பதில்

ஒரு முக்கியமான வேலை. 4 Resumes வந்தன. நால்வரும் பெரிய அனுபவஸ்தர்கள், அனைவரையும் இண்டர்வ்யூ செய்ய விருப்பம் இல்லை.

ஆகவே அந்த நால்வருக்கும் ஒரு கேள்வி அனுப்பினோம், Not technical, ’இப்படி நடந்தால் அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?’ என்று Hypothetical Q.

இந்தக் கேள்விக்கு யார் எப்படிப் பதில் சொல்கிறார்கள் என்பதை வைத்து, இதில் இருவரைமட்டும் இண்டர்வ்யூ செய்ய உத்தேசித்திருந்தோம்.

இன்று பதில்கள் வந்தன, சகலமும் Buzz Words குப்பைகள். ’அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை’ என்று கண்ணதாசன் பாடியதுபோல்.

உதாரணமாக அதில் ஒரே ஒரு பதிலின் சிறு பகுதியைமட்டும் கொஞ்சம் எடிட் செய்து தருகிறேன் :

Passion helps to innovate and let enjoy the work, to get out of our comfort zones, adapt to challenges, be successful. Keenness to learn and ability to develop the passion, irrespective of your prior knowledge and taste, attitude to learn and niche …

இத்தனைக்கும் நாங்கள் கேட்ட கேள்வி மிகச் சாதாரணமானது, அதற்கு இப்படி ஒரு ’தத்வார்த்தமான’ பதிலா என்று திகைத்துப்போய்விட்டேன்.

காமெடி என்னவென்றால், நான்கு பேரும் இப்படிதான் பதில் எழுதியிருந்தார்கள். No Content, But ALL important / selling buzz words covered.

இதற்கு என்ன அர்த்தம்? யாருக்கும் தாங்கள் என்ன செய்கிறோம் என்று விளக்கத் தெரியவில்லையா, (அ) அப்படிச் சொன்னால் மவுசு குறைஞ்சிடுமா?!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s