Routes

’திருமுறைமணி’ புலவர் எ. வேலாயுதன் அவர்களின் பெரிய புராண விரிவுரைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான மேட்டர்.

‘நல்லவனுக்கும் நல்லவனுக்கும் 3 வழி, நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் 2 வழி, கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி’ வாரியார் தன்னுடைய பேச்சில் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் இது. என்ன அர்த்தம்?

ஒரு சிறு பாதை, அதில் நல்லவர்கள் A, B எதிரெதிரே வருகிறார்கள். A செல்வதற்காக B ஒதுங்கி நடப்பார் & Vice Versa,So 1 Old, 2 New என 3 பாதைகள்.

அதே பாதை, C என்ற நல்லவர், D என்ற கெட்டவர் எதிரெதிரே வருகிறார்கள், Cக்கு வழிவிட Dக்கு மனம் இல்லை, ஆனால் Dக்கு C வழிவிடுகிறார், ஆக 1 Old, 1 New என 2 பாதைகள்.

அதே பாதை, E, F என்ற கெட்டவர்கள் வருகிறார்கள், இருவரும் அடுத்தவருக்கு வழி விட மறுக்கிறார்கள், அவர்கள் கண்ணில் படுவது ஒரே பாதைதான்.

ஆக, நல்லவனுக்கும் நல்லவனுக்கும் 3 பாதை, நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் 2 பாதை, கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே பாதை 🙂 #Smart

விளக்கப்படம், By @penathal

nallaketta

Advertisements

Tamil Numbers

தமிழ் எண்கள், பின்னங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன என்பதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான கட்டுரையைப் படித்தேன்.

எண் சாண் உடம்பு, பாதத்திலிருந்து 2 சாண், அதாவது நான்கில் ஒரு பாகம், கால் (உறுப்பு), ஆகவே 1/4 = கால்.

இன்னும் இரண்டு சாண், 2 + 2 = 4, அதாவது, எட்டில் சரிபாதி, இடுப்பு, அதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ’அரை’, ஆகவே 1/2 = அரை.

இன்னும் இரண்டு சாண், 4 + 2 = 6 = 3 * 2, ஒரு கால் (உறுப்பு) 2 சாண் என்பதால், 3/4 = முக்கால்.

இந்த விளக்கம் முனைவர் கா. மீனாட்சி சுந்தரம் தந்தது.

Kiss

இணைபிரியாமல் எப்போதும் சேர்ந்தே வாழும் அன்றில் பறவைகளைப்பற்றி நிறைய காதல் கவிதைகளில் வந்துள்ளது. அதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர்.

இந்த அன்றில் பறவைகள் இரவில் தூங்கும்போது, ஒன்றின் அலகோடு இன்னொன்றைக் கோத்துக்கொண்டுதான் உறங்குமாம்.

தூக்கக் கலக்கத்தில் இந்த அலகுகள் பிரிந்துவிட்டால், சட்டென்று துயில் கலைந்து மீண்டும் கவ்விக்கொண்டு மறுபடி உறங்குமாம்.

உலகப் புகழ் ‘ஃப்ரெஞ்சு முத்தம்’ இங்கிருந்து வந்ததுதானா? 😉

Chandramathi

’சந்திரமதி பெருக்கல்’ன்னா என்ன, தெரியுமா?

சந்திரமதி ராணி, அவர் அடிமையானபோது, சரியாகப் பெருக்க, வேலை செய்யத் தெரியவில்லையாம், அலட்சிய வேலை = சந்திரமதி பெருக்கலாம்

அது சந்திரமதி இல்லை, ‘சந்திரவதி’ என்கிறார் கிருபானந்த வாரியார்

December 2008

ரொம்ப நாளைக்குப்பிறகு கேஸட் ப்ளேயரை தூசு தட்டி எடுத்தேன், எஸ். வி. சேகரின் ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’

//சிரிப்பு உங்கள் சாய்ஸ்// இது நாடகம் என்று நினைத்துக் கேட்கத் தொடங்கினேன். கோவி. கோவன் என்பவர் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகளின் தொகுப்பு

//சிரிப்பு உங்கள் சாய்ஸ்// எஸ். வி. சேகர் குழுவினர் தங்களுடைய பிராண்டை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவே

(என் கணிப்பில்) எஸ்பிபியுடன் சேர்ந்து பாடிய (ஆண்) பாடகர்களில் பெஸ்ட், எம். ஜி. ஸ்ரீகுமார், பாடல் ‘காக்காலக் கண்ணம்மா’, படம் யாத்ராமொழி

’ஓ, Butterfly’ கேட்கிறேன், சினிமாப் பாட்டுக்கு இவ்வளவு Grand Orchestration வைக்கலாம் என்று ராஜாவுக்கு எப்படி முதன்முதலாகத் தோன்றியிருக்கும்?

‘cafe coffee day’ல் ஒவ்வொரு இருக்கையிலும் செஸ், மற்ற விளையாட்டுகளை அமைத்திருக்கிறார்கள், Neat!

‘சீக்கிரம் சாப்டுட்டு வெளிய எழுந்து போ, இந்த டேபிள்க்கு அடுத்த கஸ்டமர் வருவார்’ எனும் நம் ஊர் வணிகக் கலாசாரம் இதுபோன்ற முயற்சிகளால் மாறுமா?

பாக்யராஜ் ஏன் இன்னும் ஆட்டோபயக்ரஃபி எழுதலை (அல்லது அல்ரெடி எழுதிட்டாரா?) அவர் தன் கதையை நீட்டி முழக்கிச் சொன்னா ஜோரா இருக்கும்:)

போக்குவரத்து நெரிசல், சாலை மத்தியில் இரண்டு எருமை மாடுகள் முட்டிக்கொண்டு சண்டையிடுகின்றன (குறிப்பு: இது உருவகம் அல்ல, நிஜத்தில் பார்த்தது 😉

’டாலர் ஸ்டோர்’ என்று சொல்லிவிட்டு உள்ளே ’ஹிதோபதேசக் கதைகள்’ புத்தகம் விற்கிறார்கள், அபத்தமாக இல்லை?

நாங்கள் ஆடை வாங்கச் சென்ற ‘FabIndia’ கடை, நிஜத்தில் ஒரு வீடு, ஒவ்வோர் அறையிலும் ஆடை, பொருள்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள், வித்தியாசமான அழகு

//FabIndia// ஆனால், வெரைட்டி போதாது, ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்

ஜெயநகரில் ஏகப்பட்ட ஜன நெரிசல், நடுவே இரண்டு பிளாட்ஃபாரக் கடைப் பெண்கள் குடுமி பிடிச் சண்டை (சத்தியமாக எருமை மாடு ட்வீட்டின் தொடர்ச்சி அல்ல)

லாண்ட்மார்க்கில் குழந்தைகளின் பொம்மைத் திருவிழா, யானை விலை பொம்மைகள் இந்த மாதம் முழுக்கக் குதிரை விலைக்குக் கிடைக்குமாம்

கடவுள் புண்ணியத்தில் இன்றைக்கு நான் சென்ற வழியில் யாரும் (எருமைகள் / மனிதர்கள்) சண்டை போடவில்லை

ஒரு குடிகாரன் தள்ளாடியபடி நெரிசல் போக்குவரத்துச் சாலை நடுவே அபத்திரமாக நடந்துகொண்டிருந்தான், ஒழுங்காக வீடு போய்ச் சேர்ந்திருப்பானா?

’இன்னியோட சோலார் வாட்டர் ஹீட்டர் ஃபிக்ஸ் செஞ்சு ஒரு மாசம் ஆச்சு’ என்றாள் மனைவி … அட ராமா, பெண்கள் இதையெல்லாமா ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்?

நண்பருக்குத் திருமணம், பெண் திருநெல்வேலி, ‘கல்யாணத்திலே அல்வா உண்டா?’ என்று சம்பிரதாயமாகக் கிண்டலடித்தோம், ’இல்லை, ஆனா அருவா உண்டு’ என்றார்

’அக்கவுண்ட் வாங்கினால் ஒரு டார்ச் லைட் ஃப்ரீ’ என்று கூவி அழைக்கிறது ஒரு வங்கி

தன்னந்தனிமையில் இரு கிளி இணைந்தது, சிறகுகள் நனைந்தது பனியிலே, நனைந்ததனால், சுடுகிறதே

இனி ஒரு தினம் புது மலர்வனமே, மனதில் ஒளி கொடு ரகசிய நிலவில், விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்

இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள், புதிய கானங்கள் பொழியவே, அமுத மேகங்கள் பொழிய வாருங்கள், இளைய தேகங்கள் நனையவே

கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண் நெஞ்சில் ஒரு மோகம் துள்ளுது தன் இருதய துடிப்பொடு விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது

‘ஏகன்’ படம் பாடல் வரிகள் எழுதியது யார்? உதாரணம்: ‘come on baby girl மல்லிகா, can I bite you like a நெல்லிக்கா’

அனைத்து பாப் கார்ன் ஸ்டால்களிலும் கூட்டம் அள்ளுகிறது, தியேட்டரில் / வெளியில் / திருவிழாவில் / எங்கும் … ஏன்?

தூர்தர்ஷனில் ஒரு டாக்டர் பேசுகிறார், ‘(போலியோ சொட்டு மருந்து) வதந்திகளால் நேற்று வந்தது கலக்கம், அதைப் போக்க நாங்கள் தருகிறோம் விளக்கம்’

நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் கேக் கண்காட்சி, ’உலக அதிசயங்களின் மாடல்களைப் பார்க்க வாருங்கள்’ என்றார்கள், 30 ரூபாய் டிக்கட், ஏமாற்றம்

உலக அதிசய மாடல்களெல்லாம் வெறும் கார்ட்போர்ட், கேக்கில் செய்தவை அல்ல, கேக்குகள் வழக்கம்போல் கப்பல், கட்டிடம், ரோபோ எட்ஸட்ரா, Boring

வெளியில் வந்து மீண்டும் விளம்பரத்தைப் பார்த்தேன், உலக அதிசய மாடல்கள் தனி, கேக் கண்காட்சி தனி, இரண்டையும் இணைத்துக்கொண்ட நான்தான் முட்டாள்

கேவலமான விளம்பர உத்தி, போதாக்குறைக்கு 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசியம் டிக்கெட் எடுக்கவேண்டுமாம்

ஒரே ஆறுதல், நீல்கிரீஸ் கண்காட்சி வளாகத்திலேயே ஒரு சின்ன புத்தகக் கண்காட்சியும் இருந்தது, கொஞ்ச நேரம் ஜாலியாகப் பொழுது போச்சு

Archer

ஜெஃப்ரே ஆர்ச்சர் பிரமாதமாகப் பேசுவார், தெரியுமா? பெங்களூரில் ஒரு விழாவில் அவர் பேச, 1 மணி நேரம் மெய்மறந்து கேட்டோம்!

அந்த விழாவில் ஆர்ச்சர் பேசத் தொடங்கியபோது, ‘Next year, England cricket team will come here and beat india comprehensively’ என்று தொடங்கினார்

நாங்களெல்லாம் ‘ஓஹோஓஓஓஓஓ’ என்று கூச்சல் போட்டோம், ‘Well, I am a story teller’ என்று அவர் பதிலடி கொடுத்ததும், செம கைதட்டல் 🙂

அந்த 45 நிமிடமும் செம சிரிப்பு மழை, இந்த மனிதர் இத்தனை நகைச்சுவையானவரா என்று வியந்தோம்,

அவர் பேச்சு உணர்ச்சிமயமாக, கிட்டத்தட்ட நாடகம்போலக் கச்சிதமாக இருந்தது, ஒவ்வொரு காட்சியையும் அப்படியே நடித்துக் காண்பித்தார்

தன்னுடைய முதல் நாவல் (not a penny …) எப்படி பெஸ்ட்செல்லர் ஆனது என்கிற கதையை அவர் விவரித்த விதம் … சான்ஸே இல்லை 🙂

அந்த நாவல் எடுத்த எடுப்பில ஹிட் ஆகலையாம், ரொம்பப் பாடுபட்டு ப்ரமோட் செஞ்சிருக்கார் மனுஷன், அப்புறம் பல மில்லியன்கள் வித்துடுச்சு

Bangalore Book Fair 2008

பெங்களூர் புத்தகக் கண்காட்சி சென்று வந்தேன், 20 ரூபாய் டிக்கெட்டுக்கு மகா கேவலமான ஏற்பாடுகள்

எதிரெதிரே இருக்கும் ஸ்டால்களுக்கு நடுவே ஒன்றரை கோமண அகலத்துக்கு இடம் விட்டால், யாருக்கேனும் கடைகளுக்குள் போய்ப் புத்தகம் புரட்டத் தோன்றுமா?

இந்த நெரிசலில் தப்பி எப்படா வெளியே போய்ச் சேருவோம் என்றுதான் இருக்கிறது … சந்தோஷமாகப் புத்தகங்களைப் புரட்ட முடியவில்லை

பார்த்தவரை சுவாரஸ்யம் தந்தவை: அத்வானியின் சுயசரிதை தமிழ், கன்னட மொழிபெயர்ப்புகள், நடிகர் சிவகுமாரின் டைரி, வைரமுத்துவின் பாற்கடல் (Q & A)

நான் வாங்கியவை ரொம்பக் கொஞ்சம், முக்கியமாக வியெஸ்வி எழுதிய பாபநாசம் சிவன் வாழ்க்கை வரலாறு (விகடன் பிரசுரம் வெளியீடு)

ஒரே சந்தோஷம், ரொம்ப நாளைக்குப்பிறகு திருமதி. ஆதவன் அவர்களை NBT ஸ்டாலில் சந்தித்துப் பேசியது

சாஹிதிய அகாதெமி ஸ்டாலில் இலக்கியப் பெரிசுகளைப்பற்றிய டாகுமென்டரி CDகள் கிடைக்கின்றன. விலை ரூ 100/- (30 நிமிடம்) அல்லது ரூ 150/- (60 நிமி)

காமெடி என்னவென்றால், அகாதெமி சிடிக்களில் விலை குறிப்பிடப்படவில்லை, ஏதோ ஒரு பட்டியலில் எழுத்துக் கூட்டித் தேடிதான் விலை சொல்கிறார்கள், ஏன்?

பெங்களூர் புத்தகக் கண்காட்சி வாசலில் ஒருவர் ’டிக்கெட் எவ்ளோங்க’ என்றார், ‘20 ரூபாய்’ என்றதும், ‘அம்மாடி’ என்று திரும்பிவிட்டார்

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கக் கண்காட்சிகளா, ஆர்வமாக வருகிறவர்களையும் விரட்டி ஓட்டவா?

புத்தகங்களுக்காக 20 ரூபாய் செலவழிக்கமுடியாதா என்று கேட்காதீர்கள், அவருடைய உடை, முகத்தில் வியர்வை, தூசைப் பார்த்தால் பணக்காரராகத் தோன்றவில்லை