July 2012 : Week 4

 • Free vs. paid: Would Twitter be better if you paid for it? Excellent Idea. I am ready to pay for Twitter, if they get rid of celebrities
 • @ Oracle cafeteria, fastest selling item here is, kadala Barbi :))
 • Already I am so bad in socializing, now meeting an ex colleague as a direct competitor’s employee, suththam!
 • ஆஹா! கராச்சி பிஸ்கோத்து! என்னா வாசனை! என்னா ருசி! #ஹைதராபாதிலிருந்து :>
 • கார்த்திக் ராஜா பிரியர்கள் அவரது புது ஆல்பம் ‘வெயிலோடு விளையாடு’ தேடிக் கேட்கலாம்.அவர் ஸ்டைல் ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் அட்டகாச மெலடி ஒன்றுண்டு
 • தமிழில் நீர் ஊர்திகள்: புணை,பரிசல்,கட்டுமரம்,ஓடம்,அம்பி,திமில்,பஃறி,தோணி,படகு,நீர்மாடம் (பள்ளியோடம்),நாவாய்,வங்கம்,கப்பல் (from TamilVU)
 • வாலியின் ‘நினைவு நாடாக்கள்’ புத்தகத்தை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். பக்கத்துக்குப் பக்கம் அபூர்வ செய்திகள், ‘துக்கடா’க்கள்!
 • Anyone wrote a book on ‘how to understand Form 16’? No? Guess no one understands them :>
 • On second thoughts, why should we understand form 16? There are better things to do!
 • Silent observed few fresher interviews, students should learn to communicate, present confidently. Most times it wins ahead of coding skill
 • I hate Nescafe. And then, I hate all machine coffees. Finally I hate powdered milk coffees. Yes, I am a south Indian
 • ‘பேச்சோ மணி’ கடையில் மதிய உணவு #TacoBell
 • ட்டூவீலரில் செல்லும் காதலர்காள், இத்தனை ஈஷலுக்கு நடுவே விபத்தின்றி வண்டியோட்டுவது பெரும் சாதனைதான்
 • Got a call from organizer of a painting fun event I registered my daughter. She asked a strange question |1
 • ‘Sir, are you okay if we invite kids from some NGO Schools to this same event?’ |2
 • I said, ‘Sure, but why are you asking me? You are the organizer!’. Her answer, ‘Yes, but last time when we did it, we faced a problem’ |3
 • ‘Many parents were not comfortable when their kids had to mix with underprivileged children. They complained loud.’ |4
 • Felt very bad to hear this story. What are they afraid of? What’s wrong in those kids mixing for few hours? 😦 |5
 • இன்று ஒரு சிலம்ப ஆசிரியருடன் ஒன்றரை மணி நேரம் அரட்டை. மிகச் சுவாரஸ்யமாகப் பல விஷயங்களைக் கொட்டினார். புத்தகம் எழுதவிருக்கிறார்
 • சின்னவள் வார்த்தைகளில் இருந்து முன்னேறி வாக்கியங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டாள். கொண்டாடுகிறோம்!
 • #NowPlaying ‘வா வா அன்பே, பூஜை உண்டு’, மிஸ்டர் யேசுதாஸ், இது சந்தோஷப் பாட்டு, ஏன் ஓய் அழுதுவடியறீர்? (கிரேஸி மோகன் குரலில் படிக்கவும்)
 • ஜூன் 27 நான் எழுதிய மெயிலுக்கு இன்று பதில் எழுதியிருக்கிறார் @writermugil , முதல் வரி ‘என்னுடைய புயல் வேக ரிப்ளைக்கு மன்னிக்கவும்’ :>
 • ஜெ, மசெ, ஸ்யாம், மாருதி, அரஸ், கரோ, செல்லம், நடனம், சசி, பத்மவாசன்… அது ஒரு கனாக்காலம், இப்ப தமிழ்ப் பத்திரிகைகளில் ஓவியங்கள் அபூர்வம்!
 • நெட்டில் ‘ஃபோட்டோ ஆல்பம்’ என்று எதைப் போட்டாலும் மக்கள் பார்த்துவிடுகிறார்கள்போல. டிஜிட்டல் கேமரா, காசா,பணாமா, 1க்கு 50 க்ளிக், என்சாய்!
 • சகட்டுமேனிக்கு எல்லா விழாக்களுக்கும் ஃபோட்டோ ஆல்பம், கண்டதையும் ஒரே கோணத்தில் 20 ஃபோட்டோக்கள், என்ன பிரயோஜனம்? ஸ்டோரேஜுக்குக் கேடு
 • திருவ(அ)ல்லிக்கேணியைப் பற்றி இத்தனை ஆழ்வார் பாடல்களா! இந்த ஊரைப் பற்றி வரலாற்றுப் புத்தகம் ஏதும் உளதா?
 • ’சாய்ந்து நீ பார்க்கிறாய்’ என்பது வேறு, ‘சாய்த்து நீ பார்க்கிறாய்’ என்பது வேறு, இடுப்பு எனில் முதலாவது, தலை எனில் இரண்டாவது, இல்லையா?!
 • குவை = குவியல்… இந்த வார்த்தைக்கு என்ன குறைச்சல்? ஏன் வழக்கொழிந்தது?
 • ‘அக்காவோட சண்டை போடாதடி’ என்றால், ‘நீயும் அம்மாவும் சண்டை போட்டா நாங்க எதாவது சொல்றமா?’ என்று எதிர்க்கேள்வி வருகிறது #எனக்குத்தேவதான்
 • ஃபேஸ்புக் ஓபன் பண்ணாலே ஸ்விட்ச் போட்டாப்ல நெகிழ ஆரம்பிச்சுடுவாங்களா? படுத்தறாங்க யுவர் ஆனர்!
 • இளையராஜா, ரஹ்மான் பங்களிப்புடன் ஒலிம்பிக்ஸ் ஆரம்பமாம். ஆளுக்கொரு கோல்ட் மெடல் தருவாங்களா?
 • மனைவியார் வரலட்சுமி விரத கேஸட்டைத் தேடி எடுத்துத் தூசு தட்டுகிறார். ’ஏன்? எம்பி3 இல்லையா?’ என்றேன், முறைக்கிறார்
 • ’பக்த துருவன் என்று கட்டுரை எழுதிவிட்டு அதைப் போலிஸ் செய்திக்கு அனுப்பாதே’ என்பது வாத்தியார் வாக்கு
 • ‘ஒருவர்மீது குற்றம் சாட்டுகிறாயா? அதற்கு நீ 3 வகை ஆதாரங்களில் ஒன்றையாவது காட்டணும்’ என்கிறது பெரியபுராணம் |1/3
 • அந்த மூன்று ஆதாரங்கள்: ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி |2/3
 • ஒன்று, அவர் தர்ம நெறிகளை மீறிவிட்டார் என்று சொல், அல்லது, document evidence காட்டு, அல்லது eye witness அழைத்து வா |3/3
 • ‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியின் மூன்றில் ஒன்றும் காட்டுவாய்’ என்ன
 • ஹரியண்ணா மெயில் ஒன்றில் வாசித்தது: எதிர்மறுத்து என்பதே ‘எதிர்மறை’ ஆனது,’நேர்மறுத்து’ என்பது சரியல்ல,ஆகவே ‘நேர்’ போதும்,’நேர்மறை’ வேண்டாம்
 • ஹரியண்ணா மெயில் ஒன்றில் வாசித்தது: கருப்பு = நிறம், கறுப்பு = குணம் (கறுவுதல்). உதாரணங்கள்: கருப்புக் கொடி, கறுப்புப் பணம்
 • When you have tons of creativity, who needs new sounds? Listen to all the nonlyrics portion of ‘குங்குமம் மஞ்சளுக்கு’, simply stunning!
 • Raja is an engineering marvel, with exactly the same ‘Bill Of Materials’, he makes totally different ‘Finished Goods’ everytime!
 • இன்று மதியம் ட்ரெய்னிங் வகுப்பு நண்பர்களுடன் பிட்ஸா லஞ்ச். அப்போது அங்கே ஒரு முதியவர் வந்தார், மகள் திருமண வரவேற்புக்கு பிட்ஸா ஆர்டர் |1
 • அவருக்கு பிட்ஸாபற்றி எதுவும் தெரியாது என்று அவரே சொன்னார், ஆனால் விருந்தில் அதுவும் வேண்டும் என்று வீட்டில் பிறர் விருப்பமாம் |2
 • ’மத்த ஐட்டமெல்லாம் எனக்கு நல்லாத் தெரிஞ்ச சமையலாள், அதட்டி மெரட்டி க்வாலிட்டியா செய்ய வெச்சுடுவேன், நீங்க எப்படி?’ என்று ஆரம்பித்தார் |3
 • ’அங்கேயே உங்க அடுப்பைக் கொண்டுவந்து வெச்சு பிட்ஸா செஞ்சு பரிமாறிடுவீங்களா?’ என்றார் அடுத்து, கடைக்காரர் மறுத்தார் |4
 • ’எங்க அடுப்பெல்லாம் ரொம்பப் பெருசு சார், கொண்டுவரமுடியாது, இங்கேயே செஞ்சு கரெக்ட் டைம்க்கு டெலிவரி கொடுத்துடறோம்’ |5
 • ’அதெப்படி? ஆறிடுமே’, ‘ஆறாது சார், அதுக்கு நான் கேரண்டி.’ … அவருக்கு நம்பிக்கை வரவில்லை, யோசித்துவிட்டு டக்கராக ஒரு விஷயம் சொன்னார் |6
 • ’முதல் பிட்ஸாவுல ஒரு பீஸ் நான் சாப்பிடுவேன், அப்புறம் கடைசி பிட்ஸாவுல ஒரு பீஸ், ரெண்டும் ஒரே டேஸ்ட்ல இல்லாட்டி காசு தரமாட்டேன்’ |7
 • அப்போது நீங்கள் அந்தக் கடைக்காரரின் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும் :)))) இதுமாதிரி கஸ்டமர்கள் உள்ளவரை கடைகள் ராஜ்ஜியம் நடக்காது 😉 |8/8
 • 65536 Rows கொண்ட Excel Sheet யாராவது எழுதியதுண்டா? #டவுட்டு
 • க்ஷணப்பித்தம்ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்தியதுண்டா? ட்விட்டருக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்!
 • என் டைம்லைனில் ஒரு நல்லவர் சிம்ஃபொனி இசை, ஜான் ஸ்காட் என்றெல்லாம் பேசுகிறார். பயத்தில் உடல் நடுங்குகிறது
 • இயக்குனர் அகத்தியன் ட்விட்டரில் நுழைந்துள்ளார் என அறிகிறேன். இவரும் தத்துவங்கள்தான் எழுதுகிறார். இதில் ஏதோ வாழ்வியல் உண்மை உள்ளது
 • இவங்களே இப்படின்னா, விக்கிரமன் ட்விட்டர் வரும் நாளை எண்ணி நடுங்குகிறேன்
 • பிராமணக் குடும்பத்தில் வாக்கப்பட்ட சிநேகா சிக்கன் விளம்பரத்தில் நடிக்கலாமோ? :>
 • A translation says ‘அவர் பெரும்பாலும் தாமதமாக வருவார்,அதை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்’, original ‘he comes late, we got used to it’ :))
 • அமர் சித்ர கதாவில் ‘Story of Jeevakan’ என்று ஒரு புத்தகம். என்னடான்னு பார்த்தால், ‘சீவக சிந்தாமணி’யாம் :))))
 • ஸ்ரீகாந்தும் அருண் விஜயும் பரஸ்பரம் முதுகு சொறிந்துகொள்வதைப் பார்க்குமளவு தமிழ்த் தொலைக்காட்சி ரசிக மனம் தரந்தாழ்ந்துவிட்டதுபோல :>
 • இனிய காலை. சூரியனைக் காணோம், மழையும் இல்லை, இதமான குளிர், இதுவல்லவோ பெங்களூரு!
 • வைரமுத்துவின் சமீபத்திய பேட்டி ஒன்று. கேள்வி: ‘உங்கள் அடுத்த இலக்கு?’ பதில்: ‘உங்களுக்கே தெரியும்’
 • நாளை அந்தமான் செல்கிறார் நண்பர், அவரை வழியனுப்ப ஒரு (இலக்கணமில்லாத) விருத்தம் எழுதினேன் :> |1
 • அந்தமானைப் பார்த்தாயோ? அவ்வூர்ப் பசுமை ரசித்தாயோ? சிந்தும் இயற்கை எழில்நடுவே, செல்லுலார் ஜெயிலும் கண்டாயோ? |2
 • சொந்த நாட்டின் வளம்நாடி சுதந்தரம் கேட்ட தியாகிகளை, பொந்தில் வாழும் எலிபோலே, பொதித்து வைத்தார் கைதிகளாய் |3/3
 • நண்பர் ஒருவர் அசோகமித்திரன் சிறுகதைகள்பற்றி உரையாற்றுகிறாராம். எனக்குப் பிடித்த கதை எது என்றார், ‘புலிக் கலைஞன்’ என்றேன், உங்களுக்கு?
 • வீட்டுத் தோட்டத்தில் மரி(ரு?)க்கொழுந்து விளைந்துள்ளது. கிள்ளி நுகர்ந்து கிறங்கினேன்!
 • #NowPlaying the perfectest jogging song :>
 • #NowPlaying yet another injection moulded song ‘Maina Maina maaman pidicha Maina’
 • ‘தோள்களில் சாய்ந்தது காதல் கனி’ என்ற இடத்தில் மெட்டு மடங்கும் லாகவம் மொட்டை ஸ்டாம்ப், இது ராஜாதான், எம்மெஸ்வி இல்லை என்கிறதென் மனசு
 • ‘ஜிங்கிடி ஜிங்கிடி’ எழுதினது ராஜாவா? திராபை!
 • Our education system will never come out of Q&A? @nangain ‘s computer science(?) book has a question ‘which is the longest key in keyboard?’
 • ‘Delete key is a key that deletes all characters in the right side of the cursor’ என்று @nangain மனப்பாடம் செய்யும்போது, அழவா சிரிக்கவா?
 • பசவண்ணர், சர்வக்ஞர், அக்கமாதேவி போல் இங்கே கன்னடத்துப் பழைமை இலக்கியங்கள் என்ன என்று யாரைக் கேட்க?
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s