A Curious Case

Note: Few Major Changes Learnt / Updated In This Post Via Mr. G. Ragavan & Mrs. Kamala. My Sincere Thanks To Them

இரு தோழிகள், ஒருத்தி பெயர் சுரமஞ்சரி, இன்னொருத்தி குணமாலை. இருவரும் சுண்ணம் இடித்தார்கள்.

சுண்ணம் என்பது உடம்பில் பூசிக் கொள்ளும் பொடி. அதாவது இன்றைய டால்கம் பவுடர்தான் அன்றைய சுண்ணம். இத்தச் சுண்ணத்தை ஒருவர் மீதொருவர் அப்பியும் விளையாடுவர்.

இருவர் அரைத்த சுண்ணங்களில் எது சிறந்தது என்று அவர்களுக்குள் போட்டி.

சுரமஞ்சரி சொன்னாள், ‘என் சுண்ணம்தான் சிறந்தது’, குணமாலையும் அதையே சொன்னாள், மாறி மாறி ஒருவரை ஒருவர் வம்புக்கிழுத்து சண்டையோ சண்டை.

இரு சுண்ணங்களையும் ஒரு பெரிய தட்டில் வைத்தார்கள், பணிப்பெண்களை அழைத்து, ‘ஊரில் எல்லாரிடமும் காட்டி எது சிறந்தது என்று கேட்டு வாருங்கள்.’

பணிப்பெண்கள் ஊருக்குள் சென்றார்கள், எல்லாரிடமும் காட்டினார்கள், அவர்கள் சுண்ணங்களைப் பரிசோதித்துவிட்டு, ‘ரெண்டும் நல்லாதான் இருக்கு.’

’யோவ், இதை சொல்லவா உங்ககிட்ட வந்தோம்?’ என்றார்கள் பணிப்பெண்கள் ‘இந்த ரெண்டுல ஒரு சுண்ணம்தான் சிறந்தது, அதை கண்டுபிடிச்சுச் சொல்லுங்க.’

’அவ்ளோ நுணுக்கமா எடை போடறதுன்னா, ஒரே ஒருத்தராலதான் முடியும்’ என்று விஜயகாந்த் படம்போல் எல்லாரும் ஒருவரைக் கை காட்டினார்கள்.

உடனே, சுரமஞ்சரியும் குணமாலையும் அவரை வரவழைத்தார்கள், ‘எங்கள் சுண்ணங்களில் எது சிறந்தது?’ என்று கொஞ்சலாகக் கேட்டார்கள்.

பெண்களைக் கையாள்வதில் அவர் பிஹெச்டி வாங்கியவர். ‘ரெண்டுமே சூப்பர் சுண்ணம்’ என்று கண்ணடித்தார்.

’அதெல்லாம் முடியாது, ஏதாவது ஒண்ணுதான் சொல்லணும்’ என்றார்கள் பெண்கள். ‘கண்டிப்பா சொல்லணுமா?’, ‘ஆமாம்! தீர்ப்பு சொல்லியே தீரணும்!’

’குணமாலையோட சுண்ணம்தான் சிறந்தது’ என்றார் அவர். உடனே சுரமஞ்சரிக்குக் கோபம், ‘ஏன் அப்படி?’ என்று கொதித்தாள்.

’குணமாலை சுண்ணம் வெய்யில் நேரத்துல இடிச்சது, சுரமஞ்சரி சுண்ணம் குளிர்ச்சியான மழை நேரத்துல இடிச்சது, அதனால குணமாலை is the winner.’

Just like most losers, சுரமஞ்சரி இதை ஏற்கவில்லை, ‘நாட்டாமை, தீர்ப்பை மாத்திச் சொல்லு’ என்கிறாள்,‘அதெல்லாம் முடியாது,இதுதான் தீர்ப்பு.’

இப்போது சுரமஞ்சரி வேறு ஆயுதத்தைப் பிரயோகிக்கிறாள், ‘நீ என்ன சுண்ணம் Certification Authorityயா? உன் தீர்ப்பை ஏற்கமுடியாது’ என்கிறாள்.

’சரி, வேறு சாட்சி காட்டுகிறேன்’ என்கிறார் அவர், இருவருடைய சுண்ணத் துகள்களையும் மேலே தூக்கிப் போடுகிறார்.

’சுரும்புகளே, மிஞிறுகளே, வண்டுகளே, இந்த இரண்டு சுண்ணத்தில் எது சிறந்ததோ, அதைமட்டும் உண்ணுங்கள்’ என்கிறார்.

சுரும்பு, மிஞிறு, வண்டு, தும்பி போன்றவை பூச்சி வகைகள், அவை சுண்ணத்தில் சிறந்ததைக் கண்டுபிடிக்குமோ என்னவோ, தெரியவில்லை.

அவர் தூக்கி வீசிய சுண்ணப் பொடிகளில், சுரமஞ்சரியின் சுண்ணம்மட்டும் கீழே விழுந்தது, குணமாலையின் சுண்ணத்தை வண்டுகள் etc., உண்டுவிட்டன.

அவர் சொன்னார், ‘என்னுடைய தீர்ப்பு, Validated by வண்டுகள் etc., இனி அப்பீலே கிடையாது, குணமாலைக்குதான் வெற்றி!’

இந்தக் கதை சீவக சிந்தாமணியில் வருகிறது, சிக்கலான சுண்ண வழக்கில் தீர்ப்பு சொன்ன ஹீரோதான் சீவகன்.

இப்போது, சில சந்தேகங்கள், Summerல் இடித்த சுண்ணம் Rainy Season சுண்ணத்தைவிட ஏன் உயர்ந்தது? வண்டுகள் சுண்ணம் சாப்பிடுமா?

Update:

MaNivel Murugan @ Facebook found this link which answers this puzzle :

கோடையில் உலர்ந்தது மேலே சென்றது; மாரியில் ஈரம்பட்டது; அது சோர்வு கண்டது; கீழே படிந்தது.

வண்டுகள் மேலே பரவிய சுண்ணத்தைச் சுற்றி அவற்றைச் சுவைத்தன, சுரமஞ்சரியின் சுண்ணத்தைத் தொடவே இல்லை.

This sounds like the most logical explanation to me!

Based on this, என் கணிப்பு : கோடையில் உலர்ந்த சுண்ணமும் மாரியில் ஈரம் பட்ட சுண்ணமும் பார்க்க ஒரேமாதிரி இருக்கிறது, ஆனால் தூக்கிப் போட்டால் உண்மை தெரிந்துவிடுகிறது, வண்டு எல்லாம் சும்மா side effectபோல சேர்த்திருக்கிறார்கள்.

நன்றி மணிவேல் முருகன்!

Advertisements

3 thoughts on “A Curious Case

  1. நல்ல கதை. ஆனால் இப்படி கேள்வியோடு முடிக்கக் கூடாது 🙂 பதிலும் சொல்லிவிடுங்கள்!

    amas32

  2. நீங்கள் டிவிட்டரில் சொன்ன கதையை சுவாரசியமாக வாசித்தேன். நன்றி. அருமை.

    சுண்ணமிடித்தல் என்றால் சுண்ணாம்பை இடிப்பதல்ல. சுண்ணம் என்பது உடம்பில் பூசிக் கொள்ளும் பொடி. அதாவது இன்றைய டால்கம் பவுடர் தான் அன்றைய சுண்ணம்.

    இத்தச் சுண்ணத்தை ஒருவர் மீதொருவர் அப்பியும் விளையாடுவர்.

    முத்துவெள்ளை என்றொன்று உண்டு. அதாவது முத்துகளை உரலில் இட்டு இடித்து உருவாக்கிய சுண்ணம்.

    பொற்சுண்ணம் என்றொன்று உண்டு. பொன்னை இட்டு இடிப்பதல்ல. மஞ்சளும் வேறு சில பொருட்களும் கலந்து இடிப்பது. இப்படி இடிக்கும் சுண்ணங்களில் வாசனைப் பொருட்களும் சேர்க்கப்படும்.

    சுண்ணமிடித்தல் என்றே மாணிக்கவாசகர் பாடல்களை இயற்றியிருக்கிறார்.

    சீவகன் கண்டுபிடித்த விதத்தைச் சொல்லும் பாடல் இருக்கிறதா? இருந்தால் கொடுங்கள். படித்து வேறேதேனும் புரிகிறதா என்று பார்க்கிறேன்.

  3. உண்ணல் என்பதை ஏற்றல் எனக் கொண்டால், காய்ந்த பொடியாய் மேலெங்கும் பரவியதில், பொற்சுண்ணம் ஏற்றுப் பொன்வண்டுகளாயின.. சற்றே ஈரமாயிருந்தவை எடையால் வண்டுகளின் உடலில் படியாமல் கீழே விழுந்தன?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s