Upto September 20

 • Someone talk about the awesomeness of ‘இந்திர சுந்தரியே’ song, please!
 • Hmm, every 3 months someone from ICICI Bank calls me& says ‘I’m your single point of contact for any queries.’ how many single points?!
 • Guy Kawasaki என்று ஒரு கார்ப்பரேட் சுயமுன்னேற்ற எழுத்தாளர், பேரைக் கேட்டாலே பைக்கில் உட்கார்ந்து ஜிவ்வென்று பறக்கிற ஃபீலிங் வரலை?
 • Wrote a long Email to Customer Support, I hope someone reads it at least :>
 • பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன், ‘XYZ (பொது நண்பர்) நம்பர் வேணுமே?’ என்றார், ‘அவர் உங்க உறவுக்காரராச்சே’ என்றேன், நமுட்டுச் சிரிப்பு
 • Happy Birthday @eramurukan 🙂 அரசூர் வமிசத்து அண்ணன்நீர் வாழி / வரமனைத்தும் வாசல் வர
 • இந்திரஜித் போர்க்களம் செல்கிறான், அவனுக்கு வெறியூட்டப் பல வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.அவற்றை அக்கறையாகப் பட்டியல் போடுகிறார் கம்பர்
 • 1. கும்பிகை 2. திமிலை 3. செண்டை குறடு 4. பேரிகை 5. கொடு கொட்டி 6. பம்பை 7. தார்முரசம் 8. சங்கம் 9. பாண்டில் 10. போர்ப்பணவம்
 • 11. தூரி 12. கம்பலி 13. உறுமை 14. தக்கை 15. கரடிகை 16. துடி (உடுக்கை) 17. வேய் 18. கண்டை 19. அம்பலி 20. கணுவை 21. ஊமை 22. சகடை
 • ஒரே பாட்டில் 22 வாத்தியங்கள்!
 • ‘அனுமன்க்கு இங்குஇனி உலகெலாம் இடமிலைபோலும்’ என அனுமன் போர்க்களத்தில் எங்கும் திரிந்த வேகத்தை வியக்கிறார் கம்பர். எனக்கு அகாஸி ஞாபகம்
 • ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் புத்தகமாக்காத தமிழ்ச் சமுதாயம் எப்படி உருப்படும்? #கலக்கறார்மனுஷன்
 • நூறு “Minutes Of The Meeting” ஆவணங்கள் எழுதப்பட்டால், அவற்றில் ஒன்றேன் ஒன்றுதான் படிக்கப்படும் என்பது என் துணிபு
 • திருவோணத்தை முன்னிட்டு ஒரு நாள் முன்பாகவே பாயசத்தை பார்சல் செய்து தந்த சக ஊழியர் நூற்றி இரண்டு வருடம் வாழ்க :>
 • இன்ஃபோசிஸிலிருந்து ஒருவர் எங்க ஆஃபீஸில் சேர்ந்துள்ளார். எப்பப்பார் ‘This is how it is done @ Infy’ அலட்டல் தாங்கலை
 • ராஜா ரஹ்மான் விஸ்வநாதன் மஹாதேவன் எல்லார் பெயரிலும் கிரந்தம் இருப்பது தற்செயலா? :> #ரணகளத்தில்காத்துவாங்க
 • குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார், என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார், அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார், ஆஹா ஆஹா!
 • பிரம்மச்சாரியான அனுமனை ‘பாவை தூர்த்தன்’ (ஒரு பெண்ணின் ஆசை நாயகன்) என்று ஓர் இடத்தில் சொல்கிறார் கம்பர். ஏன்? Guess or Google 🙂
 • Just curious, how did they (who) decided which months should have 30 days and which months should have 31?
 • நாராயணா, இந்த அறிவுஜீவிங்க தொல்லை தாங்கலை நாராயணா!
 • முன்பெல்லாம் நீண்ட வார்த்தைத் தொடர்களைதான் சுருக்குவார்கள். இப்போது மொத்த வாக்கியங்களையும் சுருக்கி ‘EDD TBD’ என்றெஉழுதுகிறார்கள்.OMG
 • கிருஷ்ணகிரியில் Town Busகளுக்கு ‘நகர் வலப் பேருந்து’ என்று பெயரிட்டுள்ளனர். பலே! நல்ல ரசனை
 • ஏகாரம்மட்டும் இல்லாவிடில் அரசியல் போஸ்டர்கள் என்னாகுமோ! #எங்கள்சரித்திரமேetc
 • just saw a poster about stalin ‘குறளோவியத்தின் மருபதிப்பே’ it says :))))))))
 • In my school days, during a new Raja album release, all music shops will play it nonstop.Now @Salem walking for 2hrs, no trace of #NEPV
 • குமுதத்தில் படித்தது, வைகை அணை கட்டப்பட்டபோது அங்கே கூலிக்கு வேலை பார்த்த வறிய சிறுவ(இளைஞ?)ர்களுள் ஒருவர், இளையராஜா
 • குமுதத்தில் படித்தது, இளையராஜாவுக்குப் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’
 • ‘நான் BAல கோல்ட் மெடலிஸ்ட் வாங்கியிருக்கேன்’ என்கிறார் ஒருவர். ஆண்டவா, நான் டிவி பார்த்தாலும் பிழையாவே ஏன் காட்டறே?
 • 5ந்து என்று எழுதும் அதிபுத்திசாலிகள் எதைச் சாதிக்கிறார்கள்?
 • பாஸோடு டீம் லஞ்ச் சென்றோம். அந்த 2மணிநேரத்தை டைம் ஷீட்டில் போட்டால் ’Not Necessary’ என்று ரிஜெக்ட் செய்கிறார். வாட் நியாயம் ய்யார்?:>
 • #NowPlaying ‘நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாஹும்’ என்கிறார் லதா மங்கேஷ்கர். அப்டியே தலைல குட்டத் தோணுது
 • #NowPlaying ‘நிலவுப் பாட்டு’, இதுவும் 6 நிமிஷந்தான், சிக்கலான இசைக்கோவைதான், கொலுசுகள் கீர்த்தனை, யார் அந்த தேவதை! பழநிபாரதி
 • 2nd prelude of ‘VanithamaNi’ is stunning++ #NowPlaying
 • #NowPlaying when ‘1000 malargaLe malarungaL’ starts,how many wait patiently for the great Malaysia Vasudevan to appear in 3rd CharaNam?
 • Those who think Valee is a thanglish poet, try ‘kiNNaththil then vadiththu’. He is a manoranjitham I say!
 • Ok, it’s that time of the week when I listen to ‘Enna Samaiyalo’ at least 3 times #rewind #rewind #rewind
 • சஞ்சீவிமலை கொணர விஸ்வரூபம்எடுக்கிற அனுமன் பிரமாண்டத்தைசொல்லும் கம்பன்உவமை, கோள்களும் நட்சத்திரங்களும் அவன் கழுத்தில் மாலைகளாகிவிட்டன
 • ரெஸ்யூம் அனுப்பிவிட்டு 1 மணி நேரத்தில் ‘எனி அப்டேட்?’ என்று மெயில் அனுப்புவோரே, உதவ நினைப்போரைச் சாபம் கொடுக்கவைக்காதீர்கள் 🙂
 • ’மேதா பட்கர்’ தெரியும், தமிழ்லயும் ‘மேதா’ உண்டு, லட்சுமணனைப் பார்த்து சீதை சொல்கிறாள்,’அறிவு நிறைந்தவனே’ன்னு அர்த்தமாம்,மேதை? மேதாவி?
 • #NowPlaying totally unexpected 2nd interlude @ ‘Vaadi Vethala Paakku’, see the way he stitches it to the charaNam nicely #smartmottai
 • #NowPlaying அய்யய்யய்யய்யே வெக்கத்தப்பாரு மாமாவுக்கு, கட்டிக்கப்போறவ எப்படி இருக்கணும்ன்னு கேட்டா இப்படி வெக்கப்படறிய
 • Shop fella packed our newly bought dress with that plastic hanger. @nangain pointed it to him & he removed it. Wife super angry, haha
 • போன வருடமெல்லாம் உடன் கேக் வெட்ட அனுமதித்த தங்கை, இந்தமுறை சுயமாக வெட்டுகிறாள், @nangain முகம் சுருங்கிப்போச்:)
 • பையன் குனிஞ்ச தலை நிமிரமாட்டான்’ என்றால் இப்போதெல்லாம் வேற அர்த்தம் #ஸ்மார்ட்ஃபோன்
 • புதிதாகச் சந்திக்கும் நபருடைய ரிங் டோன் ராஜா இசைத்தது என்று தெரிந்ததும் ஓர் உடனடி ஒட்டுதல் :>
 • #NowPlaying aNNatha aaduRaar,,, what a great screenplay this movie had!
 • #NowPlaying ‘மாமாவுக்குக் குடுமா’ டபுள்ஆக்‌ஷனில் பின்னிப்பெடலெடுக்கும் மலேசியா வாசுதேவன்& dont miss the way Raja uses whistle in BGM
 • Just 4 hours in a private Engg College, and I have seen enough to write a Novel
 • 18 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் பயணக் கட்டுரை எழுதிவரும் ஒரே எழுத்தாளர் நானாகதான் இருப்பேன் : லேனா தமிழ்வாணன்
 • பாரதியார் பாடல்களை நவீன இசையில் பாடுகிறார்கள், அந்த தொகுப்புக்கு தமிழில் பெயர் வைத்து அட்டையில் அவர் படத்தை(யும்) அச்சிட்டால் என்ன?
 • பாரதியும் விற்பனைப் பொருள். கேவலம்!
 • சுருதி சுத்தமான பாட்டு கேட்டா அன்னிக்கு நல்ல சகுனமாம், வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்துல வருதாம்
 • What is the process to write anonymous tweets? 😉 இன்றைய ’கல்லூரி’ அனுபவங்களை எழுதினாலும் வம்பு, எழுதாட்டியும் மண்டை டமால் :>
 • Teleconf விதிமுறை #128 கொட்டாவி விடும்போது ம்யூட் செய்க!
 • யோவ், என்னதான் ஜோக்ன்னாலும் ‘கோலக்கிளி’யை ‘Rangoli Parrot’ன்னு மொழிபெயர்க்கப்படாது, இங்கே ’கோலம்’ன்னா அழகு
 • ’கோல முகமும் குறு நகையும்’ன்னு தேவர் மகன்ல வாலி எழுதினாரே, அதே வாலி, அதே கோலம் இது 🙂
 • Dear @flipkart, I appreciate your “Music Downloads” newsletter, But why send Rock Music to someone who bought Harikathas from you? 🙂
 • ம்ஹூம், புரியலீங்கோ #மீட்டிங் #கொர்ர்ர்ர்ர்ர்
 • திருவருட்பா புத்தகம் வந்துவிட்டது, ஒரிஜினல் பாடல்களை விட்டுவிட்டு வெறும் உரைகளைமட்டும் அச்சிட்டுள்ளார்கள், என்ன அக்கிரமம் இது?!
 • சொல்லப்போனால் ‘திருவருட்பா’வுக்கு உரையே அநாவசியம், நேரடியாகப் புரியும். உதா:
 • ஈ என்று நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பும், என்னிடம் ஒருவர் ஈதிடு என்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம்
 • மகள் அனிமேஷன் சிடி பார்க்கிறாள். எளிமையான பஞ்சதந்திரக் கதைகளைக்கூடச் சிக்கலாக்கிவிடும் எழுத்தாளர்கள் உளர் என்று உணர்கிறேன்
 • நரசுஸ் நிறுவனத்தார் மிளகாய்ப்பொடி வெளியிட்டுள்ளனர். காரம் மிகுதியாகவும், சுவை மகா திராபையாகவும் உள்ளது. தவிர்ப்பது நல்லது #அட்வைஸு
 • நாடா கொன்றோ;காடா கொன்றோ;ட்விட்டரா கொன்றோ;ஃபேஸ்புக்கா கொன்றோ;கூகுள்+ஸா கொன்றோ;எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை;வாழிய நிலனே
 • கம்ப ராமாயணம் தொடர்பான ஏழெட்டுக் கட்டுரைகள் தொடர்ந்து படித்தால், சுமார் 25 பாட்டுகளைமட்டும்தான் திரும்பத் திரும்ப Quoteடுகிறார்கள்!
 • நரசுஸ் கடைவரை சென்றபின் இன்ஸ்டண்ட் காபி ஏன் வாங்கணும்? பஞ்சாபி தாபாவில் மசால் தோசை தின்றாற்போலிருக்கும் 🙂
 • Wondering how geography patents work. If Thirunelveli Halwa is patented, can’t Cadburys open a factory in Thirunelveli, make & sell it?
 • There should be a law against entering a super market without a shipping list in hand, and against > 10% impulse purchase
 • ‘அதை பேக் செஞ்சு கொடுங்க, குழந்தைங்க கார்ல சாப்பிடுவாங்க’ என்று சர்வரிடம் சொல்கிறார் மனைவி. எங்களிடம் காரே இல்லை #வெட்டிபந்தா :>
 • பனி பெய்வதுபோல் எங்கும் சிறுதுளிகளாகப் போர்த்திவிட்ட மழை, ஆஹா! #பெங்’குளுரு’
 • சன் லைஃப் என்று ஒரு டிவி சேனலா? சில ட்வீட்களில் பார்த்துவிட்டு நான் இன்ஷூரன்ஸ் கம்பெனி என்று நினைத்தேன்
 • நன்றாகதான் தமிழ் பேசுகிறாள், ஆனாலும் ’Awesome’ என்பதை @nangain உச்சரிக்கும் அலட்டல்தன்மை பயமுறுத்துகிறது
 • Yoga accessories shop? Oh!
 • Friend buys a phone, when we quote online price, shop fellow shows a flipkart biz card & says ‘Even flipkart employees buy from us’ :))
 • People still using the ancient 2D Pie Charts in presentations! Unless and until you have ❤ slices in your Pie, It has no effect!
 • ஓர் எழுத்தாளர் தனது புத்தகம் ஒன்றை (முழு text) இலவசமாகத் தருகிறார், அவரிடம் ‘PDF Link Please’ என்று கேட்போருக்கு வெட்கம் இராதோ?
 • காபி, பேஸ்ட் செய்து PDF தயாரித்துக்கொள்ளக்கூடச் சோம்பேறித்தனம், எழுதுபவன் என்றால் அத்தனை அலட்சியம், இந்த வாசகர் குழாம் நாசமத்துப்போக!
 • திருப்பதி லட்டுப் பிரசாதத்தை உதிர்த்து அலுவலகம் முழுக்க அனுப்புவது நல்லவிஷயம். அதைப் பசிநேரத்தில் செய்தால் பாதியில் தீர்ந்துவிடும் :>
 • அன்பர்காள், ‘நாசமத்துப் போ’ என்பது வசைச்சொல் அல்ல, கோபத்தில்கூட ஒருவருக்கு சாபம் தரக்கூடாது என்பதற்காக அப்படிசொல்வது,ஆராயாதீர்கள் 🙂
 • #NowPlaying ‘மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன்’ WOW #ARivumathi #RememberThisSong?
 • P. Susheela, VaNi Jayaram, S. Janaki, K. S. Chitra, SwarNalatha, Shreya Goshal … Guess what this list is about 🙂 I won’t answer :>
 • Just try the two interludes in ‘Ayya Voodu’, so many surprises!
 • ‘பாட்டுச்சொல்லி’ பாடலில் லகரமும் ளகரமும் ழகரமும் அடர்ந்துள்ளன, அதை எழுதிய இளையராஜா எந்த நம்பிக்கையில் சாதனாவைப் பாடவைத்தார்?
 • ‘ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை’.. ஒரு வரியில் ல,ள,ழ,ர,ற எல்லாம் உண்டு, இதை சாதனா எந்த மொழியில் எழுதிவைத்துப் பாடினார்?
 • #NowPlaying Guru Sishyan, SPB sings 2 different songs for Rajni and Prabhu, and sounds like two different ppl, effortless #respect
 • கொடியிலே மல்லியப்பூ’ பாட்டு முழுக்க தயக்கத்தை இழைத்துப் பூசி வைத்திருக்கிறார் ராசா #NowPlaying
 • ‘ரவா உருண்டை’ என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமோ? :> #NowEating
 • இணையத்தில் படித்தது: கன்னியாகுமரி, நாகர்கோவில் பேச்சில் பெண்களை வயதுவித்யாசமின்றிவாடி,போடி,வா,போ,வந்தாள்,போனாள்என்பார்கள்.. அப்டியா?
 • இருமல் உற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிரப்பு :>
 • திருக்குறள் : அதிக பேர் வாசித்த top 5 அதிகாரங்கள்: கடவுள் வாழ்த்து, அன்புடைமை, இல்வாழ்க்கை, கல்வி, வான் சிறப்பு.. Any Pattern?
 • ஒருவர் டிஷர்ட் முதுகில் பாக்கெட் வைத்துள்ளார். எதற்காக இருக்கும்? 🙂
 • “Outstanding Problems”ன்னு யாராவது சொன்னா எனக்குச் சிரிப்பு வரும். உங்களுக்கு?
 • அன்பர் ஒருவர் Leave Applicationல் தன்னுடைய முழு Vacation Travel Plan தந்துள்ளார், ட்ரெயின் நம்பர் உள்பட #நம்புங்க #நல்லவர்
 • பஸ் ஸ்ட்ரைக்.வழக்கமாக செம பிஸியான எங்க பேருந்து நிலையம் இன்று காலி.இதுதான் சான்ஸ்என அதற்கு அருமையா தார்ச்சாலை வேய்ந்துவிட்டனர்.Smart
 • Translating a Kids’ Story titled ‘Where is my Bat?’, Should I translate it as ‘எங்கே என் மட்டை?’ or go for ‘எங்கே என் பேட்?’
 • ’மட்டை’யை ‘பேட்’ என்று எழுதினால் நீங்கள் கோபிக்கிறீர்கள். @nangain ‘நீ ஏன் செவுரைச் சுவர்ன்னு எழுதறே?’ என்று சண்டைக்கு வருகிறாள்
 • நங்கைக்குப் புரியும்படி எழுதுவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. என்னென்னவோ கேள்வி கேட்கிறாள். எழுத்து நடையே மாறிவிடும்போல!
 • Yet another book spoilt by @nangain ‘s காம்ப்ளான் pouring 😦 இந்த கடுப்பில் இன்று முழுக்க கண்ணில் படுவோரையெல்லாம் கடித்துத்துப்புவேன்
 • லலிதா ஜுவல்லரியில் யாரோ கவிஞர் சேர்ந்துள்ளார்போல, லேட்டஸ்ட் விளம்பரத்தில் ஒரு பெண் படம் போட்டு ‘சில்லென்ற சேதாரம்’ என தலைப்பு
 • ஒரு பெரிய தேர். அதன் பிரமாண்டத்தை ‘உலகமே ஏறினாலும் அந்த தேருக்கு பாரமில்லை,ஒரு பெண் தலையில் அணியும் பூமாதிரிதான்’ என்கிறார் கம்பர்:)
 • வையமும் வானும் உரக தேயமும் ஒருங்குடன் ஏறினும், உச்சிச் சொருகு பூ அன்ன சுமை
 • Ok, Let me search for ‘VaLLi vaLLi ena Vandhaan Vadivelanthaan’
 • Hmmm, wife & daughters gift a track suit, for my first #10KRun tomorrow. Pressure pressure :))
 • 10Ked 🙂
 • @ மைசூர் ரோட். ஆங்கிலப் பெயர்ப்பலகைகள் அனைத்தின்மீதும் தார் பூசி ‘கன்னடத்தில் மட்டும் எழுது’ என எழுதியுள்ளனர்,அதுவும் கன்னடத்தில் :))
 • Teaching 2 digit multiplication to @nangain ensoying :))) anyone remember a book called ‘Minnal Vega KaNitham’?
 • “1 நொடிகளில் கணக்குகளுக்கு விடை அறியலாம்” என்று ஒரு புத்தக விளம்பரம். கணக்கு கெடக்கட்டும், தமிழ் எலக்கணம் படிங்க ஆசிரியரே!
 • ’7ஆம் அறிவு’ படம் ஆஸ்கருக்குப் போகுதாமே. என் உல்லம் துல்லுது!
 • //7ஆம் அறிவு to ஆஸ்கர்// ஒருவேளை டைட்டில்ல ‘ஹாசன்’ங்கற பேரைப் பார்த்துப் பழக்க தோஷத்துல தேர்ந்தெடுத்திருப்பாய்ங்களோ? :>
 • Monday mornings can be fun, A colleague writes: “You’ve left 2 spaces between “Japan” & “Office”, extra space is a luxury in Japan” :))
 • No no, there is no word called ‘onlinely’ :>
 • Dear ‘youth’ singers, listen to ‘நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா’ song 200 times, SPB and SwarNalatha teach you how to emote right!
 • Hei, SPB, SwarNalatha again 🙂 #MaadathileKanniMaadathile #IShouldMakeAList
 • ‘மழைவருது குடை கொண்டுவா’ பாட்டுக்குத் துணை, அரை டஜன் பிஞ்சு இடிகளை கிலுகிலுப்பையில் போட்டு மெல்ல குலுக்கினாற்போல் பின்னணிஇசை #ராஜாடா
 • அக்கினிப் பிரவேசத்துக்காக ராமனைத் திட்டுபவர்கள் அந்தக் குறிப்பிட்ட 25 பாட்டுகளை*மட்டும்* படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்
 • 1 MBக்குமேல் அட்டாச்மெண்ட் அனுப்பினால் அவர் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைக்கிற சாஃப்ட்வேர் உண்டா? உடனடித் தேவை!
 • ரிடையரானதும், இதே கம்பெனியில் ஈமெயில் வாத்தியாராகிவிட உத்தேசம் ”We can update it onlinely”ன்னெல்லாம் எழுதறாங்க யுவர் ஆனர்
 • என்னதான் cross selling என்றாலும் ரிலையன்ஸ் தன செருப்புக்கடைகளின் ஒருமூலையில் புத்தகம்விற்பது என் பழமைமனசால் ஏற்கமுடியாததாயிருக்கிறது
 • If a blog’s movie review says ‘Worked for me’ or ‘எனக்குப் பிடித்திருந்தது’ explicitly, watch out 🙂
 • தொந்திக் கணபதியே தொழுதுன்னை அடைந்தோர்க்குச் / சிந்தை தெளிவுறச் செய்
 • ஆனை உம்மாச்சி அருளிருந்தால் இப்புவியில் / ஏனைச் சுகமெல்லாம் எதற்கு?
 • வாகனமாம் மூஞ்சூறில் வையமெல்லாம் சுற்றிவரும் / ஏகதந்தன் அவன்புகழை இயம்பு
 • அப்பம்வடை கொழுக்கட்டை அவல்வெல்லம் சுண்டல் / செப்பமுடன் பாயசம் செய்துவைத்தோம், தப்பாமல் ஓர்விசிட் அடித்திடுவாய் உண்டு மகிழ்ந்திடுவாய் / பார்த்தே பசிதீர்வோம் யாம்
 • ‘அப்பா, மேலே பாரு, வாண வேடிக்கை’ என்கிறாள் @nangain . அழகான தமிழ் வார்த்தை, சொல்லிக்கொடுத்தது நான் இல்லை, டோரா!
 • #NowPlaying ‘காய்ச்சாத பால் நிலா’, what a lovely coinage, I say!
 • OMG, Malaysia sings the charaNams of ‘thoppiloru naadagam nadakkuthu’? I was thinking its Ilayaraja’s voice #facepalm
 • Dear Bank, I did a transaction for Rs 63 and you are asking if I need EMI facility for that. Are you that stupid?!!
 • First skill a good trainer should develop, when to announce the coffee break!
 • ‘மன்னிக்கவும், நீங்கள் மனுஷ்ய புத்திரனுடன் சிநேகிதராகமுடியாது’ என்கிறது ஃபேஸ்புக். அந்த விஷயம் அதுக்கு எப்படித் தெரிந்தது? :>
 • சொற்களை இடுகுறிப் பெயர்களாக எண்ணாமல், காரணப் பெயர்களாக அர்த்தம் புரிந்து பயன்படுத்தினால் ‘புளுங்கல் அரிசி’ என்றெல்லாம் எழுதமாட்டோம்
 • சிலர் நாள்முழுக்கக் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, போரடிக்காது?
 • #BooksIGrewUpWith பூந்தளிர், ரத்னபாலா, கோகுலம், கல்கி, சுஜாதா
 • A partner employee says my hand shake is never firm. Seems he is observing this for few years. Huh! வேற பொழப்பில்லையாய்யா ஒனக்கு?
Advertisements