August : Week 3

 • Hmm, someone is writing a new book called “The Tao of Twitter” 🙂 #fb Aug 12, 2012
 • கிறு, கின்று, ஆநின்று மூன்றும் சரி, வருகிறான், வருகின்றான், வராநின்றான் எல்லாம் ஒன்றேதான்
 • ‘துப்போ எனத் துணியாம்வகை’ : கம்பன் …. துப்பு : வலிமை, ‘துப்புக் கெட்ட மனுஷன்’க்கு இப்போ அர்த்தம் புரிந்துகொண்டேன் 🙂
 • யுத்தகாண்டம் படிக்கும்போது கம்பர் கிரிக்கெட் வர்ணனை செய்தால் எப்படி இருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது 🙂
 • ‘மானின் இருகண்கள்’ பாட்டில்வரும் ‘மொய்குழல்’க்கு அர்த்தம்தேடினேன்,அடர்ந்த கூந்தலாம்,திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பயன்படுத்தியுள்ளார்
 • Pakistan didn’t win a single medal? Not even in high jump? 😉
 • ’எல்லா முத்தத்துக்கும் விலை உண்டு, ஒரே ஒரு முத்தத்தைத் தவிர’ என்கிறார் பகழிக்கூத்தர் |1
 • ’உன் கனிவாய் முத்தம் தனக்கு விலையில்லை, முருகா, முத்தம் தருகவே’ என்று அவர் பாடுவது, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் :> |2
 • தமிழில் ‘முத்தம்’ என்றால், Pearl Or Kiss, ரெண்டையும் சேர்த்த பகழிக்கூத்தர் : முத்தம் சொரியும் கடல் அலை வாய் முதல்வா, முத்தம் தருகவே |3
 • முத்துகள் நிரம்பிப் பொழியும் கடல் அலைகள் வந்து சேரும் வாயிலில் உள்ள திருச்செந்தூரில் குடிகொண்டுள்ள குழந்தை முருகா, முத்தம் கொடு! |4/4
 • சின்ன மகளுக்குக் கூட்டல் கணக்குச் சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார் மனைவி.சாப்பிடும்போதும் தூங்கும்போதும் ’5+3 எவ்ளோ?சொல்லு!’ என்கிறார்|1
 • வழக்கம்போல், நான் இதைக் கண்டித்தேன், ‘இன்னும் விரல் மடக்கக்கூட வரலை, சின்னப் பொண்ணைப் படுத்தாதே, பாவம்’ என்றேன், யார் கேட்டார்கள்? |2
 • ’அப்பா, ஒனக்கு ஒண்ணும் தெரியாது, சும்மா இரு!’ என்று அடக்கிவிட்டு, மடங்கியும் மடங்காத விரல்களால் அவள் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள் |3
 • இன்று காலை, என்னை வெறுப்பேற்றுவதற்காகவே, ஒரு காகிதம் முழுக்கக் கூட்டல் கணக்குகளை அம்மாவும் மகளுமாக நிரப்பியுள்ளார்கள் |4
 • சரி, அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று நானும் பார்த்தேன், ‘5 மைண்ட்ல வெச்சுக்கணும், 3 விரல்ல வெச்சுக்கணும், 6, 7, 8’ அவ்ளோதான் |5
 • எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டுவிட்டு, குழந்தை என்னிடம் கேட்டாள், ‘எனக்கு ஒரு கிஃப்ட் வாங்கிக் கொடுப்பா’ |6
 • ’வாங்குவதென்ன, உனக்காக ஓர் அறுசீர் ஆசிரிய விருத்தமே எழுதித் தருகிறேன்’ என்று சமாளித்தேன் 😉 |7
 • அஞ்சும் மூணும் எத்தனையோ, அழகாய் நீயே கணக்கிடுவாய், பிஞ்சு விரல்கள் தமைமடக்கிப் பாங்காய் எண்ணி அறிந்திடுவாய் |9
 • கொஞ்சல் மொழியில் விடைசொல்லிக் காகி தத்தில் எழுதிடுவாய், பஞ்ச வர்ணக் கிளியுனக்குப் பாட்டில் சொன்னேன் ஒருவாழ்த்து! |10/10
 • You can safely ignore articles and blogposts that start with ‘In Today’s Market Place’, 90% of them are junk #IMO
 • சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம் சுதந்’த’ரம்
 • #TwitterIn1947 My New Book “What Independent India Wants” will be released this November, Preorder @ Rs 1.40 : Chetan Bhagat
 • #TwitterIn1947 Dear Gandhiji, Today is My Birthday, Please RT, I will be very happy, Please Please Please Please
 • #TwitterIn1947 நான் இந்தியப் பொண்ணா இருந்ததாலதான் சினிமால பிரபலமாக இவ்ளோ நாளாச்சு : லதா மங்கேஷ்கர்
 • #TwitterIn1947 Bro, your latest movie is excellent, god bless : Raj Kapoor
 • #TwitterIn1947 ’பக்த மீரா’வின் திரைக்கதையை நான் எப்படி எழுதியிருப்பேன் என்றால்…. : பி. ஆர். மகாதேவன்
 • #TwitterIn1947 முதன்முறையாக பாரதியார் சார் எழுதின பாட்டைப் பாடுகிறேன், ஏவிஎம் சார் தயாரிப்பில் : டி. எம். சௌந்தர்ராஜன்
 • #TwitterIn1947 Freedom is not a word, but a sentence : Robin Sharma
 • #TwitterIn1947 RT if you prefer British rulers over Indian rulers
 • #TwitterIn1947 ஜின்னா, ஏன் இப்படி உளர்றே? நீ குடிச்சது ஜின்னா? ரம்மா? : பல கவிஞர்கள் 😉
 • #TwitterIn1947 சுதந்தர இந்தியாவில் புத்தகங்கள் எப்படி விற்குமோ தெரியவில்லை, நான் பிரிட்டனுக்கே சென்று குடியேறப்போகிறேன் : நீரு சவேதிதா
 • #TwitterIn1947 லாகூர் நெடுஞ்சாலையில் ஒரு புளியங்காய் வியாபாரியுடன் தனியே நடந்த அனுபவத்தை நினைத்தாலே கண்ணில் நீர் கோக்கிறது
 • #TwitterIn1947 ஒலிம்பிக்கில் நாலு தங்க மெடல் வாங்கத் துப்பில்லை, உங்களுக்கெல்லாம் சுதந்தரம் ஒரு கேடா? : பலர் 😉
 • #TwitterIn1947 நான் எழுதிய ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகஸ்ட் 19 அன்று வெளியாகும் : ஹிஹி ;))))
 • #TwitterIn1947 இன்று இரவு #365Processல் ‘காந்தி ஒரு PMI’ கட்டுரை வெளியாகும் : @ChPaiyan
 • #TwitterIn1947 இந்த வார ‘நீயா நானா’வில், ‘வெள்ளையனை வென்றது காந்தியா, நேதாஜியா’ சிறப்பு விவாதம்
 • #TwitterIn1947 ’பகலினில் பட்லராய் இரு, இரவினில் ஹிட்லராய் இரு’ : லேட்டஸ்ட் படத்தில் வாலியின் வாலிப வரிகள் ;)))
 • #TwitterIn1947 வெங்காய பக்கோடா, இதைக் கண்டுபிடித்தவனுக்குப் பாதி பாகிஸ்தானைக் கொடுத்துவிடலாம் : @writerpara
 • #TwitterIn1947 அன்புள்ள ஜெயமோகன், காந்திதான் நம் பிரதமராகியிருக்கவேண்டும் என்பது என் கருத்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 • #TwitterIn1947 காந்தி சுதந்தரம் வாங்கித் தந்ததாகச் சொல்கிறார், அதற்கான பத்திரம் இருக்கிறதா? இல்லாவிடில் அவர் ஃப்ராட் : @spinesurgeon
 • #TwitterIn1947 இந்த வார விகடனில் ஆரம்பம், காந்தி எழுதும் ’சுதந்தரத்தின் கதை’
 • #NowPlaying ‘Thenmozhi anbuth Thenmozhi’ song is a super rich plum cake, or இஞ்ச் இஞ்சாப் பார்த்துப் பார்த்துச் செதுக்கின பொற்சிலை
 • #NowPlaying ‘Thenmozhi anbuth Thenmozh’ Tune, singing, orchestration everything very innovative, so much packed in a 5.5 minutes song!
 • ‘கான கருங்குயிலே’ (பூந்தோட்டக் காவல்காரன்) பாட்டுக்கு தொகையறா (மாப்புள்ள, நல்ல புள்ள) பாடுவது யார்? பி. சுசீலாவா?
 • #NowPlaying ‘கவிகள் உனை வடிக்க, (அதனால்) காலமெல்லாம் நிலைத்தாயே’… பக்திப் பாட்டுக்கு நடுவே நைஸாகப் பகுத்தறிவு? 😉
 • இன்றைய எம். எஸ். சுப்புலஷ்மி நிகழ்ச்சிக்கு வழித்துணையும், நிகழ்ச்சி முடிந்தபின் பலாப்பழ ஐஸ்க்ரீமும் தந்த @lalitha_ram வாழ்க :> |1
 • //MS Multimedia Presentation// பெரும்பாலும் புகைப்படங்கள், கச்சேரிப் பதிவுகள், சில வீடியோக்கள் வழியாகச் சுருக்கமான கதை சொன்னார்கள் |2
 • //MS Multimedia Presentation// எனக்குக் கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆகவே நடுவில் கதை தேடிக்கொண்டிருந்தேன் |3
 • //MS Multimedia Presentation// புகைப்படங்களில் 15 வகை ’மைக்’குகளை எண்ணினேன், காலர் மைக், வயர்லெஸ் மைக் தவிர சகலமும் |4
 • /MS Multimedia Presentation/ அன்றைய இந்தியப் பிரபலங்கள் பலர் புகைப்படங்களில் தென்பட்டார்கள், யார் எவர் என Captions இல்லாதது பெரிய குறை |5
 • //MS Multimedia Presentation// எம்.எஸ்.ஸுக்குப் புகைப்படங்கள் உவப்பானவைபோல, வீடியோப்படங்கள் உவப்பில்லைபோல, என் அவதானிப்பு |6
 • //MS Multimedia Presentation// வீடியோ படம் எடுக்கிறவரை, குறிப்பாக க்ளோஸப் எடுத்தால் சங்கடமாகப் பார்க்கிறார், கண் தடுமாறுகிறது |6
 • //MS Multimedia Presentation// ’என்னைச் சுதந்தரமாப் பாட்டுப் பாட விடேன்ய்யா’ என்பதுபோல் ஒரு பாவனை, முகம் திருப்பிக்கொள்கிறார் |8
 • //MS Multimedia Presentation// பாடலுக்கு நடுவே உம்மாச்சி பெயர் வந்தால், அனிச்சையாக அவர் கரம் குவிகிறது, அநேகமாக எல்லா வீடியோவிலும் |9
 • //MS Multimedia Presentation// நிகழ்ச்சியின் குறைகள் என்று பார்த்தால், நடத்தியவர் பேச்சு சுமார், எப்பப்பார் ‘சம்திங் ஸ்பெஷல்’ |10
 • //MS Multimedia Presentation// Contentம் சரிவர ஒருங்கிணைக்கப்படவில்லை, எத்தனை Window தாவல்கள், ஒரு PPT போதுமே |11
 • //MS Multimedia Presentation// நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தோம், எம்.எஸ். பெயரில் பர்ஃப்யூம் விற்றுக்கொண்டிருந்தார்கள் |12/12 (பின்னர் தெரிந்துகொண்டது, எம். எஸ். பெரிய பர்ஃப்யூம் ரசிகையாம், அதனால்தான் இப்படி Brandingபோல)
 • மனைவியார் பூரிக்கட்டையுடன் வருகிறார். சப்பாத்தி இட உட்கார்கிறேன் :> #ட்விட்டர்ப்ரேக்
 • 1 Hour into Embar’s Harikatha and I am a lifetime fan now, He is AMAZING 🙂
 • திருக்குறள் + உரை ஆடியோ புஸ்தகமாம். வரிசையாகக் கேட்பதற்கா அது? ரெஃபரன்ஸ் புத்தகம், ஆடியோவில் ஒத்துவரும் என்று தோன்றவில்லை
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 1. யயாதி (‘காண்டேகர்) 2. ஜனனி (லாசரா) 3. அர்த்தமுள்ள இந்து மதம் (கண்ணதாசன்) |1
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 4. காற்றின் கையெழுத்து (பழநிபாரதி) 5. பாலும் பாவையும் (விந்தன்) 6. கள்வனின் காதலி (கல்கி) |2
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 7. ஜயஜய சங்கர ஹரஹர சங்கர (ஜெயகாந்தன்) 8. நெஞ்சுக்கு நீதி (மு.க.) 9. கோதைத் தீவு (வ.ரா.) |3
 • வாலி சிபாரிசு செய்யும் டாப் 10 புத்தகங்கள் : 10. திருவரங்கன் உலா (புஷ்பா தங்கதுரை) |4/4
 • ‘வாய் கொண்டு சொல்லற்கு ஏற்ற வலி(மை)’ என்கிறார் கம்பர், வெறும் வாய் வீரத்தை எள்ளல் செய்ய இன்றைக்கும் பொருந்தும் 🙂
 • Anybody offering a degree course in common sense? No? They should! #OfficeBlues
 • I signed up for pinterest using my twitter ID, as a result, I get info whenever my twitter friends join pinterest. Very smart 🙂
 • இன்று மாலை நடைக்கு உதித் நாராயண் பாடல்கள்மட்டும் கேட்கலாமா என்று ஒரு யோசனை :>
 • stores count how many ppl visit them, Crossword bookshop counts men, women, children separately, wondering what they do with this data
 • தமிழின் ‘ர’ எழுத்தைக் காட்டி, ‘ஏ’ என்று படித்தாள் சின்னவள். ‘தப்பும்மா’ என்றால் மறுக்கிறாள், ’எங்க மிஸ் அப்படிதான் சொல்லித்தந்தாங்க.’ |1
 • அவள் பள்ளியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பதால், ஏதோ தெரியாமல் உளறுகிறாள் என்று நினைத்தோம். அப்புறம் புத்தகத்தை எடுத்துக் காட்டினாள் |2
 • ஹிந்தியின் ‘ஏ’ (ए), தமிழின் ‘ர’ கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கிறது. இப்ப யார் முட்டாள்? 🙂 |3/3
 • ’பாமினி’ என்ற புராதன Fontல் எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது #அடடே
 • நிஜ வாழ்க்கைல இயல்பாப் பேசறவங்ககூட ஃபேஸ்புக்ல நுழைஞ்சுட்டா கவிதை, தத்வம்ன்னு மாறிடற ரசவாதத்தை ஆராவது ஆராய்ஞ்சு டாக்டர் ஆகலாம்
 • ஒரு biography படிக்க எடுத்தேன், ’கதைநாயகரின் வெளிநாட்டுப் பயணங்கள்’ என்று தனியே ஒரு சாப்டர். அதில் உலக மேப்பே வருகிறது!
 • Pinocchio வெறும் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அது ஒரு நாவலாமே. அந்தக் காலப் படங்களுடன் அட்டகாசமாக உள்ளது, வாங்கிவிட்டேன்
 • உங்கள் முதல் சம்பளத்தின் முதல் ரூபாயை (அல்லது டாலரை) என்ன செய்தீர்கள்? நினைவிருக்கா? :>
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// அதற்குச் சில நாள்கள் முன்பாகக் கையில் பணம் போதாமல் உடன் பணிபுரியும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தேன் |1
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// சம்பளம் வாங்கினதும் முதல் வேலையாக அதைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் அதை வாங்க மறுத்துவிட்டார் |2
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// ’முதல் செலவு இப்படி இருக்கக்கூடாது, கோயிலுக்குப் போய் உண்டியல்ல 1 ரூபா போட்டுட்டு வா’ என்றார் |3
 • //முதல் சம்பளத்தின் முதல் ரூபாய்// அவர் சொன்னபடி செய்தேன், அதன்பிறகே அவர் கடன் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் |4/4
 • ’முதல் சம்பளத்தை என்ன செய்தீர்கள்’ என்று அம்மா, மனைவியைத் (தனித்தனியே) கேட்டேன், ‘எங்க அப்பாகிட்ட கொடுத்தேன்’ என்றார்கள் ஒரேமாதிரி :>
 • A colleague says ‘HR should also be Marketing the company among prospective employees.’ hmm, they should do ‘After Sale Support’ too 🙂
 • ‘சல்வார் கமீஸ் அணிந்த பெண்களே’ என்று எழுதியிருந்தாலும் மெட்டில் உட்கார்ந்திருக்கும்,’சுமந்த’ என்றது வாலியின் குறும்பு :> உடை சுமை 😉
 • Usually Raja uses tabla for regular song& drums for interludes,in ‘yeriyil oru oodam’, for some reason he uses Tabla only in interludes
 • நங்கைக்கு இன்றைய கதை சோழன் நலங்கிள்ளியைப் பற்றி. ‘என்னப்பா, Boyக்குப் போய் Girlமாதிரி பேர் வெச்சிருக்காங்க?’ என்று சிரிக்கிறாள் :>
 • கோவைக்குக் குறும்பயணம், வழி நெடுக, 10 மரங்கள் சேர்ந்தாற்போல் தென்பட்டால் அங்கே ஒற்றையடிப்பாதை அமைத்து ஓர் எஞ்சினியரிங் காலேஜ் உள்ளது
 • ‘கரம், சிரம் புறம் நீட்டாதீர்’… எத்துணை அழகான, நேர்த்தியான வாசகம்!
 • இடுப்பு எலும்பு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவரைச் சுத்தத் தமிழில் ‘அரை வைத்தியர்’ எனலாம் :>
 • ‘அட்ட கத்தி’ என்றால் கிரந்தம் தவிர்த்த எட்டு கத்திகளா? நடுவே ‘க்’ சேர்த்தால் ‘அட்டையால் செய்த கத்தி’ என்று அர்த்தமாகும்
 • After @nangain learnt to read Tamil fluently,this is the first time we are in TN. She is busy reading வடவள்ளி, மரக்கடை, தடாகம் etc.,
 • ரயிலில் பொம்மை விற்கும் பார்வையற்றவர், ரூபிக்க்யூப் விளையாடுவதுஎப்படி என தன் கஸ்டமர்ஒருவருக்குசொல்லித்தருகிறார் #எண்ணங்களுக்கேத்தபடி
 • ஆ! சக பயணி ஒருவர் முந்தின ‘நீயா நானா’ எபிசோட்கள் பற்றி நனவிடை தோய்ந்து சிலாகிக்கத் தொடங்கிவிட்டார், புத்தகம் வாசிப்பதுபோல் எஸ்கேப்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s