Upto November 4

 • Wow. People now call T20 matches as boring? நல்லா வேணும்ய்யா ஒங்களுக்கு!
 • பாட்டு லிஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சு, #fruitsongs தொடங்குவோமா? ஆப்பிள் பெண்ணே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, எலந்தப்பழம் எலந்தப்பழம்
 • #fruitsongs பைனாப்பிள் வண்ணத்தோடு, குருவி கொடஞ்ச கொய்யாப்பழம், மாம்பழமாம் மாம்பழம்
 • ஜூன் மாதம் எழுதிய “Oracle Fusion CRM Implementation Specialist” பரீட்சைக்கு இன்று ரிசல்ட் வந்தது. ஆத்தா, நான் பாஸாகிட்டேன் :))
 • Dear God, Why my review comments are longer than the original text? When will I see a content writer who understands our business? #Hmm
 • எல்லாரும் ஏனோ பாரதரத்னா பற்றிப் பேசுகிறார்கள். இளைஞர்கள் கோட்டாவில் அதை சேதன் பகத்துக்கே தரவேண்டும் என்று வேண்டி அமர்கிறேன்
 • Revenue Driven, Budget Driven என்ற கிரேக்க, லத்தீன் பதங்களை எனக்கு(ம்) புரியும்படி விளக்கிச்சொல்ல ஆரேனும் உண்டா?
 • அப்புசாமி கதைகள் தொகுப்பு ஒன்று வாசித்தேன். ஏற்கெனவே படித்தவைதான், ஃபார்முலாக் கதைகள்தாம், எனினும் அவற்றில் ஒரு வசீகரம் உள்ளது.காரணம், |1
 • கதையில் வரும் பாத்திரங்கள் யாரானாலும் சரி, அல்ட்ராமாடர்ன் முதல் கீரி பாம்பு வித்தை விடுவோன்வரை சகலரின் மொழியையும் விரிவாகப் பதிகிறார் |2
 • குறிப்பாக, சீதாப்பாட்டி பேசுவதாக வரும் ஆங்கிலப் பதங்களும், ஆங்காங்கே எதிர்பாராமல் வந்து விழும் ஒரு வரிப் பளிச் வர்ணனைகளும் அபாரம் |3
 • எனக்கென்னவோ அப்புசாமி நாவல்களைவிடக் கதைகள்தான் அதிகப் பிரியம். ஜராசு எழுதிய ‘பாமர கீதை’ என் ஃபேவரிட் |4
 • ஜராசுவின் மனஸ் (சீரியஸ்) நாவலைப் படித்து நெகிழ்ந்து பாராட்டி நீண்ட கடிதம் எழுதினேன்.அப்புசாமிப் பிரியர்கள் அந்த நாவலும் படிக்கணும் |5/5
 • Pepsodent’s latest AD says ‘கிருமிகளை அழிக்கும் இப்போது 25% அதிகம்’. What you understand from this? 🙂 (Psst, it’s a trick question)
 • இந்தக் கல்லூரி விழாக்களுக்கெல்லாம் கவித்துவ ஆங்கிலத்தில் தொகுப்புரை எழுதுகிறவர்களை என்ன செய்தாலும் தகும்!
 • With all the changes in women’s lifestyles/ financial independence etc., do they still love Gold as much as their mothers / grandmas?
 • இன்று ஒரு கல்லூரி விழாவுக்குச் சென்றிருந்தேன். நான்கு வருட Top Scorers என்று 20 பேருக்கு அவார்ட் தந்தார்கள். அதில் 19 பேர் பெண்கள் :>
 • #NowPlaying ராஜகோபுரம் கடந்நு … முதல் 55 விநாடிகளுக்குள் எத்தனை ரஸவாதங்கள்!! #ராஜாடா
 • ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் விடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே #Valee
 • Janani Janani will be in Valee’s very best 10 songs list, பக்தி இலக்கிய லட்சணங்கள் சகலமும் பொருந்திய சினிமாப் பாட்டு!
 • கோலமுகமும் குறுநகையும் குளிர்நிலவென நீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில்நீலியென சூலியென தமிழ்மறை தொழும் மாசறுபொன்னே வருக #Valee
 • மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே! வரிகள் புலமைப்பித்தனா? அப்படிதான் நினைவு
 • Andhiyile Vaanam… Perfect!!
 • நானும் @writerparaவும் பக்கத்துப் பக்கத்து சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு ட்விட்டரில் உரையாடுவது சுத்த அக்கிரமம்தானே? :>
 • Note @ an online banking website: “Only 1 account can be added in a day. Please don’t add more than 1”. Is it a restriction? Or Request?
 • ’காற்றில் வரும் கீதமே’ Final Versionனைவிட, வாலியோட நாடக அரட்டை அடிச்சுப்புட்டு ராஜா சிம்பிளாப் பாடறதுதான் செம தூள் எனக்கு!
 • Which song Raja composed first? ‘இது சங்கீதத் திருநாளோ’ or ‘என்னைத் தாலாட்ட வருவாளோ’? A family song turned love song, or vice versa?
 • சிராப்பள்ளி என்ற பெயரில் மரியாதைக்காகத் திரு சேர்த்துத் திருச்சிராப்பள்ளியாகிப் பின் அது திருச்சி என்று சுருங்கியது விநோதம்தான்! 1/2
 • Technically, this city is now called ‘சி’ :)) 2/2
 • @ புதுக்கோட்டை, ஜன்னல்வழியே சரேலென்று ஒரு (நிஜ)மயில் துள்ளிஓடுகிறது. என் வியப்பைப்பார்த்து ‘மயில் இங்கே காக்காபோல தட்டுப்படும் சார்’
 • Thank god, for giving me an Ilayaraja-fan taxi driver always, in every city I visit :)))
 • நாட்டரசன் கோட்டை: கம்பர் சமாதியில் ஆள் நடமாட்டமே இல்லை.மீசை வைத்த பாட்டரசனைத் தன்னந்தனிமையில் தரிசித்து மண்ணுண்டோம், Parcel கொண்டோம்
 • திருக்கோட்டியூர் பெருமாள் தரிசனம், 4000 திவ்யப் பிரபந்தம், ராமானுஜர் தரிசனம், மிகவும் மன நிறைவான மாலைப்பொழுது!
 • This movie ‘Sundara Purushan’ has some fantastic songs. Especially ‘Marudha Azhagaro’. SiRpi & K. S. Chitra Vaazhga!
 • Don’t hit me, but I do feel Deva does a good imitation of Raja in his village based songs, and that’s VERY difficult
 • #NowPlaying சிவகாமி நெனப்பினிலே… ‘மம்முட்டிபோல் வெட்டுறியே’, வாலி LOL :>
 • குணசீலம் கோயில்சுவர்களில் 12ஆழ்வார்களின் மிகச்சிறந்த பாடல்களைத் தொகுத்துப்பதித்துள்ளனர்.வாய்விட்டுப் படித்தேன்,மக்கள் விநோதப்பார்வை
 • ‘ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய, ஆகாய கங்கை என் மார்பினில் பாய’ என்ற வரிக்கு என்ன அர்த்தமாகஇருக்கும் என யோசித்துத்திகைக்கிறேன் #வாலி?
 • வாணி ஜெயராம் பாடுவது தெரிந்ததும் வைரமுத்து அந்த வரியைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் ‘என் பாட்டில் ஸ்ருதியும் விலகியதே’ 😉
 • #NowPlaying கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்… காயம் என்றாலே தேகம்தானே! #வைரமுத்து
 • சேலம் பழைய புத்தகக்கடை ஒன்றில் குங்குமம் 1996ம் வருட இதழ்த் துண்டுகள் (பைண்ட் வால்யூம்) 25 ரூபாய்க்கு மாட்டியது. செம சுவாரஸ்ய தொகுப்பு |1
 • கவுண்டமணி செந்திலைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு காமிக்ஸ் தொடர் (கோபு, பாபு, அரஸ்), ரா. கி. ரங்கராஜ ஆங்கிலச் சிறுகதை மொழிபெயர்ப்புகள் |2
 • அப்புறம், ‘அ முதல் ஃ வரை’ என்று ஒரு தொடர், அ, ஆ, இ, ஈ என்று ஒவ்வோர் எழுத்தில் பெயர் தொடங்கும் பிரபலங்களின் பேட்டி, Guess Who for ஃ |3
 • ’வாங்க வங்கிக்குப் போகலாம்’ என்று ஒரு தொடர், ஜிஎஸ்எஸ் எழுதியது, வங்கி விவரங்களை எளிமையாக, பல ஜோக்ஸ் சகிதம் விளக்குகிறது |4
 • பேட்டிகளில் ஈ. மாலா (நினைவிருக்கா?) போல் மறந்தே போன அன்றைய பிரபலங்கள், ருசியான துணுக்ஸ், ஆன்மிகக் கதைகள் etc., நன்கு பொழுதுபோனது |6/6
 • சேலத்தில் பலர் ‘மாற்றான்’ என்று நெஞ்சில் எழுதிய டிஷர்ட் அணிந்து நடக்கிறார்கள். தத்வார்த்தமாக அணுகவேண்டிய விஷயம் இது!
 • இந்த ட்ரிப் பற்றி நிறைய எழுதணும், அதில் முக்கியமானது, புதுக்கோட்டையில் பார்த்த ஒரு கல்யாண மண்டபத்தின் பெயர், ‘குயிக்’ :))
 • சச்சின் ஆடாத போட்டிகளில் எவன் ஜெயித்தால் எனக்கென்ன என்று நிம்மதியாகத் தூங்கி எழுவதே என் ஜென் :>
 • Forget T20, watch test cricket, you won’t need a calculator, no need to multiply, divide etc., basic addition, subtraction will do :>
 • ’Celebrate Navratri with Dominos Pizza’வாம். வெளங்கிடும்
 • சீனியர் மெம்பர், எங்க கம்பெனி பெருமை சொல்லும் வீடியோ ஃபைல் மொத்த டீமுக்கும் அனுப்பிட்டார், அவரது உற்சாகம் புரிகிறது, எனினும், 4 MB * 200
 • வேர்க்கடலைச் சட்னிக்குத் தொட்டுக்கொள்ள ஒன்றிரண்டு தோசைகள் இருந்தாலென்ன, அவை இல்லாவிட்டால்தான் என்ன?
 • #NowPlaying ‘பரபரபரபர பட்டாம்பூச்சி’ என்னவொரு பாட்டு! ‘கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு’ல் கிட்டத்தட்ட ராஜாவேதான்!
 • பட்டாம்பூச்சியைப்பற்றி நா. முத்துக்குமார் இதுவரை சுமார் இருநூற்று எழுபத்தைந்து பாட்டுகள் எழுதியிருப்பாரா?
 • ’மலரே மௌனமா’, ’நீ காற்று நான் மரம்’ ரெண்டு பாட்டும் ஒரே ராகமா? அல்லது, ‘அதேமாதிரி இன்னொரு பாட்டு சார்’ என்று டைரக்டர் ரிக்வெஸ்டா?
 • ’நீ காற்று நான் மரம்’ அழகான மெட்டு, ஆனால் சற்றும் பொருந்தாத (கிட்டத்தட்ட டண்டனக்கா) Interludes, ஹீரோவுக்காகச் சமரசமா?
 • Ah, I didn’t know they make 6 liter milk pockets in Bangalore. Cleopatra would’ve used this as a pillow? :>
 • @ Lalith Ashok Hotel attending #awssummit . Lunch is served @ an open area where Gandhi conducted prayer sessions in 1927 |1
 • They have two signs saying “Gandhi conducted prayer sessions here in 1927”. Not many paid attention, that’s ok, nothing wrong, but |2
 • Using those historic signs as tables for eating food (Chicken :), keeping shoes on top of the sign text… Felt Very bad |3
 • Hotel people shouldn’t use this place like this, at least clearly mark the area as ‘historic’ and don’t allow people inside |4
 • It may be just 85 years old history, but this attitude will not leave us with any history. Totally upset now |5/5
 • Word “benchmarking” was first used by cobblers.They would place someone’s foot on a bench & mark it 2 make pattern for shoes #wikipedia
 • வவேசு ஐயரின் கம்ப ராமாயண புத்தகம் (ஆங்கிலம்) வாங்க பாரதிய வித்யா பவன் வந்தேன். கடைக்காரர் ‘ஒரேஒரு பிரதி எங்கயோஇருக்கு,தேடிஎடுத்துக்கோ’ |1
 • நெடுநேரம் தேடியும் கிடைக்கலை. அவர் அசராமல் ‘போய்ட்டு வா’ என்கிறார்.இனி எங்கே தேட?ஃப்ளிப்கார்ட்டில் இருக்காது என என் ஊகம், பார்க்கலாம் 2/2
 • 16 Years Since Afridi scored his fastest 100… What? Afridi is already 16 years old? நம்பமுடியவில்லை!!!!!!
 • இஸ்கான் பேக்கரியில் ஆன்மிக ராகி ப்ரெட் அட்டகாசம். இப்படி ஒரு ரொட்டியை வேறெங்கும் கண்டதில்லை! #ரெக்கமெண்டேஷன் #25ரூ
 • ‘மருமகள்களில் 2 வகை’ என ஒரு பதிவு எழுதலாம். வீட்ல உதை விழும், இங்கேயும். ஆகவே வம்பின்றி ‘கம்ப ராமாயணத்தில் மருமகள்கள்’ என்றால் சேஃப்
 • While we are discussing Bakthi songs in Tamil music, some1 should compose an album ‘Best of ARuNachala Kavi RamayaNam’, AMAZING songs it has
 • //ARuNachala Kavi RamayaNam// it is a condensed version of Kamban and Valmiki, in Naadagam style, amazing work. Popular examples 1/2
 • //AruNachala Kavi RamayaNam// Popular Examples: ‘Ramasamy thoodhan naanada’, ‘Ramanukku mannanmudi’, ‘yaaro Avar yaaro’
 • Best recent Bakthi song IMO, ‘Seval Kodi PaRakkudhada’ from Billa. Lovely lyrics by Pa. Vijay (Don’t compare to classics, please 🙂
 • Wife wanted a DVD for marriage anniversary (Later this month) Should I tell her I bought it online at 45% discount? 😉 Better not :>)
 • Latest Ragging by Wife & Daughters : Show a small kid’s photo & ask “Is this Nangai Or Mangai” I fail everytime,They look so similar :-S
 • சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் ஓர் அருமையான வரி. ‘ கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!’ |1
 • //சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை// கரிய திருமாலைப் பார்க்காதவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள், பார்த்தபின் கண்ணிமைப்பவர்களும் அவ்வாறே |2
 • //சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை// நொடிப்பொழுதும் கண்கூட இமைக்காமல் அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஆய்ச்சியர் ஆசை! |3/3
 • சாதாரணமாக சினிமாப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு வரி விசேஷ அழகோடு வந்து விழும், அப்படி ஓர் உதாரணம் |1
 • ’வாத்தியார் வீட்டுப் பிள்ளை’யில் வரும் ‘ஹேய் ஒரு பூஞ்சோலை’ என்ற பாட்டு, யார் எழுதியது என்று தெரியவில்லை |2
 • அதில் ஒரு வரி, ’கரும்பினில் வில்லெடுத்து, அரும்பினில் அம்பெடுத்து, உருவம் இழந்த ஒருவன் எனது உருகிடும் இதயத்தைத் துளைப்பதும் ஏன்?’ |3
 • கரும்புவில், மலர்அம்பு, உருவம் இழந்த மன்மதன் எல்லாம் பழைய சமாசாரங்கள்தான், ஆனால் இங்கே அழகாக மெட்டில் பொருந்தி விழுந்திருப்பது சுகம் |4/4
 • மனோவின் குரலுக்கு ஒரு வடிவம் இருந்தால், அது சுஹாசினியாக இருக்கும் (புரியாட்டி விட்றுங்க, விளக்கறது கஷ்டம் 🙂
 • கல்வி என்னும் சொல்லின் வேர், கல் : கல்லுதல் = தோண்டுதல். WOW!
 • பெங்களூருவில் இன்று ஒரு வித்தியாசமான புத்தகக் கண்காட்சி, No sales, வருகிற எல்லாருக்கும் ஒரு புத்தகம் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் |1
 • ஒரு பெரிய பந்தலுக்குள் வரிசையாக மேஜைகளை வைத்து, புத்தகங்களைக் குவித்திருந்தார்கள் (பெரும்பாலும் second hand books, 80% கன்னடம்) |2
 • வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த ‘இலவச’ ஏற்பாடு. மக்கள் நல்ல ஆதரவு, செம கூட்டம் |3
 • என்னென்ன புத்தகங்கள் என்று நிதானமாகப் பார்வையிட்டேன், அநேகமாகச் சகலமும் கன்னடம், ஒன்றிரண்டு தமிழ், அபூர்வமாகத் தெலுங்கு |4
 • ஆங்கிலப் புத்தகங்கள் சொற்பம், அவையும் தபால் வழிக் கல்விஏடுகள், டெலிபோன் டைரக்டரிகள்,காலேஜ் புத்தகங்கள்,ஃபோட்டோகாப்பி ஸ்பைரல் பைண்ட்கள்|5
 • அப்புறம், நிறைய புத்த மத நூல்கள், பின் அட்டையில் ‘இதை வாசித்து முடித்ததும் இன்னொருவருக்குத் தந்துவிடணும்’ என்ற மிரட்டலுடன் |6
 • மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார், ‘இந்த நிகழ்ச்சி எதற்கு தெரியுமா? நம் மக்கள் கன்னடம் பேச, படிக்க வெட்கப்படுகிறார்கள்’ |7
 • ’ஆங்கிலம் பேசுவதில் பெருமைப்படுவதை நிறுத்துங்கள், தயவுசெய்து கன்னடம் பேசுங்கள், படியுங்கள், அதற்காகதான் இலவசமாகப் புத்தகம் தருகிறோம்’ |8
 • மொத்தம் 10 லட்சம் (பழைய) புத்தகங்கள் இதன்மூலம் இலவசமாக வழங்கப்பட்டனவாம், தமிழ்நாட்டிலும் இப்படி ஒன்று யோசிக்கலாம் |9
 • நங்கையை அழைத்துச் சென்றிருந்தேன் ‘Good Manners’ என்று ஒரு புத்தகம் எடுத்தாள். அவள் அதைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது |10
 • இன்னொரு சிறுமி ‘எனக்கு இந்த புக் வேணுமே’ என்றாள், ‘ம்ஹூம், தரமாட்டேன், எனக்கு வேணும்’ என்றாள் இவள் |11
 • அந்தச் சிறுமி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள். நங்கை தொடர்ந்து ஏதோ புத்தகங்களைப் புரட்டினாள் |12
 • சிறிது நேரம் கழித்து, அதே புத்தகம் இன்னொரு பிரதி கிடைத்தது, நங்கை முகத்தில் அத்தனை சந்தோஷம், குடுகுடுவென்று அந்த சிறுமியை தேடிஓடினாள் |13
 • ’இன்னொரு புக் இருக்கு,இதை நீ வெச்சுக்கோ’என்று தந்துவிட்டு சந்தோஷமாக திரும்பினாள்,இது Good Mannersஸா என தெரியாது,ஆனால் Practical 🙂 |14/14
 • டாக்டர் ராஜ்குமார் குரலில் கன்னட பக்திப் பாடல்கள் நிறைந்த ஒரு சிடி வாங்கிவந்தேன். மனிதர் என்னமாக உருகிப் பாடுகிறார், Brilliant!
 • ஃபேஸ்புக் தமிழில் பல காமெடிகள். இன்று பார்த்தது உச்சம். ‘XYZ என்பவர் ABC கம்பெனியில் வேலைப் பார்க்கிறார்’ராம். கண் வலிக்காது? 😉
 • ஃபேஸ்புக்ல இதுவரை ’திடீர் கவிதை’த் தொந்தரவுதான் இருந்தது. இப்ப ‘அறிஞர்கள் வாழ்விலே’ தொந்தரவும் ஆரம்பிச்சிருக்கு! ட்விட்டர் செல்லம்டா!
 • லியோனி நன்றாகவே பாடுகிறார், for his market segment!
 • Twitter ஹேண்டில், LinkedIn ஐடி எங்கும் PMPயைச் சேர்த்துவிடுகிறார்கள். நவீன ஜாதிப் பெயராக இருக்கும்போல
 • கம் கம் கைநாட்டு! #யு_ரிமெம்பர்?
 • Hmmm, no one wants to listen to anyone, anymore!
 • மழை! ‘கவ்வை இன்றாகுக நுங்கள் வரவு!’ #பெங்’குளுரு’
 • எங்கு நோக்கினும் ஈசல்கள் #NowWalking
 • ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ has some totally meaningless lyrics (especially in charaNams) but who cares, SPB sizzles!
 • ’கீரவாணி’ பாட்டு ஆரம்பித்த நொடியிலிருந்து SPBக்காகவே ‘செஞ்சது’போல் தெரிகிறது. But wait, see what happens after Ms. Janaki’s entry :))
 • ’பிடிக்கலை’ / ‘நல்லா இல்லை’ என்ற இரு விமர்சன வாக்கியங்களுக்கு இடையிலான நுட்ப வித்தியாசத்தை விளக்குகிறார் மனைவி. தலையாட்டுகிறேன்
 • #NowPlaying ஆத்தங்கர மரமே… ரஹ்மானின் ’Signature’ பாடல்களில் இதுவும் ஒன்று, What Energy, and full of surprises in every turn!
 • LinkedIn asking us to endorse our boss’ skills is kind of funny 🙂
 • டிகிரி காப்பி = பாகைக் குளம்பி? LOL :)))
 • ஆங்கிலக் கலப்பைவிட, Selective தமிழ்ப்பற்று பெரிய வியாதியாக இருக்கும்போல. ‘இலக்கக் கேமெரா’வாம். சுத்தம்!
 • டிகிரி காப்பி = பாகைக் குளம்பி அல்ல, ‘பட்ட நகல்’ என்கிறார் @kskarun சரியாகதான் இருக்கும்போல :>)
 • பெரிய எழுத்தாளர்கள் எழுதும் Column என்பதைத் தமிழில் ‘பத்தி’ என்று மொழிபெயர்க்கிறார்கள், ஏன்? பத்தி = Paragraph, Right?!
 • Just to clarify, ’பாகைக் குளம்பி’க் கிண்டலெல்லாம் தனித்தமிழை எதிர்த்து அல்ல, அபத்தமான மொழிபெயர்ப்புகளைக் கேலி செய்து
 • ’வரலட்சுமி’ என்றால் வரம் தரும் திருமகள் என்று அர்த்தம். அதை ‘வரு’ என்று சுருக்கியிருக்கிறது ‘போடா போடி’ திரைப்படக்குழு :))
 • #NowPlaying ‘காதல் கசக்குதய்யா’… அட்டகாஷ்! மிருதங்கத்தையும் மோர்சிங்கையும் வேற யாராச்சும் இப்படிப் பயன்படுத்தியிருக்காங்களா?!
 • ’மூச்சை நிறுத்து’ என்பதை மிகத் தெளிவாக ‘மூச்சா நிறுத்து’ என்று பாடுகிறார் மதுஸ்ரீ :))) //ஆதிபகவன்//
 • Oru Maina = kaRava maadu (3 CharaNams, 1 Hero, 3 Heroines). But Chitra shows zero variety, Janaki gives us 3 unique voices, Brilliant!
 • #NowEating அடுப்பிலிருந்து சுடச்சுட எடுத்த மரவள்ளி சிப்ஸு :>
 • ‘மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ’என்று ஒருத்தி பாடுவதாக just like that எழுதிவிடுகிறார் அறிவுமதி,இதற்குள் எத்துணை அர்த்தங்கள்! #Respect
 • #Clt ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. ‘மாமனைக் கொஞ்ச’ என்கிறார் மனோ, ‘மாமனக் கொஞ்ச’ என்கிறார் ஜானகி. Professional= attention to small details
 • ‘ஆத்துமேட்டுல முத்தம் ஒண்ணு கொடுத்தா’ என்ற ஜானகி குரல் கேட்டதும் சௌந்தர்யா கையில் வெற்றிலையைக் கொடுத்த RVஉதயகுமார் பெரிய ரசிகர்தான்!
 • ’தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி, உன்னை நம்பி’யில் ரெண்டு ‘நம்பி’க்கும் வெவ்வேறு அர்த்தம் 🙂 Simple, Obvious, But Cute!
 • Got a long, detailed, very satisfying Email from someone who read one of my books #Happy #Happy #Happy
 • Dear Sir, When composing Emails, dont write anything after a URL. No one will notice it,Instead create a new paragraph, It’s Free,Really
 • ’Live Streaming of your Marriage @ Rs 9999 Only’யாம். வரதட்சணை, சீர், செனத்தி (அப்டீன்னா?) லிஸ்டில் இனி இதுவும் சேர்ந்துவிடுமோ? :>
 • உள்ளே ஒன்றும் இல்லை என்ற அர்த்தத்தில் ‘உள் இல்’ என வெங்காயத்துக்குப் பெயர், பின் அது ‘உள்ளி’ என மாறியது : பேராசிரியர் கே. ராமமூர்த்தி
 • குதிரைவாலி தானியத்தில் பிஸிபேளாபாத். செம டேஸ்ட்!!!
 • நல்லி சில்க்ஸின் லேட்டஸ் விளம்பரப் புடவைகள் ஏன் சுரிதாரின்மீது சுற்றப்பட்டுள்ளன?! #ஜென்யூன்டவுட்டு
 • அலுவலக நண்பர் ஒருவர், முன்பு ஒரு கல்லூரியில் 30 வருடங்கள்+ பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடன் இன்று ஒரு சுவாரஸ்ய அரட்டை |1
 • அவர் பேராசிரியராக இருந்தபோது, மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனமாம், குறிப்பாக பரீட்சையில் பிட் அடிப்பவர்களைப் பிடிப்பதில் கில்லாடியாம் |2
 • ஒவ்வொரு மாணவனும், மாணவியும் எங்கெங்கே, எப்படியெல்லாம் பிட் அடித்து அவரிடம் பிடிபட்டார்கள் என்று டெமோ சகிதம் விளக்கினார். செம! |3
 • குறிப்பாக 2 பாத்ரூம் ப்ரேக் + 1 பழைய கொஸ்டின் பேப்பரை வைத்துக்கொண்டு மொத்தப் பரீட்சையையும் இன்னொருவரை எழுதவைத்த மாணவன் கதை, சூப்பர்!! |4
 • நிறைவாக ‘எனக்குத் தெரிந்த பிட்கள் இத்தனை, தெரியாதது எத்தனையோ!’ என்றார், ‘மாணவர்கள் என்னைவிட புத்திசாலிகள், அது எனக்குத் தெரியும்’ |5/5
 • வீட்டுக்கு ஓர் உறவினர் வந்திருந்தார். இன்று ஏதோ விரதமாம். மதிய உணவு சாப்பிடமாட்டாராம். அவருக்காகச் செய்துவைத்திருந்தவை வீண் |1
 • ஆகவே, மனைவியார் சில பொருள்களை (ஸ்வீட், வடை எட்ஸட்ரா)மட்டும் பொட்டலம் கட்டி அவரிடம் கொடுத்து அனுப்பினார். அதை என்னிடம் சொல்லிவிட்டு |2
 • ’ஏன் பார்சல் கொடுத்தேன்னா, அவங்க யார்கிட்டயாவதுபோய், உமா வீட்டுக்குப் போனேன், ஒண்ணுமே சாப்பிடத் தரலைன்னு சொல்லிடக்கூடாதே’ என்றார் |3
 • நான் சும்மா இருந்திருக்கணும், விவாதத்தை ஆரம்பித்தேன், ‘சமைச்சுவெச்சதைச் சாப்பிடாதது அவங்க தப்பு, உன்னை எப்படிக் குறை சொல்வாங்க?’ |4
 • ’விரதமெல்லாம் அவங்களுக்கு மறந்துடும், நான் எதுவும் சாப்பிடத் தரலைங்கறதுதான் நினைவில் நிக்கும்’ என்றார் அவர் |5
 • ’அதெல்லாம் சும்மா’ என்றேன் நான், ‘சமைச்சது வீணாகும், அதனால பார்சல் கொடுத்தேன்னு சொல்லு, அவங்களுக்கு ஸ்வீட் பிடிக்கும்ன்னு சொல்லு.’ |6
 • ‘அப்படியில்லாம, அவங்க செஞ்ச தப்புக்கு அவங்க உன்னைக் குத்தம் சொல்வாங்களோன்னு கவலைப்பட்டா, அது உன்னோட தாழ்வு மனப்பான்மையைக் காட்டுது.’ |7
 • இந்த ’வேலி, ஓணான்’ அலசலின் விளைவு, இன்று இரவு டிஃபன் உப்புமாவாம் |8/8
 • ’ஷங்கரின் அடுத்த படத்தில் ஹீரோயின் யார்?’ என்று கேட்கிறார் மனைவியார். கரகாட்டக்காரன் கவுண்டமணிபோல் கொதிக்கிறேன்
 • பெங்களூரு Outer Ring Roadல் தினமும் பயணம் செய்பவர்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன். எத்துணை தூசி, புகை!
 • சீதாப்பழத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்திருக்கும்?
 • 5 year old says ‘அப்பா, நான் சமத்தா ஹார்லிக்ஸ் குடிச்சேனே, அதை ட்வீட் பண்ணு’, too much I say ;)))
 • அதென்னவோ, நக்கீரனில் மனுஷ்ய புத்திரன் கட்டுரை வெளிவந்திருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை 🙂
 • தக்கனூண்டு குழந்தைகளுக்கு ‘Sorry’ சொல்ல ஏன் இத்தனை தயக்கம்? ’அந்த வார்த்தையைச் சொல்லக்கூடாது’ என்பது நம் ஜீன்களில் இருக்கிறதோ?
 • விஷ்ணுவின் பிள்ளைகள் மன்மதனும் பிரம்மாவும். ஒருவர் காதலுக்கு அதிபதி, மற்றவர் அதன் பின்விளைவுக்கு 😉 : பேராசிரியர் கே. ராமமூர்த்தி
 • பள்ளிகளில் வீணாகும் காகிதத்துக்கு யாரும் கணக்குப் பார்ப்பதில்லையா? @NangaiN நோட்டுகளில் பாதிக்குமேல் (ஆங்காங்கே) காலி இடம்தான்
 • ‘I am a star, catch me’ என்ற டிஷர்ட் வாசகத்துக்கு ஏதோ ஒரு நல்லர்த்தமும் இருக்குமோ?
 • Hmmmmm, an old book store here says ‘Novels: per kg Rs 249 only’
 • முருங்கைக் கீரை ஆய்வதற்குப் பெரும்பொறுமை அவசியப்படுகிறது.மிக சிரமப்பட்டு ஒரு குச்சியை முடிப்பதற்குள் மனைவியார் முழுக் கட்டு பூர்த்தி
 • க்ரேஸி மோகனுக்கு இன்று 60ம் கல்யாணமாம். புன்னகைப் பூக்களால் பூமி நிறைத்துநீர் / இன்னுமோர் நூற்றாண் டிரும்!
 • கோலி ஆடும் குழந்தைகள் இன்னும் இருக்கிறார்கள், அதுவும் பெங்களூருவில். வாழ்க!
 • வள்ளுவர் மழலைச் சொல்லைச் சிலாகிக்கிறார். எனக்கென்னவோ மகள் முதன்முறையாக எழுத்துக்கூட்டிப் புத்தகம் படிக்கும்போதுதான் சிலிர்க்கிறது 🙂
 • ஓவியர் கோபுலுவுக்கு விகடனில் வேலை கிடைக்கப்போவதுபற்றி மாலி எழுதிய கடிதம் ஒன்றை ரவிபிரகாஷ் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுர்ந்தார். 1944 தமிழ் |1
 • அதில் ஒரு வரியை மிகவும் ரசித்தேன். ’ஆர்டர் கிடைக்கும்வரையில் இந்த விஷயத்தை மனத்திலேயே வைத்துக்கொண்டு, கலவரப்படுத்தாமலிரு.’ |2
 • வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் உரைநடை மாறிவந்திருக்கும் அழகு ரசித்து அனுபவிக்கவேண்டியது! |3/3
 • வீடுமுழுக்க பொம்மைகள். பிரம்மச்சாரி அனுமனைச் சுற்றி அஷ்ட லட்சுமிகளை நிற்கவைத்திருக்கும் மகள்களின் குறும்பை ரசித்தேன் :>
 • தசாவதாரத்தில் பரசுராமர், ராமர் Overlap, கிருஷ்ணர், பலராமர் Overlap. இதை @nangainக்கு விளக்க நல்ல உதாரணம் தேடுகிறேன்
 • ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுவோர் பலர் உடனே பழநிபாரதிக்கும் யுகபாரதிக்கும் tag செய்துவிடுகிறார்கள். நல்லவேளை சுப்பு ஃபேஸ்புக்கில் இல்லை!
 • கொலுப்படிக்கு நான் செய்த அலங்காரம் மனைவி, மகள்களால் ஈவு இரக்கமின்றி நிராகரிக்கப்பட்டுவிட்டது. இனிமே என்னைக் கூப்டுவீங்க? ;))))
 • ‘சிலருக்கு’ டைம் மேனேஜ்மெண்ட் சொல்லித்தருவது சிரமம். மிகச் சிரமம். நல்லது சொன்னால் நம்மீது பாய்கிறார்கள் :>
 • மாவிலை கோர்க்கச்சொல்லி Task Assignment வந்துள்ளது. இதில் சொதப்ப வாய்ப்புகள் குறைவு, பார்க்கலாம்! :>
 • மாவிலை கட்டும்போது பூச்சி அரித்த இலைகளை ஒதுக்குவது குறித்துச் சில தத்துவ விசாரங்கள் உள
 • ஏன் எல்லாரும் ‘நவ்ராத்ரா’ என்று மெயில் அனுப்புகிறார்கள்? இதிலுமா ஆணாதிக்கம்?!
 • Every time, I try extra hard to sound like an authentic kannadiga, but the auto drivers refuse my Kannada speech & answer in Tamil. Hmm
 • Everything in ‘Aagaaya VeNNilaave’ gives you 60s feel, except singers. Wish Raja gave this song to PB Srinivas & P. Susheela
 • What is the liveliest title song you remember? For me it’s ‘Kadha KeLu Kadha KeLu’ from MMKR
 • From ‘Aagaaya VeNNilaave’, I move to its distant cousin ‘KaNNaale Kaadhal Kavithai’, Janaki!
 • Wondering what situation motivated Raja to compose a brilliant song such as ‘Chinna KaNNan AzhaikkiRaan’. Anyone saw that movie?
 • பெரும்பாலான பாடல்களில் ஏதோ ஒரு நதி பெயரைச் சேர்த்துவிடுகிறார் வாலி. Mostly கங்கை, காவிரி, பொன்னி & வையை(கை) #அவதானிப்புதேங்
 • A friend called,explained situation of ‘Chinna KaNNan AzhaikkiRan’ song,requested me not to watch this movie under any circumstances :))
 • ‘ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம்’ என்று ஒரு பாட்டு கேட்டதுண்டா? இல்லாவிட்டால் தேடிக் கேளுங்கள். அத்தனை அழகு!
 • அண்ணன் ஒபாமா வாள்க வாள்க, அவரை எதிர்க்கும் ரோம்னியோ ராம்னியோ அவரும் வாள்க. சீக்கிரம் எலக்‌ஷன் தீர்ந்து ரிசல்ட் வருக #ரிக்வெஸ்டு
 • ’ராமன் கதை கேளுங்கள்’ தமிழ் வடிவம் எனக்குப் பிடிக்கும். ஆனால் ‘தசரத ராமா, ஜனகன் உன் மாமா’ போன்ற வரிகள் ஹரிகதையில் வருமா? #வைரமுத்து
 • இன்றுமுதல், ஆஃபீசில் எனக்குக் குழப்பமாக மெயில் எழுதுகிற எல்லாருக்கும், அதைவிடக் குழப்பமாக பதில் எழுத உத்தேசித்துள்ளேன் #டெஸிஷன்
 • மல்லேஸ்வரத்திலிருந்து Rusk வந்துள்ளது. தெய்விக ருசி!
 • நேரம் இருக்கும்போது ‘100 வருஷம்’ பாட்டின் ஆண், பெண் வெர்ஷன்களைத் தனித்தனியே கேளுங்கள். எனக்கு மனோமீது கொலைவெறி ஏன் என்று புரியும் :>
 • ’மாளவிகாக்னிமித்ரா’ புரட்டிக்கொண்டிருந்தேன். ராணிகள்முன் நடுநடுங்கும் ராஜாவை செம நக்கல் விடுகிறார் காளிதாசர் :))
 • “My parents looking for a bridegroom, So I need to join a company with branches all over the globe”… Nice Resignation Mail!
 • ‘பாட்டாலே புத்தி சொன்னார்’ அளவு 100% autobiographical nature பாட்டுகளை MGR, ரஜினிகூட தங்கள் படங்களில் வைத்ததில்லை என நினைக்கிறேன்
 • ‘மரச் செறிவே’ … என்னவொரு வார்த்தைத் தேர்வு. பாரதிடா!
 • Every office needs a நாட்டாமை, may be two!
 • மனைவியார் giving training to @nangain on “How to light two தீபம்s in one தீக்குச்சி”. ’புருஷன் வீட்ல சிக்கனத்துக்கு இதான் டெஸ்ட்’டாம்
 • ’தலைவாங்கிக் குரங்கு’, ‘பனியில் ஒரு கண்ணாமூச்சி’ என்று 2 தமிழ் காமிக்ஸ்கள் படித்தேன், இரண்டுமே பிரமாதம்!
 • @ SJBIT for a campus recruitment, all new experience for me 🙂
 • I attended campus interviews @ 1998. At that time TCS was the top recruiter in terms of numbers, looks like they still are
 • I need a coffee. NOW. Just outside @Raaga_Suresh ‘s house, should I gate crash and act as if I came to see the Golu? 😉
 • போஸ்டரில் தனியே நின்றவரைக் காட்டி ‘பவன் கல்யாண்தானே அது?’ என்றேன். ‘ஆமா சார், ஹீரோயின் தமன்னா’ என்கிறார் டிரைவர். நான் கேட்டேனாய்யா?!
 • ரா..ம்…பா…பு… பவன் கல்யாணின் புதுப்படப் பெயரை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டேன். அதனால், பவன் கல்யாண் வாழ்க!
 • HRல் ஒருவர் ஃபோன் செய்து, ‘சார் attitude testல ஒரு டவுட், கொஸ்டின் படிக்கட்டுமா?’ என்கிறார். நான் என்ன லார்ட் லபக் தாஸா?!
 • அமலாவைக் கைது செய்துவிட்டார்களாமே. ஏதோ ஒரு வைரமுத்து கவிதைபோல் இருக்கிறதே!
 • உம்மாச்சி முன்னே வந்தால், இந்தச் சோம்பேறித்தனத்தை வெல்வதற்குமட்டும் ஒரு வரம் கேட்கவேண்டும். மற்ற எல்லாம் நாமே சம்பாதித்துவிடலாம்
 • சிறைச்சாலைகளைச் சீர்திருத்தச் சென்ற நவீன மணிமேகலை அமலா வாழ்க வாழ்க!
 • Buzz words, Buzz words everywhere, nothing gets done!
 • Hei, I managed to quote a poem (ie, its meaning) from Kamba RamayaNa in an office meeting ;)))))
 • Here We Go, Doing an “Email Rewriting Service” for a colleague. I wish someone buys me a coffee for this!
 • ஷங்கர் மகாதேவனாகப்பட்டவர் காதல் பாட்டுகளைக்கூட குஸ்தி போடப்போகிற அறைகூவல் தொனியில்தான் பாடுகிறார் #அவதானிப்
 • ஷமகாதேசன் குஸ்தி பயில்வான் எனில், ஹரிஹரன் மாடர்ன் தியாகராஜ பாகவதர். குரல்வளத்தில் அல்ல, எப்பப்பார் கெஞ்சும் பாவம்!
 • #NowPlaying Ninnukkori VarNam. What.a.song! Raja gave most of the Amala songs to K. S. Chitra?
 • சாதாரண டூயட் பாட்டுக்குள் ‘அம்மானை’யைப் புகுத்திய வைரமுத்துவுக்கு வந்தனம் 🙂 #GoogleIt
 • ‘நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை இன்னே வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய?’ என்றான்
 • ஹரிணியின் குரல் இனிமையானதுதான். ஆனால் அதை வைத்துச் சில பாடல்களைதான் நன்றாகப் பாடமுடியும். அவற்றையெல்லாம் அவர் பாடி முடித்துவிட்டார்
 • ஒரு புத்தக கேடலாக் வந்துள்ளது. ‘இவன்தான் பாலா’ என்ற புத்தகப் பெயரை ‘இவர்தான் பாலா’ என்று மரியாதைப்படுத்தியுள்ளதை ரசிக்கிறேன்
 • அதே புத்தக கேடலாக். ஏனோ தபு சங்கர் புத்தகங்களைப் ‘புதினம்’ வரிசையில் நிறுத்தியுள்ளனர்
 • காபிக்குக் க்யூவா? as my aunt asked once ‘காசு கொடுத்துதானே சாப்பிடறோம்?’ :)))
 • #NowPlaying Rathiriyil Paadum Paattu. Malaysia Vasudevan, you beauty!
 • ‘ராஜா கைய வெச்சா’ பாட்டுமுழுவதையும் ‘சிங்கிள் மீனிங்’கில்மட்டுமே எழுதியுள்ளார் வாலி :>
 • An audio CD promises to teach Bhagawath Gita in just 100 minutes. #sigh
 • எங்கள் ஏரியாவில் யாரோ வாண வேடிக்கைகளை நிகழ்த்துகிறார்கள். திருவாளர் தோனியின் டீம் ஏதோ கோப்பையை ஜெயித்திருக்கவேண்டும். சரியா?
 • ‘तराजू’ (தராஜு) என்றால் ஹிந்தியில் Weighing Scale என்று அர்த்தமாம். அதுதான் தமிழில் தராசு ஆகியிருக்குமோ?
 • ’சூப்பர் சிங்கர் போட்டியாளர்களின் உச்சரிப்புப் பிழைகளை யாரும் சுட்டிக்காட்டுவதில்லையே’ என்கிறார் @elavasam . இவர் என்னைவிட அப்பாவி 🙂
 • Someone made an excel sheet for Golu Visit Planning? Needs lot of ‘intelligence’, too many permutations combinations dependencies…
 • எங்கு சுற்றியும் ரங்கனைச் சேர் #NowPlaying ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா’ … ஜானகியோ ஜானகி!
 • ’உன்னுடைய Timesheet is not detailed enough’ என்றார் Boss. முழு நீள நாவல் சைஸுக்கு எழுதிக் கொடுத்தேன். அலறுகிறார் :))
 • #NowPlaying வனக்குயிலே… Wonderful song, almost-meaningless lyrics, Why Vaalee Why?!
 • ‘ஒரு வார்த்தை பேச’ பாட்டுக் கேட்கும்போதெல்லாம் @writerpara கமெண்ட்தான் ஞாபகம் வரும். ‘இந்தப் பாட்டில் சரத்குமார் நன்றாக நடப்பார்’
 • தமிழில் 2பொருள்களை இணைப்பதற்கு Verb ‘மூட்டுதல்’.அதிலிருந்துவந்த Nounதான் ‘மூட்டு’(Knee, எலும்புகளை இணைப்பது). எத்துணை பொருத்தம்,அழகு!
 • Ah, Yoga Skills mentioned in a resume, First time seeing this!
 • சீர்அணி சோழநாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன் கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் #விஜயதசமி #வித்யாஆரம்பம் #வாழ்த்துகள்
 • பொம்மைகளுக்கெல்லாம் ஒன்றுவிடாமல் பெயர் சூட்டுவது பெண் குழந்தைகளின் குணமா, ஆண் குழந்தைகளும் அப்படிதானா?!
 • நேற்று @Aadhav33 வந்திருந்தார். நங்கையிடம் ‘அவ்வைசண்முகில கமல் பொண்ணுமாதிரியே இருக்கே நீ’ என்றார். ‘அது யார் கமல்?’ என்றாள் நங்கை :))
 • விஜயதசமி பயிற்சியாக, எம்.ஏ. தமிழ் பழைய வினாத்தாள்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். சுவாரஸ்யம். சில உதாரணங்கள் |1
 • 1. மீராவின் ஊசிகள் கவிதைத் தொகுப்பின் பெயர்ப் பொருத்தத்தை விளக்குக 2. உவேசா குடும்பப் பின்புலம் யாது? 3. திருவிக இளமை வாழ்க்கையை விவரிக்க |2
 • 4. காரைக்கால் அம்மையார் இறைவனின் இருப்பிடமாக எதைக் குறிப்பிடுகிறார்? 5. வசந்தவல்லி அழகை திரிகூடராசப்பக் கவிராயர் எப்படி விவரிக்கிறார்? |3
 • 6. உருபு மயக்கம் என்றால் என்ன? 7. ஆகுபெயர்வகைகளை விளக்கி ஒரு கட்டுரை வரைக 8. முருகனின் ஆறு திருமுகங்களின் செயல்கள் யாவை |4/4
 • Dear @NangaiN , I don’t need to know “Maroon” etc., “Brown” is good enough for me!
 • நண்பர் @oojass தயவில் பேராசிரியர் கே. ராமமூர்த்தி கம்பன் உரைகளை அனுபவித்துக் கேட்கிறேன். இன்று கேட்டது, ‘ராமாயணம் = 4 stage rocket’ |1
 • //ராமாயணம் 4 Stage Rocket// நான்கு பேர் வெவ்வேறு சூழல்களில் ராமாயணக் கதையை முன்னோக்கிச் செலுத்தினார்கள் |2
 • //ராமாயணம் 4 Stage Rocket// Stage 1 : விஸ்வாமித்திரர் Stage 2 : கூனி Stage 3 : சூர்ப்பனகை Stage 4 : அனுமன் |3
 • //ராமாயணம் 4 Stage Rocket// 4வது ஸ்டேஜ் ஆகிய அனுமனுக்குள் ராமன் இருந்தான், அவனது அவதார நோக்கத்தை நிறைவேறச் செய்தான் மாருதி |4
 • //ராமாயணம் 4 Stage Rocket// அதன்பிறகு, நிரந்தரமாக வானில் சுற்றுகிற ராக்கெட்கள்போல, சிரஞ்சீவியாக இருக்கிறான் அனுமன் |5
 • //ராமாயணம் 4 Stage Rocket// மிக அழகான ஒப்பீடு, கற்பனை. பேராசிரியருக்கும் @oojass க்கும் நன்றி 🙂 |6/6
 • கம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, சீதை ராவணனிடம் பேசுவது. பல நேரங்களில் சீதையின் ஆளுமை ராமனை விஞ்சிவிடுகிறது!
 • கஷ்டப்பட்டு எல்லா கொஸ்டினையும் Yes / No formatக்கு மாத்தறேன். ஆனாலும் சம்பந்தமில்லாம ஏதோ பதில் சொல்றவங்களை என்ன செஞ்சாத் தகும்?!
 • உதாரணம் Q: Is this URL correct? A: This is the Same URL you gave us last week
 • அன்று முடித்தேஆகவேண்டிய மிக முக்கிய வேலையை 4:32 PMவரை தள்ளிப்போட்டு இன்னும் தொடங்காமலிருப்பதற்குப் பெயர் தன்னம்பிக்கையா, திமிரா? :>
 • 4 பேர் சேர்ந்து உருப்படியாப் பேசறதைக் கெடுக்கணும்ன்னா, 24 Hours முன்னாடி எல்லாருக்கும் ஒரே ஒரு Powerpoint டெம்ப்ளேட் தந்தாப் போதும்
 • First decade மணவாழ்க்கையைக் கொண்டாடும்விதமாக, நாளை மறுநாள் காஞ்சிபுரப் பயணம், கோயில், இட்லி உண்டு, பட்டு இல்லை :>
 • புரூஃப் ரீடர் என்ற பதவி தமிழ்ப் பத்திரிகைகளில் வழக்கொழிந்துவிட்டதோ? #ஸந்தேஹம்
 • உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது, நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது |1
 • காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது, பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது! |2
 • சந்தமும் அர்த்தமும் குறைபடாமல், அதேசமயம் யாருக்கும் புரிகிற மொழியில் சொல்லக் கண்ணதாசனைவிட்டால் வேறு யார்? |3/3
 • @ காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில். இவருக்கு இன்னொரு பெயர் தழுவக்குழைநாதர் 🙂
 • சுந்தரர் எழுதிய பாட்டு ஒன்றில் நங்கை, மங்கை அருகருகே வருகிறார்களாம். கோயில் கல்வெட்டைப் பார்த்து @nangain கண்டுபிடித்தாள். கூகுளணும்
 • கம்பனைப் படித்ததால் ஆயபயன், கோயில் சுவர்ப்பாடல்களெல்லாம் பிரித்துப்படித்து 70% பொருள்அறியமுடிகிறது,தரிசனக்யூவில் நன்றாகபொழுதுபோகிறது #fb
 • Hei, anyone knows where to eat Kanchipuram idli at Kanchipuram? No one here seems to know it, Strange!
 • Let me +1 all the tweets, facebook messages about SaravaNabhavan’s high prices. It’s almost daylight robbery!
 • Watching Karakattakkaaran for the 5836th time. BGM for the Soppana Sundari Car…. Amazing! Long live Kounds and Raja!
 • மதுரை சொர்ணவிலாஸ் ஓமப்பொடிக்கு ஈடு இணை இல்லை! #நௌஈட்டிங்
 • காஞ்சிபுரத்தில் சுமார் 150 கோயில்களாவது இருக்கவேண்டும். எந்தச் சாலையில் நுழைந்து எங்கே திரும்பினாலும் எல்லாக் கோயில்களுக்கும் வழி |1
 • இத்தனை கோயில்கள் இருப்பதால், பக்தர் கூட்டம் distribute ஆகிவிடுகிறது. No நெரிசல், No பரபரப்பு, மிக நிதானமாகப் பார்வையிடலாம் |2
 • ஏகாம்பரேஸ்வரர் கோயில் மிகவும் விசாலமானது. அங்கிருந்த நடராஜர் புலித்தோலும் பொன்மேனியுமாக இன்னும்கண்ணிலேயே நிற்கிறார் |3
 • //ஏகாம்பரேஸ்வரர்// தல புராணக் கதை சுவாரஸ்யமானது. மாமர நிழலில் பார்வதி சிவனுக்காகத் தவம், அவரைப் பரிசோதிக்க தீயை அனுப்பும் சிவன் |4
 • தீ பரவிச் சுட, பார்வதி பெருமாளை வேண்ட, அவர் சிவன் தலையிலிருந்தே பிறை நிலாவைப் பறித்துப் பார்வதியைக் குளிரவைக்கிறார். அதனால் |5
 • அதனால், இங்குள்ள பெருமாளின் பெயர் ‘நிலாத் துண்டப் பெருமாள்’ 🙂 அடுத்து, சிவன் நீரால் தாக்கத் தீர்மானித்துக் கங்கையை அனுப்புகிறார் |6
 • கங்கையிடம் பார்வதி சகோதரி முறை பேசி அனுப்பிவிட, இன்னொரு நதியை(வேதவதி?) வரச் செய்கிறார் சிவன், பார்வதி வழிபடும் சிவலிங்கம் கரைகிறது |7
 • பதறிய பார்வதி, அந்த மணல் லிங்கத்தை அணைத்துக்கொள்ள, சிவன் நெகிழ்ந்துபோய், திருமணத்துக்குச் சம்மதிக்கிறார். அதனால் அவர் பெயர் |8
 • அதனால் அவர் பெயர் ‘தழுவக் குழைநாதர்’ 🙂 இப்படி எல்லா உம்மாச்சி பேருக்கும் ஒரு கதை (’உப்பு இல் அப்பன்’போல் டுபாக்கூரும்) உண்டுபோல |9
 • அடுத்து, காமாட்சி கோயிலுக்குச் சென்றால், சுவரில் எங்கு பார்த்தாலும் சமஸ்கிருதம். அல்லது, தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |10
 • அடுத்து, உலகளந்த பெருமாள், வரதராஜப் பெருமாள் ஆலயங்கள் சென்றோம். கூட்டம் இல்லை என இரண்டையும் 7 மணிக்குப் பூட்டிவிடுகிறார்களாம். கொடுமை!
 • பெருமாள் தரிசனம்தான் இல்லை. இட்லியாவது கிடைக்குமா என்று விசாரித்தால், ‘இப்பல்லாம் யாரும் காஞ்சிபுர இட்லி கேக்கறதில்லை’ என்கிறார்கள் |12
 • நாங்கள் விசாரித்த எந்தச் சிறிய / பெரிய உணவகத்திலும் காஞ்சிபுர இட்லி இல்லை. அது அந்த ஊர் எல்லைக்கு வெளியில்மட்டும் வாழ்கிறதுபோல! |13
 • காஞ்சிபுரத்துக்குமுன்னால் வேலூரில் ஸ்ரீபுரம் என்ற கோயிலுக்குச் சென்றோம். அதை விவரித்தால் என்னை நாத்திகன் என்பீர்கள். வேண்டாம் :> |14/14
 • ’கவிஞர் பாரதிதாசன் சாலை’ என்பதை அபத்தமாக ‘KB தாசன் சாலை’ என்று சுருக்குகிறார்கள். தாசனாதலின் அர்த்தமே புரியாத உலகம்
 • லோகட் ஜீன்ஸில் உள்ளாடை தெரிந்தால் அசிங்கம் என்றா நினைத்தீர்? அதற்கென்றே நுனியில் டிசைன் வரைந்த ஃபேஷன் ஜட்டிகள் அறிமுகமாம்! #facepalm
 • ஆண்டாள்பற்றி கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் எழுதிய புத்தகத்தை வாசிக்க ரொம்ப நாளாக ஆசை. இன்றுதான் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தது #happy
 • இன்று பெங்களூரு சாஹித்ய அகாதெமி விற்பனை அலுவலகம் சென்றிருந்தேன். ஒரு கல்லூரிக்குள் ஜில்லென்ற காற்றுக்கு நடுவே நிலவறையில் உள்ளது |1
 • புத்தகங்களில் ஆங்கிலம், கன்னடம் அதிகம். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்திக்குப் பின்வரிசையில் கணிசமான இடம் ஒதுக்கியுள்ளார்கள் |2
 • சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகங்கள்கூட இன்னும் (அதே பழைய விலையில்) விற்பனைக்குக் கிடைப்பது இக்கடையின் சிறப்பம்சமாக இருக்கலாம் |3
 • தமிழ்ப் புத்தக வரிசையில் 10 நிமிடம் செலவிட்டேன். ஈர்த்தவை, ப. ஜீவானந்தம் எழுத்துகள் முழுத் தொகுப்பு, 4000 திவ்யப் பிரபந்தத் திரட்டு |4
 • அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் எனக்கு உவப்பு இல்லை. Biographyயும் இல்லாத, Works அறிமுகமும் இல்லாத 2ம்கெட்டான்கள் |5
 • மற்றபடி அவர்களது மொழிபெயர்ப்புகள் குறிப்பிடவேண்டிய சேவை. அநேகமாக சாஹித்ய அகாதெமி விருது பெற்ற அனைத்து நூல்களும் தமிழில் கிடைக்கின்றன |6
 • அநேகமாக அனைத்து புத்தகங்களும் நியாயமான விலை, அதில் 20% தள்ளுபடி. பெங்களூர்வாசிகள் ஒரு விசிட் அடிக்கலாம். செண்ட்ரல் காலேஜ் உள்ளே |7/7
 • ’வீட்ல அரிசி மிஞ்சிப்போச்சு,பாதாம் அல்வா செஞ்சுடலாம்ன்னு இருக்கேன்’ என்று யாராவது சொன்னால் சிரிப்போம்.பல அலுவலகங்களில் சொல்கிறார்கள்
 • “Windows Development Comes Back” என்று மைக்ரோசாஃப்ட் தினமும் ஈமெயில் அனுப்பிக் கெஞ்சுவது பார்க்கச் சகிக்கவில்லை
 • GMail’s new “Compose” interface is like Sachin Tendulkar’s cover drives, Looks so easy, obvious, effortless, but only few can do it :>)
 • நாளை கர்நாடக ராஜ்ய உத்ஸவத்தை முன்னிட்டு, கவின் கன்னடத்தில் ஒரு வெண்பாம் எழுத உத்தேசித்துள்ளேன் :>
 • திருமதி சிநேகா பிரசன்னா அவர்கள் தோன்றும் ஆசிர்வாத் குலாப்ஜாமூன் மிக்ஸ் விளம்பரம் குறிப்பிடத்தக்கவோர் இலக்கியப் படைப்பாகும்
 • இன்றைய நடையின்போது 3 சந்தர்ப்பங்களில் வேகக் காற்று குடையைப் பிடுங்கப்பார்த்தது. விடுவேனா? புற400 ஞாபகத்தில் மூச்சு வாங்கக் காத்தேன்
 • வேர்க்கடலை உருண்டைக்கு முன்னால் பொட்டுக்கடலை உருண்டை என்பது, பொன் வைக்கிற இடத்தில் காகிதப் பூ வைத்ததுபோலாம்
 • Kannada Rajyotsavaபற்றி நங்கைக்குக் கதை சொன்னேன். 3000 மாணவர்கள் கொண்ட பள்ளி உதாரணம் வொர்க்கவுட் ஆனது, உங்களுக்கும் பயன்படலாம்
 • சீரியல் வசனங்கள் அனைத்தும் எண்ணி ரெண்டே மெட்டுகளில் அமைபவை. 1. நெகிழ்ச்சியான ராகம் 2. கோப கீதம்
 • நல்ல காவியம் என்பது ஆரம்பத்திலன்றி, இடையில்தான் தொடங்கவேண்டும் என ஓர் இலக்கணம் உண்டு.சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டுவிடுகிறார்கள்
 • விடாத மழையிலும் பெங்களூரு தெருக்களில் ஜன நெரிசல், ஒரு குடை பட்டு, அருகே சில குடைகள் மெல்லச் சுழல்கின்றன, gear movementபோல
 • Any service to convert all CDs / DVDs you have into an external hard disk? Many will pay for it, saves expensive (physical) space!
 • ‘Proposal is an optimistic document, contract is a pessimistic view of the same, don’t swap them’, says my boss.True in real life too :>
 • பெண்கள் பத்திரிகை ஒன்றின் போஸ்டர் says, ‘சூர்யாபோல் ஸ்மார்ட்டாக உங்கள் கணவர் உடுத்த, நீங்கள் என்ன செய்யவேண்டும்?’ #serious #facepalm
 • Tendulkar scores a 100 in Ranji Trophy. Oh, he starts all over again? :>
 • A school charges Ra 60000 as donation, but they will refund Rs 50000 if your child stays there for 3 years+ Nice idea!
 • குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்கினால் சேமியா உப்புமா இலவசமாம். கடவுளே, மார்க்கெட்டர்ஸுக்கு ஏன் இப்படிக் கொடுமையான ரசனையைத் தந்தாய்?!
 • அதெப்படி இருவரும் தம்மடித்தபடி ரொமான்ஸுகிறார்கள்?!
 • டியர் க்ரிக்கின்ஃபோ, ரஞ்சி ட்ராஃபில ரயில்வே அணிக்கு எதிராக சச்சின் அடிச்ச செஞ்சுரியையெல்லாம் ஹைப் செய்றது கொஞ்சமும் நியாயமில்லை
 • Top 3 Batsmen @ World Cup : Sachin (45 Matches, 2278 Runs, Avg 56.95), Ponting (46 M, 1743 R, Avg 45.86), Lara (34 M, 1225 R, Avg 42.24)
 • //Suriya Kissed on Glass & Kajal Kissed a Sponge Ball for the Lip Kiss Scene in Maatraan// உலக உத்தமர் சங்கத்தில் 2 புது மெம்பர்ஸ் :>
 • 140 நிமிடங்கள் நடந்து திரும்பியதும் சுடச்சுட போண்டா தருகிறார் மனைவியார். மறுக்கவா, எடுக்கவா? Decisions… Decisions…
 • Tata Docomo ’துப்பாக்கி ரீசார்ஜ் ப்ளான்’ என்று விளம்பரம். அது ரீலோட் இல்லையோ?! :>
 • மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வெள்ளை ஜிப்பாவில் ஜம்மென்று இருக்கிறார். தன் துறை முன்னேற நல்ல ஸ்டெப்புலுகளை எடுப்பார் என நம்புவோம்
Advertisements