சேயிடை

நடுநிசி நெருங்கும் வேளையில் ஒரு ’முக்கியமான’ விஷயத்தைப் பேசலாமா? :>

இன்று ‘விக்ரம்’ படம், அதன் இசையைப்பற்றிப் பேசினார் நண்பர் Nataraj Srinivasan . உடனே அந்த ஆல்பத்தைத் தேடி எடுத்துப் பலமுறை கேட்டேன்.

’விக்ரம்’ல் 5 பாடல்கள், பெரும்பாலும் வைரமுத்து எழுதியவை, ஒன்று கங்கை அமரன் (ஏஞ்சோடி மஞ்சக்குருவி),இன்னொன்று வாலி (மீண்டும் மீண்டும் வா).

இந்த ’மீண்டும் மீண்டும் வா’ பாட்டில் ரசமான காட்சிகளும் (சர்ர்ர்ரி சர்ர்ர்ரி), வரிகளும் உண்டு. அதில் ஒன்று:

ஆண் குரல் பாடுகிறது,

‘செந்நிறம், பசும் பொன் நிறம், தேவதை வம்சமோ,
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ’

இதில் செந்நிறம் புரிகிறது, பசும்பொன்னின் நிறம் புரிகிறது, தேவதை வம்சம், சந்திரன் அம்சம், விரல் தீண்டல் எல்லா ஜொள்ளும் ஓகே!

நடுவில் அதென்ன ‘சேயிடை’? அதற்கு என்ன அர்த்தம்?

பலமுறை கேட்டுவிட்டேன், SPB தெளிவாகச் ‘சேயிடை’ என்றுதான் பாடுகிறார், ஏதோ அர்த்தம் இருக்கணும், தேடினேன்.

தமிழில் ‘சேய்மை’ என்றால் ’தொலைவு’ என்று அர்த்தம், அண்மைக்கு எதிர்ப்பதம்.

’சேயிடை’ என்ற பதம் பல இலக்கியங்களில் வருகிறது. உதா: சேயிடை கழியப் போந்து வந்தடைந்தார் : பெரிய புராணம், நெடுந்தூரம் கடந்து வந்தார்கள்.

இன்னும் பல இடங்களில் தேடினேன், பல பாடல்களில் ’சேயிடை’க்கு ஒரே அர்த்தம், நெடுந்தூரம் என்றுதான் தெரிகிறது.

இந்தக் கோணத்தில் பார்த்தால் ‘சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ’ என்ற வரிக்கு என்ன அர்த்தம்?

தொலைவிலிருந்து விரலை நீட்டித் தொட்டால் அவள் சந்திரன்போல் பளபளக்கிறாள்? ம்ஹூம், கோவையாக வரலையே 🙂

எழுதியது வாலி, அவர் இதில் தவறு செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை, ஏதோ விளக்கம் இருக்கணும்.

’சேய்’ என்றால் குழந்தை, ‘சேய் இடை’, குழந்தைபோல் சிறிய அளவில் கதாநாயகியின் இடை என்று சொல்கிறாரா?!

இத்தனை சிரமம் எதற்கு என்று சில வெப்சைட்களில் அந்த வரியைத் ‘தேனிடை விரல் தீண்டினால்’ என்று மாற்றிவிட்டார்கள். Cool :))

Updates:

1. நண்பர் @rajnirams இதுபற்றி வாலியிடமே கேட்டு பதில் சொன்னார், அது ‘சேயிடை’ அல்ல, ‘சேயிழை’யாம். அணிகலன்களை அணிந்த, சிவந்த பெண் என்று அர்த்தமாம். SPB மாற்றிப் பாடிவிட்டாரா, அல்லது எனக்குத் தவறாகக் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை 🙂

2. இந்தப் பாடல் 2 வெர்ஷன்கள் உள்ளன, SPB ஒன்றில் சேயிடை என்றும் இன்னொன்றில் சேயிழை என்றும் பாடுகிறார். May be, someone realized the mistake and recorded again, But, படத்தில் ‘சேயிடை’தான் பயன்பட்டுள்ளது. Refer to these links:

 

http://www.youtube.com/watch?v=Xc2RH7NNFI8

http://www.youtube.com/watch?v=x9aRcE-JekI

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s