Fair

மகளுடன் ஒரு குழந்தைகள் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன், பொம்மலாட்டம், நடனப் போட்டி, ஓவியப் போட்டி என்று சரியான கொண்டாட்டம்!

அங்கே குழந்தைகளுக்கு முகத்தில், கையில், தோள்களில் சிறு ஓவியங்(டாட்டூக்)களை வரைந்துகொண்டிருந்தவர்தான் பாவம்

சுமார் 20 குழந்தைகள் அவரைச் சுற்றி நெறித்து, எனக்கு ஒரு ரோஸ், இந்தக் கையில பட்டர்ஃப்ளை, ஸ்பைடர்மேன், ஹாரி பாட்டர், ஸ்னேக் என்று தள்ளுமுள்ளு

பாவம் அவர், எவ்வளவோ பொறுமையுடன் அவரவர் கேட்ட படங்களை சிரத்தையாக வரைந்துகொண்டிருந்தார்

சுமார் இரண்டு மணி நேரம், யாரும் அவரை உச்சா போகக்கூட அனுமதிக்கவில்லை

பின்னால் நின்று, ‘இவளுக்கு வரைங்க’, ‘நாங்கதான் ஃபர்ஸ்ட் வந்தோம்’ என்று அடாவடி செய்யும் பெற்றோர்

முக்கியமாக இந்த அம்மாக்களுக்கு, தங்கள் குழந்தைதான் எந்த க்யூவிலும் எப்போதும் முதலில் நிற்கிறது என்று ஒரு மனப் பிரம்மை!

அந்த ஓவியர் யாரையும் திட்டமுடியவில்லை, ‘வரிசையில வாங்க’ என்று சொல்லக்கூடத் தோன்றாமல் நீட்டிய கைகளில் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தார்

எல்லாம் சுமாரான ஓவியங்கள்தான், ஆனால் குழந்தைகளுக்குப் புரிகிறது, முகம் மலர்கிறார்கள்

ஒரு நாளில் இப்படி நூற்றைம்பது, இருநூறு ஓவிய(?)ங்கள் வரைகிறவர்களின் மனோநிலை எப்படி இருக்கும்?

அதே விழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மகளைப் பிடிவாதமாக மேடையேற்றி ஆடச் சொன்ன தாய்

கீழே இருந்தபடி இவர் விரல்களை அசைக்க, அதற்கேற்ப மேடையில் அந்தக் குழந்தை ப்ரேக் டான்ஸ் ஆடுகிறது!

இன்னொரு சுவாரஸ்யமான விளையாட்டும் நடத்தினார்கள், பெயர் தெரியவில்லை

மரக்கட்டையில் கோப்பை வடிவம், அதில் கயிறு கட்டித் தொங்கவிட்ட பந்து, அந்தப் பந்தைத் தொடாமல் அசைத்து, சரியாகக் கோப்பையில் விழச் செய்யவேண்டும்

கேட்கச் சுலபமாக இருக்கிறது, நிஜத்தில் செய்வது மிகக் கடினம், பலர் முயன்று பல் உடைந்தார்கள், நான் தூரத்திலிருந்து வேடிக்கைமட்டும் பார்த்தேன்

இந்த மரக்கோப்பை – நூலில் தொங்கும் பந்து விளையாட்டின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள், என் trainingsன்போது icebreaker ஆகப் பயன்படுத்துவேன்!

இதில் ஒயின் கோப்பைபோல ஒரு மரத்தால் செய்யப்பட்ட சமாசாரம், அதற்கு ஒரு கைப்பிடி, அதிலிருந்து கயிறு கட்டிக் கீழே ஒரு பந்து தொங்குகிறது

இந்த கோப்பையின் கைப்பிடியைப் பிடித்துச் சுழற்றினால் பந்து மேலே செல்கிறது, அது கீழே விழும்போது கோப்பையில் பிடிக்கவேண்டும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s