கத்திகளா? நடுவே ‘க்’ சேர்த்தால் ‘அட்டையால் செய்த கத்தி’ என்று அர்த்தமாகும்
 • After @nangain learnt to read Tamil fluently,this is the first time we are in TN. She is busy reading வடவள்ளி, மரக்கடை, தடாகம் etc.,
 • ரயிலில் பொம்மை விற்கும் பார்வையற்றவர், ரூபிக்க்யூப் விளையாடுவதுஎப்படி என தன் கஸ்டமர்ஒருவருக்குசொல்லித்தருகிறார் #எண்ணங்களுக்கேத்தபடி
 • ஆ! சக பயணி ஒருவர் முந்தின ‘நீயா நானா’ எபிசோட்கள் பற்றி நனவிடை தோய்ந்து சிலாகிக்கத் தொடங்கிவிட்டார், புத்தகம் வாசிப்பதுபோல் எஸ்கேப்

August 2012 : Week 2

 • Quiz @ office, they asked a trick question, how many squares in a chess board, did some mental math, got confused, & answered as 64+ #clever (Later found that the actual answer is 204, quite easy when you imagine, 1 + 4 + 9 + 16 + 25 + 36 + 49 + 64)
 • So many answers to ‘squares in a chess board’ question (204)!!! Where were you during my +2 exam? I would’ve become a Dr :>>>
 • பஸ்ஸில் ஏதோ தெலுங்குப் படம். வில்லன் ஹீரோமீது ஈட்டி வீச, அது அவரது சட்டையைக் கிழித்து அகற்ற, சிக்ஸ் பேக் காட்சியாகிறது #அடடே
 • பலர் ‘பூவே உனக்காக’பற்றி ட்வீட்டுகிறார்கள், நானும் என் பங்குக்கு … ‘சொல்லாமலே’ பாட்டு பிரமாதம், ஜெயச்சந்திரனின் டக்கர் குரலில்
 • //பூவே உனக்காக// எல்லாப் பாடல்களும் பழநி பாரதி, IMO அவரது டாப் 3யில் இதுவும் ஒன்று (மற்றவை உள்ளத்தை அள்ளித் தா, காதலுக்கு மரியாதை)
 • ’கண்ணே உன் முந்தானை காதல் வலையா’ என்று ஜெயச்சந்திரன் கொஞ்சுவாரே பார்க்கணும், விஜய்க்கு அவர் வேறு பாட்டு பாடியதுண்டா?
 • /கொஞ்சிக் கொஞ்சி/ 2ம் சரணத்தில் ‘மாதர் dhaம்மை மறந்தாட’ என்கிறார் SPB,பெண்கள் சிகரெட்டையா மறந்தனர்? அது ‘thaம்மை’ன்னு வரணும் ஸ்வாமி!
 • அன்றைய விகடனில் கதை, கட்டுரைகளுக்கு சன்மானம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது தெரியுமா? அச்சானதை ஸ்கேலில் அளந்து, ஓர் இஞ்சுக்கு 2 ரூபாய் 🙂
 • அலுவலக நண்பர் ஒருவருக்குத் தமிழ் தெரியாது என நினைத்தேன். தமிழில் எழுதின ஃபேஸ்புக் மெஸேஜ்களுக்கெல்லாம் லைக் போட்டு பயமுறுத்துகிறார்
 • மீடியாக் கட்டுரைகள், செய்திகள் அனைத்தையும் (புகழ்ச்சியோ திட்டோ, அறிவிப்போ) ரெண்டு ஸ்பூன் உப்பு தூவித் தின்னல் நலம்
 • ‘கிழக்கும் மேற்கும்’ என்று ஒரு படம், அந்தப் படத்தின் அட்டகாசமான பாடல்களை எண்ணி 27 பேர் கேட்டிருப்பார்கள் என்பதென் துணிபு #NowPlaying
 • Sigh! Chetan Bhagat trend in every field, some of my good friends are bitten by this ‘Media Hype More Important Than Actual Work’ virus
 • Why Bangalore doesn’t have a Kamban Kazhagam? #sigh
 • மனைவியார் கிச்சனை விட்டு வெளியே தலைகாட்டாமல் இருந்தால் மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி என்று அர்த்தம் :>
 • சூர்ய வம்சம்பற்றி ட்வீட்டுவோர் ஆருக்கும் அந்த இட்லி உப்புமா ஞாபகம் வரலியா? :>
 • It seems Microsoft has a full time employee to work on ‘blind typing’ in mobiles, (s)he analyzes the sounds keyboards make for each key
 • #NowPlaying ‘சிறு நூலிடைதான், ஒரு இன்பக் கடைதான், உன் தேவையை வாங்கிடு!’ #இடுப்பிலொருசூப்பர்மார்க்கெட் #வாலீடா
 • வீட்டுக்கு பட்சணம் வாங்க வந்தவர் புலம்பல், ‘என் ஹஸ்பண்ட் கட்டில்மேல ஈஸி சேர் போட்டு அதுல உட்கார்ந்து தூங்கறார், என்ன பழக்கம்ங்க இது?’
 • ம்ஹூம், ’சின்னப்ப தாஸ்’க்குப் பெண்பால் என்ன என்றெல்லாம் கேட்கக்கூடாது :>
 • ‘கம்ப ராமாயணத்தில் அங்கதன்’ என்ற தலைப்பில் பேராசிரியர் கு. ராமமூர்த்தி நிகழ்த்திய 1.5 மணி நேர உரையை நண்பர் @oojass அனுப்பியிருந்தார் |1
 • இன்றைய வாக்கிங் துணையாக அங்கதனைக் கேட்டு முடித்தேன். மிகத் தெளிவான பேச்சு, அழகான உதாரணங்கள், பயமுறுத்தாத எளிய பேச்சு, பிரமாதம் |2
 • கதையினூடே கம்பன் அல்லாத மற்ற ராமாயணங்கள், சரித்திர உதாரணங்கள், Legal, Management உத்திகள் என்று கலக்கலான உரை, மிகவும் ரசித்தேன் |3
 • ஈமுவை வளர்த்தசனம் இளிச்சவாய் ஆனதால்,வெண் / பாமொன்றைப் போட்டுநீ புலம்பு
 • குறுஞ்சீர் வண்ணம் : பாடலில் முற்றிலும் குறில்கள் நிறைந்த ஒலி அழகு.அழகாக உருண்டு ஓடும் சந்தம்,காதலுக்கும் சண்டைக்கும் பொருத்தமாம்.உதா: 1/2
 • குறுஞ்சீர் வண்ணம், உதாரணம்: இருபது வயதினில் பருகிய இதழ்ரசம் அவனது இதயத்தில் நிரந்தர சுகம்தரும். மிக ஈஸி, நீங்களும் எழுதுங்களேன் 2/2
 • #NowPlaying கண்ணம்மா, காதலென்னும் கவிதை சொல்லடி… பர்ஃபெக்ட்!
 • #NowPlaying முத்துமணிமாலை…. SPB ஏனோ 2H பென்சில்போல் அழுத்தம் திருத்தமாகப் பாடுறார், P. சுசீலா மயிலிறகுபோல் லேசாக மிதக்கிறார்
 • #NowPlaying கவிதை கேளுங்கள்… 5 நிமிடம் 9 விநாடிகளுக்குள் பயபுள்ள என்னவெல்லாம் மாயம் காட்டியிருக்கு பாரேன்!
 • #NowPlaying ‘பூ வாடைக் காற்று’ மாதிரி பாடல்களில் உடன் பாடுபவரை ஜானகி வேண்டுமென்றே ராக்கிங் செய்கிறார்போல் தோன்றும் எனக்கு
 • IMO, 99.99% of technical people are bad speakers / presenters, they don’t even understand when audience listen and when they are bored
 • சாவியின் (கிட்டத்தட்ட) சுயசரிதை நிதானமாகப் படித்துவருகிறேன், ஏராளமான துணுக்ஸ், அன்றைய பத்திரிகை உலகம்பற்றிய தெளிவான பதிவு |1
 • /சாவி சரிதை/ அன்றைய பத்திரிகை ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட உள்அரசியல்,ஈகோ,வீம்பு,அல்ப சண்டைகள்,பொறாமைகள்,கால்வாரல்கள் |2
 • /சாவி சரிதை/ இதையெல்லாம் படிக்கும்போது, இன்றைய இலக்கியவாத குடுமிபிடிகள் ஒன்றுமே இல்லை 🙂 |3/3
 • The beautiful Flute bit in first interlude of ‘putham puthu kaalai’ is from ‘How to name it’? (Or the other way?)
 • #NowPlaying ‘வா, காத்திருக்க நேரமில்லை’ பாடலின் பின்னணித் தாளம், தண்ணீரில் அமிழும் சிறு கல்லின் ஒலியைப்போல் கிறங்கடிக்கிறது
 • #NowPlaying மின்னல் நெய்த சேலை, மேனிமீது ஆட… யு ரிமெம்பர்? 😉
 • பொதிகையில் மவுசுள்ளவர்கள் யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கண்ட நேரத்தில் ஒலிபரப்பிக் கழுத்தறுக்கும் சில பழைய உரைகள் தேவை
 • #NowPlaying சிறுகூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை!
 • They still make Paper Weights? Why?!
 • ‘ஓ வசந்த ராஜா’ பாடலின் ஒட்டுமொத்த Lyrics 70 வார்த்தைகளைவிடக் குறைவு, நம்புவீர்களா?
 • #NowPlaying ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’… ஹீரோவை மயக்கும் ஹீரோயினி பாட்டு, ஆனால் ஹோட்டல் சர்வர்மாதிரி ஒப்பிக்கிறார் டீச்சரம்மா
 • சமையல் குறிப்புகளில் எப்போதும் ‘பொன்னிறம்’தான், யாரும் மறந்தும்கூடத் ‘தங்க நிறம்’ என்று எழுதிவிடுவதில்லை, ஏன்? #மொழிஆராய்ச்சி
 • குழந்தைகள் தமிழ் படிக்கும்போது பக்கத்தில் அமர்ந்து பாருங்க, அவங்க ta,da,ka,ga உச்சரிப்புகளைத் தாங்களே புரிந்துகொண்டு திருத்தும் அழகு!
 • பக்கத்து வீட்டு(கன்னட)ப் பொடியனிடம் ’என்னடா டின்னர்?’ என்றேன்,இட்லியா தோசையா என்றால் விழிக்கிறான்,‘அம்மா எப்பவும் மேகிதான் செய்வாங்க’
 • விசாரித்தபோது, அவனுக்கு நிஜமாகவே இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, ரொட்டி, பூரி எதுவும் தெரியவில்லை. ப்ரெட், மேகி என்றால் தெரிகிறது
 • பெங்களூருவில் மேற்கத்திக் கலாசாரத் தாக்கம் அதிகம் என்று தெரியும், ஆனாலும் இட்லி தோசை அறியாத குழந்தை (எனக்கு) அதிசயமாகப் பட்டது
 • ’அப்பா, உன் லாப்டாப் ஏன் டர்ட்டியா இருக்கு?’ என்கிறாள் சின்ன மகள், மேலே படிந்திருக்கும் தூசியைதான் சொல்லியிருப்பாள் என நம்புகிறேன் :>
 • வூட்டம்மா நித்யஸ்ரீ கச்சேரிக்குப் போய் வந்தார். அவர் கருப்பா சிவப்பா என்பதுபற்றி யாரிடமோ ஃபோனில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்
 • இந்த சிடி தயாரிப்பாளர்கள் எந்த அடிப்படையில் விலை வைக்கிறார்கள், 2 மணி நேர ப்ரொக்ராமும் 150 ரூ, 20 மணி நேர ரெக்கார்டிங்கும் 150 ரூ
 • நங்கைக்கு மோசிக்கீரனார் கதை சொல்கிறேன்.‘முரசுக் கட்டில்’ என்பதை அவளுக்கு விளக்க ரொம்ப மெனக்கெட்டேன், ஏதேதோ படமெல்லாம் வரைந்தும் முடியல|1
 • நான் சிரமப்படுவதைப் பார்த்து அவளே முன்வந்து துயர் தீர்த்தாள், ‘நான் டெய்லி ஸ்கூல் பை வைக்கறமாதிரி முரசுக்கு ஒரு ஸ்டாண்ட், அதானேப்பா?’ |2
 • சட்டென்று அதைப் பிடித்துக்கொண்டேன், ‘நீ டெய்லி ஸ்கூல் பை வைக்கற எடத்துல யாராச்சும் வேற பையை மாட்டினா என்ன செய்வே?’ ‘பிச்சுப்புடுவேன்’ |3
 • ’ஆனா அந்த ராஜா, அப்படிக் கோபப்படலையாம், முரசுக் கட்டில்ல தூங்கின புலவர் இன்னும் நல்லாத் தூங்கட்டும்ன்னு விசிறிவிட்டானாம்’ |4
 • ’எல்லாம் சரி, புலவர் வந்தபோது அந்தக் கட்டில் ஏன் காலி? முரசு எங்கே போயிருந்தது, அதைச் சொல்லு’ என்கிறாள், எங்க ஸ்கூல்ல சொல்லித்தரலையே|5/5

August 2012 : Week 1

 • மேகம் கொட்டட்டும் : SPB வெர்ஷன் > கமல் வெர்ஷன், ராஜா கைய வெச்சா : கமல் > SPB, சாந்துப்பொட்டு : Tie :>
 • மெட்டாவது, வரியாவது, வெறும் தாளத்திலேயே பாட்டின் சூழலைக் கொண்டுவரமுடியும், உதாரணங்கள்: கருத்த மச்சான், பருவமே, ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
 • A colleague says ‘2 years in this office, anyone will be ready to join a political party’. Haha, but he is right 😉
 • வாலியின் உதவியாளர் பெயர் சுவாமிநாதன்,அவரைப் பார்க்கும்போதெல்லாம்’ஸ்வாமிநாத பரிபாலயமாம்’ என்ற தீட்சிதர் பாடலைப் பாடி வரவேற்பாராம் இளையராஜா
 • நல்ல டுமீல், நன்றி ககன் :>
 • ‘வந்ததே குங்குமம்’ has an amazing, unusual structure, multi layer song, I would compare it to the ‘பூமாலையே தோள் சேரவா’s of the world
 • yet, ‘வந்ததே குங்குமம்’ was not a big hit, it was part of album where other songs were super duper hits
 • //வந்ததே குங்குமம்// sort of like Michael Bevan in ‘The’ Australian team
 • பொடிதூவி நல்லெண்ணெய் பெய்ததனைக் குழைத்திட்டால் / அடிதூள்தான், தோசைக்கு அணி!
 • ரெண்டு நாளாக பிரிட்டானியா டைம் பாஸில் மயங்கிப்போனேன். உப்பு பிஸ்கோத்துக்கு இத்துணைச் சுவையா!
 • Like Bagyaraj’s dance masters, Raja has composed some songs ONLY to fit Kamal’s voice. #NowPlaying the lovely ‘Sonnapadi KeLu’
 • I think ‘Rajadhi Rajan indha Raja’ song has only drums & similar instruments, otherwise, entire orchestration via ‘thaaLam’ only, can someone confirm?
 • There is a pinterest channel for Tamil old book wrappers? No? There should be one!
 • தமிழ்நாட்டில் எப்போதோ மதுவிலக்கு, உன் இதழ்மட்டும் எப்போதும் விதிவிலக்கு… வைரமுத்து : ராஜாவின் இந்தப் பாட்டு ஞாபகமிருக்கா? :)))
 • அதேமாதிரி பளிச்சென்ற இன்னொரு வரி ‘உன் நாணம், செவ்வானம்’, இதுவும் ராஜா : வைரமுத்துதான் என்று நினைவு
 • இந்தக் ’கொலுசு’க்குதான் தமிழில் எத்தனை பாட்டுகள்! அப்பேர்ப்பட்ட அப்பாடக்கரா அது?!
 • #NowPlaying கறவ மாடு மூணு, 3 சரணங்களையும் பாடுவது ஒரே SPB, ஒரே ஜானகிதான், யார் நம்புவார்கள்? (Now, I am NOT talking about anyone else 😉
 • நானுன்ன நினச்சு ஏங்கினேன், முள்மேல படுத்துத் தூங்கினேன்… ஆனாலும் அஷடு…. வாலி கண்டபடி பின்றாரு!
 • நண்பருடன் Chat, ‘எங்கம்மாவுக்கு உங்க புக்ஸெல்லாம் ரொம்ப பிடிக்கும்’ என்றார்,மகிழ்வதற்குள் ‘அவங்களுக்கு நீயா நானாவும் ரொம்பப் பிடிக்கும்’
 • ஃபேஸ்புக்கில் ஒலிம்பிக் அணிவகுப்பில் எக்ஸ்ட்ராவாக வந்த பெண்ணுக்கெல்லாம் ‘டியர் சிஸ்டர்’என ‘தார்மிகக்கோப லெட்டர்’ எழுதுறார்கள்,100 பிழைகளுடன்
 • ஆட்டோ டிரைவர் எஸ்ஸே ராஜ்குமாரின் தெலுங்குப் பாடல்களாகப் போட்டுப் படுத்தறார். மாற்றச் சொல்ல பயம், பெரிய மீசையெல்லாம் வைத்திருக்கிறார்
 • ஆடதி பொங்கிதே கோட பெட்டிநட்டு, மொகவாடு பொங்கிதே தடிகா கட்டிநட்டு
 • குழந்தைகளுக்குக் கதை சொல்வதைவிடச் சுகமானது, நமக்கு ஏற்கெனவே தெரிந்த கதையை அவர்கள் சொல்ல, ஒண்ணும் தெரியாததுபோல் கேட்பது :>
 • ‘ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே’ பாட்டை ஜானகி பாடும்போது, அவர் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியிருந்தாரோ?
 • Dear collegue, ‘I am on leave today’ is enough, your cousin’s marriage is an unnecessary info :>
 • First time sitting on a bean bag, what’s the big hype all about? It’s not very comfortable!
 • மூன்றாம் உலகப்போர் வாசிக்க ஆரம்பித்தேன், வைரமுத்து இன்னும் ‘தண்ணீர் தேசம்’ நடையில்தான் எழுதுகிறார், 15 வருடம் முன் ருசித்தது
 • மூன்றாம் உலகப்போர் : வாசித்தவரை, ரவி வர்மா எஞ்சினியரிங் டயக்ராம் வரைந்ததுபோல் இருக்கிறது, அக்னிச் சிறகுகள் டைப்
 • I like arunmozhi’s voice, but he is a good rubber stamp, same emotions again and again in every single song. A lot like …… VeNaam.
 • #NowPlaying அந்தியிலே வானம்… #டிவைன்
 • Oops, no ‘Katrumarakkaaran’ songs in this phone. Too bad!
 • Never mind, I got ‘thaalaattudhe vaanam’, going to make a ‘boat / beach / fishers’ songs’ playlist
 • Mr. Gangai Amaran, what lovely songs you got from Raja for every single movie you directed, Thanks!
 • K. Balachandar is the only director to work with MSV, Raja and Rahman? No, there are more, guess 🙂
 • Ok, directors who worked with MSV, Raja and Rahman : K. Balachandar, P. Vasu and Manojkumar 🙂
 • Suresh Krishna, Mani Ratnam worked with Raja, Rahman as MDs, and MSV as a singer
 • Our customer wins an award for best CRM implementation & then they send mail to us ‘we transfer this award to you, ‘coz you did all the work’. Nice!
 • My colleague Venky presented a really great session on KANO model, need to google for more
 • Trying to explain wireless Internet to @nangain , she compares it to her mother’s kolusu sound, which she can hear from kitchen :>
 • எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் ஒரே ஒரு (Official / Unofficial) கணவன் அல்லது மனைவிமட்டுமே உள்ள மெகா சீரியல்கள் ஏதேனும் உள்ளனவா?
 • MSV / ராஜா / ரஹ்மான் மூவரிடமும் வேலை பார்த்த ஓர் இயக்குனராக ஸ்ரீதர் ஆகவிருந்தார். கொடுத்துவைக்கவில்லை #பழங்கதை
 • இன்று அலுவல் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உள்ளே பலர் வளவளாவென்று பேச வெளியே பொழுதுபோக்குக்கென ஒரு வித்தியாசமான ஏற்பாடு |1
 • வரிசையாக மேஜைகள் போட்டு, கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் பல வைக்கப்பட்டிருந்தன, அவற்றை விளக்கச் சிலரும் காத்திருந்தனர் |2
 • உதாரணமாக, நம்ம ஊர் பம்பரம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி, இன்னும் நாம் கேள்விப்படாத பலது |3
 • கொட்டாங்குச்சியில் கயிற்றைக் கட்டிக் காலில் மாட்டிக்கொண்டு நடக்கும் ஒரு ஆட்டம், பிரமாதமாக இருந்தது, தமிழகத்திலும் உண்டோ? |4
 • மக்கள் பிரமாதமாக ரசித்தனர், கார்ப்பரேட் நிகழ்ச்சியில் இப்படி ஒரு புதுமை ‘ரிலாக்ஸ்’ அம்சத்தைச் சேர்க்க எவருக்குத் தோன்றியதோ, வந்தனம்! |5/5
 • மின்னஞ்சல் குழுமங்களில் 1 வரி பதிலுக்கு 20 வரி Signature text பார்த்தால், ட்விட்டரை விழுந்து சேவிக்கத் தோன்றுகிறது
 • ஆபீசில் சுடோகு போட்டி, கலந்துகொள்ளலாம் என்று ஆசையாகப் பெயர் கொடுத்தால், ‘நீங்க நடுவரா இருக்கமுடியுமா?’ என்கிறார்கள். டாய்ய்ய்ய்ய்!
 • On second thoughts, சுடோகு போட்டிக்கு எதுக்கு நடுவர்? #சேதுராமன்கிட்டரகசியமா?
 • சுடுவதில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களா? தேவா, ஹாரிஸ் ஜெயராஜுக்குதானே?
 • நங்கையின் பள்ளியில் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வந்துள்ளது, ’அடடே’ என்று தேடிச் சென்று க்ளிக் செய்ததும் எர்ரர். சுத்தம்!
 • ’ஸ்ரீராகவேந்திரா’வுக்கு டயலாக் எழுதத் தொடங்கியது க்ரேஸி மோகனாம், அப்புறம் வேறு யாரோ (?) முடித்தார்களாம்
 • தேவன், கிவாஜ, வாலி … நல்ல வரிசை, நன்றி கிரேஸி!
 • ‘ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்’ பல்லவியை (அதே வரிகளை) மூவர் மூன்று முறை பாடுகின்றனர், முறையே வெண்கலம், வெள்ளி, தங்கம்
 • ராக்‌ஷஸி என்றால்? நிலவில் உள்ள கற்களைச் சொல்றாங்களோ? #உ(ந)ச்சரிப்பு
 • லாண்ட்மார்க் Q நீளம். பொழுதுபோக கோபிநாத்தின் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன், ஜெயகாந்தனைக்கூட படுமொக்கையாகப் பேட்டி எடுப்பதற்கு இவரால் முடிகிறது
 • /கோபிநாத் பேட்டிகள்/ மிக மேலோட்டமான,க்ளிஷேமலி எழுத்து,கிட்டத்தட்ட டெஸ்க் வொர்க்,3ம் தர presentation,இவர் எப்படி இத்தனை பிரபலமானார்?
 • ‘பாத கொலுசு’ பாடலின் மெட்டும் SPB குரலும், அவள் பாதத்தில் அப்படியே விழுந்து பணியும் தொனியில் தொடங்கிப் படிப்படியாக மேலெழுந்து வரும் அழகு, அடடா!
 • ‘வா வெண்ணிலா’வுக்கும் ‘வானுயர்ந்த சோலையிலே’க்கும் ஒற்றுமையென்ன கூறு :>
 • வா வெண்ணிலா, வானுயர்ந்த சோலையிலே obvious ஒற்றுமைs : Mohan,SPB,Raja. Not so obvious, S. Janaki’s humming represents the missing girl
 • இப்போதுதான் கவனித்தேன், ‘யாரோ யாரோடி’ பாட்டில் ஒரு வரி ‘சல்லிக்கட்டு’ என்கிறது, கிரந்தம் தவிர்த்தது ரஹ்மானா, வைரமுத்துவா?
 • வைரமுத்துவின் சாதனை, தமிழ் சினிமாவில் பாட்டுப்பாடும் அனைவரையும் தீவிர சிந்தனையாளர்களாக்கியது, இதையே நாபா எழுத்தில் செய்தார் 😉
 • எஸ்ஸே ராஜ்குமாரும் ரமேஷ் கண்ணாவும் ஒன்றே
 • ’சிறுத்தை புலி’ன்னு ஒரு படமாம். ஒண்ணு, நடுவுல கமா போடுங்க, இல்லாட்டி ‘ப்’ போடுங்க
 • வயர்லெஸ் கீபோர்டு வாங்கியாச்சு, கூடவே வயர்லெஸ் மவுஸும் வாங்கியாகணும் என்று கட்டாயப்படுத்துவது அராஜகம்
 • Milletsபற்றி இன்று படித்தது. தமிழாக்கம் சரியா? Great Millet : சோளம், Spiked Millet : கம்பு, Finger Millet : கேழ்வரகு |1
 • Foxtail Millet : தினை, Little Millet: சாமை, Kodo Millet : வரகு, Barnyard Millet : குதிரைவாலி |2/2
 • ’ஆழ்வார்களின் மாவா’ என்று ராஜஸ்தானில் ஓர் இனிப்புப் பண்டம் உள்ளதாம்
 • அப்புவுக்கு 2, ராஜாவுக்கு 3 என 5 பாடல்களையும் பாடுவது ஒரே SPBதான், ஆனால் எத்துணை வித்தியாசம்! குரல் போதாது, intelligence வோணும்

July 2012 : Week 4

 • Free vs. paid: Would Twitter be better if you paid for it? Excellent Idea. I am ready to pay for Twitter, if they get rid of celebrities
 • @ Oracle cafeteria, fastest selling item here is, kadala Barbi :))
 • Already I am so bad in socializing, now meeting an ex colleague as a direct competitor’s employee, suththam!
 • ஆஹா! கராச்சி பிஸ்கோத்து! என்னா வாசனை! என்னா ருசி! #ஹைதராபாதிலிருந்து :>
 • கார்த்திக் ராஜா பிரியர்கள் அவரது புது ஆல்பம் ‘வெயிலோடு விளையாடு’ தேடிக் கேட்கலாம்.அவர் ஸ்டைல் ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் அட்டகாச மெலடி ஒன்றுண்டு
 • தமிழில் நீர் ஊர்திகள்: புணை,பரிசல்,கட்டுமரம்,ஓடம்,அம்பி,திமில்,பஃறி,தோணி,படகு,நீர்மாடம் (பள்ளியோடம்),நாவாய்,வங்கம்,கப்பல் (from TamilVU)
 • வாலியின் ‘நினைவு நாடாக்கள்’ புத்தகத்தை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். பக்கத்துக்குப் பக்கம் அபூர்வ செய்திகள், ‘துக்கடா’க்கள்!
 • Anyone wrote a book on ‘how to understand Form 16’? No? Guess no one understands them :>
 • On second thoughts, why should we understand form 16? There are better things to do!
 • Silent observed few fresher interviews, students should learn to communicate, present confidently. Most times it wins ahead of coding skill
 • I hate Nescafe. And then, I hate all machine coffees. Finally I hate powdered milk coffees. Yes, I am a south Indian
 • ‘பேச்சோ மணி’ கடையில் மதிய உணவு #TacoBell
 • ட்டூவீலரில் செல்லும் காதலர்காள், இத்தனை ஈஷலுக்கு நடுவே விபத்தின்றி வண்டியோட்டுவது பெரும் சாதனைதான்
 • Got a call from organizer of a painting fun event I registered my daughter. She asked a strange question |1
 • ‘Sir, are you okay if we invite kids from some NGO Schools to this same event?’ |2
 • I said, ‘Sure, but why are you asking me? You are the organizer!’. Her answer, ‘Yes, but last time when we did it, we faced a problem’ |3
 • ‘Many parents were not comfortable when their kids had to mix with underprivileged children. They complained loud.’ |4
 • Felt very bad to hear this story. What are they afraid of? What’s wrong in those kids mixing for few hours? 😦 |5
 • இன்று ஒரு சிலம்ப ஆசிரியருடன் ஒன்றரை மணி நேரம் அரட்டை. மிகச் சுவாரஸ்யமாகப் பல விஷயங்களைக் கொட்டினார். புத்தகம் எழுதவிருக்கிறார்
 • சின்னவள் வார்த்தைகளில் இருந்து முன்னேறி வாக்கியங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டாள். கொண்டாடுகிறோம்!
 • #NowPlaying ‘வா வா அன்பே, பூஜை உண்டு’, மிஸ்டர் யேசுதாஸ், இது சந்தோஷப் பாட்டு, ஏன் ஓய் அழுதுவடியறீர்? (கிரேஸி மோகன் குரலில் படிக்கவும்)
 • ஜூன் 27 நான் எழுதிய மெயிலுக்கு இன்று பதில் எழுதியிருக்கிறார் @writermugil , முதல் வரி ‘என்னுடைய புயல் வேக ரிப்ளைக்கு மன்னிக்கவும்’ :>
 • ஜெ, மசெ, ஸ்யாம், மாருதி, அரஸ், கரோ, செல்லம், நடனம், சசி, பத்மவாசன்… அது ஒரு கனாக்காலம், இப்ப தமிழ்ப் பத்திரிகைகளில் ஓவியங்கள் அபூர்வம்!
 • நெட்டில் ‘ஃபோட்டோ ஆல்பம்’ என்று எதைப் போட்டாலும் மக்கள் பார்த்துவிடுகிறார்கள்போல. டிஜிட்டல் கேமரா, காசா,பணாமா, 1க்கு 50 க்ளிக், என்சாய்!
 • சகட்டுமேனிக்கு எல்லா விழாக்களுக்கும் ஃபோட்டோ ஆல்பம், கண்டதையும் ஒரே கோணத்தில் 20 ஃபோட்டோக்கள், என்ன பிரயோஜனம்? ஸ்டோரேஜுக்குக் கேடு
 • திருவ(அ)ல்லிக்கேணியைப் பற்றி இத்தனை ஆழ்வார் பாடல்களா! இந்த ஊரைப் பற்றி வரலாற்றுப் புத்தகம் ஏதும் உளதா?
 • ’சாய்ந்து நீ பார்க்கிறாய்’ என்பது வேறு, ‘சாய்த்து நீ பார்க்கிறாய்’ என்பது வேறு, இடுப்பு எனில் முதலாவது, தலை எனில் இரண்டாவது, இல்லையா?!
 • குவை = குவியல்… இந்த வார்த்தைக்கு என்ன குறைச்சல்? ஏன் வழக்கொழிந்தது?
 • ‘அக்காவோட சண்டை போடாதடி’ என்றால், ‘நீயும் அம்மாவும் சண்டை போட்டா நாங்க எதாவது சொல்றமா?’ என்று எதிர்க்கேள்வி வருகிறது #எனக்குத்தேவதான்
 • ஃபேஸ்புக் ஓபன் பண்ணாலே ஸ்விட்ச் போட்டாப்ல நெகிழ ஆரம்பிச்சுடுவாங்களா? படுத்தறாங்க யுவர் ஆனர்!
 • இளையராஜா, ரஹ்மான் பங்களிப்புடன் ஒலிம்பிக்ஸ் ஆரம்பமாம். ஆளுக்கொரு கோல்ட் மெடல் தருவாங்களா?
 • மனைவியார் வரலட்சுமி விரத கேஸட்டைத் தேடி எடுத்துத் தூசு தட்டுகிறார். ’ஏன்? எம்பி3 இல்லையா?’ என்றேன், முறைக்கிறார்
 • ’பக்த துருவன் என்று கட்டுரை எழுதிவிட்டு அதைப் போலிஸ் செய்திக்கு அனுப்பாதே’ என்பது வாத்தியார் வாக்கு
 • ‘ஒருவர்மீது குற்றம் சாட்டுகிறாயா? அதற்கு நீ 3 வகை ஆதாரங்களில் ஒன்றையாவது காட்டணும்’ என்கிறது பெரியபுராணம் |1/3
 • அந்த மூன்று ஆதாரங்கள்: ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி |2/3
 • ஒன்று, அவர் தர்ம நெறிகளை மீறிவிட்டார் என்று சொல், அல்லது, document evidence காட்டு, அல்லது eye witness அழைத்து வா |3/3
 • ‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியின் மூன்றில் ஒன்றும் காட்டுவாய்’ என்ன
 • ஹரியண்ணா மெயில் ஒன்றில் வாசித்தது: எதிர்மறுத்து என்பதே ‘எதிர்மறை’ ஆனது,’நேர்மறுத்து’ என்பது சரியல்ல,ஆகவே ‘நேர்’ போதும்,’நேர்மறை’ வேண்டாம்
 • ஹரியண்ணா மெயில் ஒன்றில் வாசித்தது: கருப்பு = நிறம், கறுப்பு = குணம் (கறுவுதல்). உதாரணங்கள்: கருப்புக் கொடி, கறுப்புப் பணம்
 • When you have tons of creativity, who needs new sounds? Listen to all the nonlyrics portion of ‘குங்குமம் மஞ்சளுக்கு’, simply stunning!
 • Raja is an engineering marvel, with exactly the same ‘Bill Of Materials’, he makes totally different ‘Finished Goods’ everytime!
 • இன்று மதியம் ட்ரெய்னிங் வகுப்பு நண்பர்களுடன் பிட்ஸா லஞ்ச். அப்போது அங்கே ஒரு முதியவர் வந்தார், மகள் திருமண வரவேற்புக்கு பிட்ஸா ஆர்டர் |1
 • அவருக்கு பிட்ஸாபற்றி எதுவும் தெரியாது என்று அவரே சொன்னார், ஆனால் விருந்தில் அதுவும் வேண்டும் என்று வீட்டில் பிறர் விருப்பமாம் |2
 • ’மத்த ஐட்டமெல்லாம் எனக்கு நல்லாத் தெரிஞ்ச சமையலாள், அதட்டி மெரட்டி க்வாலிட்டியா செய்ய வெச்சுடுவேன், நீங்க எப்படி?’ என்று ஆரம்பித்தார் |3
 • ’அங்கேயே உங்க அடுப்பைக் கொண்டுவந்து வெச்சு பிட்ஸா செஞ்சு பரிமாறிடுவீங்களா?’ என்றார் அடுத்து, கடைக்காரர் மறுத்தார் |4
 • ’எங்க அடுப்பெல்லாம் ரொம்பப் பெருசு சார், கொண்டுவரமுடியாது, இங்கேயே செஞ்சு கரெக்ட் டைம்க்கு டெலிவரி கொடுத்துடறோம்’ |5
 • ’அதெப்படி? ஆறிடுமே’, ‘ஆறாது சார், அதுக்கு நான் கேரண்டி.’ … அவருக்கு நம்பிக்கை வரவில்லை, யோசித்துவிட்டு டக்கராக ஒரு விஷயம் சொன்னார் |6
 • ’முதல் பிட்ஸாவுல ஒரு பீஸ் நான் சாப்பிடுவேன், அப்புறம் கடைசி பிட்ஸாவுல ஒரு பீஸ், ரெண்டும் ஒரே டேஸ்ட்ல இல்லாட்டி காசு தரமாட்டேன்’ |7
 • அப்போது நீங்கள் அந்தக் கடைக்காரரின் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும் :)))) இதுமாதிரி கஸ்டமர்கள் உள்ளவரை கடைகள் ராஜ்ஜியம் நடக்காது 😉 |8/8
 • 65536 Rows கொண்ட Excel Sheet யாராவது எழுதியதுண்டா? #டவுட்டு
 • க்ஷணப்பித்தம்ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்தியதுண்டா? ட்விட்டருக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்!
 • என் டைம்லைனில் ஒரு நல்லவர் சிம்ஃபொனி இசை, ஜான் ஸ்காட் என்றெல்லாம் பேசுகிறார். பயத்தில் உடல் நடுங்குகிறது
 • இயக்குனர் அகத்தியன் ட்விட்டரில் நுழைந்துள்ளார் என அறிகிறேன். இவரும் தத்துவங்கள்தான் எழுதுகிறார். இதில் ஏதோ வாழ்வியல் உண்மை உள்ளது
 • இவங்களே இப்படின்னா, விக்கிரமன் ட்விட்டர் வரும் நாளை எண்ணி நடுங்குகிறேன்
 • பிராமணக் குடும்பத்தில் வாக்கப்பட்ட சிநேகா சிக்கன் விளம்பரத்தில் நடிக்கலாமோ? :>
 • A translation says ‘அவர் பெரும்பாலும் தாமதமாக வருவார்,அதை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்’, original ‘he comes late, we got used to it’ :))
 • அமர் சித்ர கதாவில் ‘Story of Jeevakan’ என்று ஒரு புத்தகம். என்னடான்னு பார்த்தால், ‘சீவக சிந்தாமணி’யாம் :))))
 • ஸ்ரீகாந்தும் அருண் விஜயும் பரஸ்பரம் முதுகு சொறிந்துகொள்வதைப் பார்க்குமளவு தமிழ்த் தொலைக்காட்சி ரசிக மனம் தரந்தாழ்ந்துவிட்டதுபோல :>
 • இனிய காலை. சூரியனைக் காணோம், மழையும் இல்லை, இதமான குளிர், இதுவல்லவோ பெங்களூரு!
 • வைரமுத்துவின் சமீபத்திய பேட்டி ஒன்று. கேள்வி: ‘உங்கள் அடுத்த இலக்கு?’ பதில்: ‘உங்களுக்கே தெரியும்’
 • நாளை அந்தமான் செல்கிறார் நண்பர், அவரை வழியனுப்ப ஒரு (இலக்கணமில்லாத) விருத்தம் எழுதினேன் :> |1
 • அந்தமானைப் பார்த்தாயோ? அவ்வூர்ப் பசுமை ரசித்தாயோ? சிந்தும் இயற்கை எழில்நடுவே, செல்லுலார் ஜெயிலும் கண்டாயோ? |2
 • சொந்த நாட்டின் வளம்நாடி சுதந்தரம் கேட்ட தியாகிகளை, பொந்தில் வாழும் எலிபோலே, பொதித்து வைத்தார் கைதிகளாய் |3/3
 • நண்பர் ஒருவர் அசோகமித்திரன் சிறுகதைகள்பற்றி உரையாற்றுகிறாராம். எனக்குப் பிடித்த கதை எது என்றார், ‘புலிக் கலைஞன்’ என்றேன், உங்களுக்கு?
 • வீட்டுத் தோட்டத்தில் மரி(ரு?)க்கொழுந்து விளைந்துள்ளது. கிள்ளி நுகர்ந்து கிறங்கினேன்!
 • #NowPlaying the perfectest jogging song :>
 • #NowPlaying yet another injection moulded song ‘Maina Maina maaman pidicha Maina’
 • ‘தோள்களில் சாய்ந்தது காதல் கனி’ என்ற இடத்தில் மெட்டு மடங்கும் லாகவம் மொட்டை ஸ்டாம்ப், இது ராஜாதான், எம்மெஸ்வி இல்லை என்கிறதென் மனசு
 • ‘ஜிங்கிடி ஜிங்கிடி’ எழுதினது ராஜாவா? திராபை!
 • Our education system will never come out of Q&A? @nangain ‘s computer science(?) book has a question ‘which is the longest key in keyboard?’
 • ‘Delete key is a key that deletes all characters in the right side of the cursor’ என்று @nangain மனப்பாடம் செய்யும்போது, அழவா சிரிக்கவா?
 • பசவண்ணர், சர்வக்ஞர், அக்கமாதேவி போல் இங்கே கன்னடத்துப் பழைமை இலக்கியங்கள் என்ன என்று யாரைக் கேட்க?