School

நங்கை சிறுவயதில் ‘சிக்‌ஷா’ என்ற பள்ளியில் படித்தாள். பின்னர் ஒண்ணாங்கிளாஸ் தொடங்கி வேறு பள்ளிக்குச் செல்கிறாள்.

இப்போது, அவளுடைய தங்கை அதே ‘சிக்‌ஷா’ பள்ளியில் படிக்கிறாள்.

இன்று மாலை, அக்காவுக்கும் தங்கைக்கும் ஒரு சண்டை, சின்னவளை வம்புக்கு இழுப்பதற்காக ஏதேதோ சொன்னாள் பெரியவள்.

அந்தத் திட்டுகளின் இடையே, ‘உங்க ஸ்கூல் பேரு சிக்‌ஷா இல்லை, ஆட்டோ ரிக்‌ஷா’ என்றாள் நங்கை.

கேலியாகச் சொன்னதுதான். ஆனாலும் முன்பு படித்த ஒரு பள்ளியின் பெயரை அவள் இப்படிக் கிண்டலடிப்பது தவறாக (எனக்குத்) தோன்றியது.

நங்கையைக் கூப்பிட்டுக் கேட்டேன், ‘நீ படிச்ச ஸ்கூல்தானே அது? கொஞ்சம்கூட மரியாதையில்லாம இப்படிப் பேசறியே.’

அவள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னது, ‘எப்பவோ படிச்ச ஸ்கூல்தானே, கிண்டலடிச்சா என்ன தப்பு?’

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, இவள் வயது காரணமாகப் புரியாமல் பேசுகிறாளா, அல்லது பள்ளி, ஆசிரியர்கள்மீது மரியாதையெல்லாம் இனி அவசியமில்லையா? All Transactional Relationships? This feeling is mutual?

நான் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது ஒருநாள், வகுப்பில் ஆசிரியர் சொன்னார், ‘இப்பல்லாம் சார், சார்ன்னு சுத்திவருவீங்க, பின்னாடி படிச்சு முடிச்சு வேலைக்குப் போனப்புறம் நான் எதிர்ல வந்தா கண்டுக்காம ஒதுங்கிப் போய்டுவீங்க.’

அவர் அப்படிச் சொன்னபோது வகுப்பில் சிலர் நிஜமாக அழுதுவிட்டார்கள் 🙂 அழாத மற்றவர்களும் அவர் சொன்னதை நம்பவில்லை.

அவர் சொன்னது உண்மையா என உறுதி செய்கிற வாய்ப்பு அதற்கப்புறம் கிடைக்கவில்லை. ஆனால் பள்ளி, ஆசிரியர், புத்தகங்கள்மீது மரியாதை குறையவில்லை.

அது அசட்டு நம்பிக்கையா என்று தெரியவில்லை. இல்லை என்றே நம்ப விரும்புகிறேன், குறைந்தபட்சம் என்னளவில் 🙂

இந்த உணர்வு தலைமுறைக்குத் தலைமுறை குறைந்துவருகிறதோ? என் அப்பா, தாத்தா அவர் ஆசிரியர்கள்மீது இன்னும் மரியாதையுடன் இருந்திருப்பர்.

அதெல்லாம் கெடக்கட்டும், இப்போ நான் நங்கைக்கு என்ன சொல்றது? ஏதாவது சொல்லணுமா? வேணாமா? 🙂 பக்திமாதிரி குழந்தைகள்மேல திணிக்கறதாயிடுமோ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s