கன்னட ராமாயணம்

இன்று கன்னடக் கவிஞர், எழுத்தாளர் கூவெம்பு பிறந்த தினம். அவரது ’ராமாயண தரிசனம்’ நான் சமீபத்தில் படித்த **மிகச் சிறந்த** நூல்.

மற்ற ராமாயணங்களுடன் ஒப்பிடும்போது இதன் சிறப்பு, அரக்கர்களை வில்லராக அன்றி மனிதாபிமானத்துடன் அணுகிச் சித்திரிப்பது.

உதிரி பாத்திரங்களைக்கூட மிக நுணுக்கமாகச் சித்திரித்திருக்கிறார். குறிப்பாக, மந்தரைமீது தனி மரியாதையே வரும்.

வால்மீகியை அடியொற்றி எழுதினாலும், அவர் அறிமுகப்படுத்திய புதுப் பாத்திரங்கள் மிக அழகு, கச்சிதம்.

உதாரணமாக, ராமர் ஒரு வானரத்தை அழைத்துக் கேட்கிறார், ‘நீ ஏன் எனக்காகப் போரிடவேண்டும்? உனக்குக் குடும்பம் இல்லையா?’

அதற்கு அந்த வானரம் சொல்லும் பதில், ஒரு தனிக் கட்டுரை தாங்கும், மிகை உணர்ச்சி அல்ல, பக்தி ரசம் அல்ல, எதார்த்தம்.

ராவணன் பிழைகளுக்கு அவர் சொல்லும் காரணம், ‘அவனுக்கு மகள் இல்லை, ஒரு பெண்ணை வளர்த்திருந்தால் திருந்தியிருப்பான்’ 🙂

(RamayaNa Dharshanam : Sahitya Academy : Rs 250/-)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s