Thoothu

மணி சரியாக நள்ளிரவு 12. ஒரு ரசமான காதல் கவிதையைப் படித்துக்கொண்டிருக்கிறேன் :>

காதல் வயப்பட்ட ஒரு பெண், வானத்தைப் பார்க்கிறாள், அங்கே அன்னங்களும் நாரைகளும் பறந்து(?) செல்கின்றன, அவற்றைப் பார்த்துப் பேசுகிறாள்:

’எக்ஸ்க்யூஸ்மீ அன்னப்பறவைகளே, நாரைகளே, ஒரு சின்ன உதவி செய்யமுடியுமா?’

’செஞ்சுட்டாப் போச்சு, என்ன உதவி?’

’என் காதலன் பக்கத்து ஊர்ல இருக்கான், எனக்காக அவன்கிட்ட தூது போறதுக்காக என் மனசை அனுப்பிவெச்சேன்.’

’ஆனா, இதுவரை பதில் வரலை, என் மனசு ஒழுங்காத் தூது போச்சா, அல்லது சோம்பேறித்தனமா வழியில எங்கேயோ படுத்துத் தூங்குதான்னு தெரியலை, நான் கெடந்து தவிக்கறேன்.’

’அதுக்கு நாங்க என்ன செய்ய?’

’நீங்க பறந்துபோற வழியில எங்கயாச்சும் என் மனசைப் பார்த்தீங்கன்னா, தலைல ஒரு குட்டு வைங்க, இன்னும் அவன்கிட்ட போகலையான்னு கேளுங்க. இதுதான் நீ தூது போற லட்சணமான்னு கொஞ்சம் அதட்டுங்க, என் மனசை அவன்கிட்ட கொண்டுபோய்ச் சேருங்க.’

தேடப் போனவனைத் தேட ஆள் அனுப்பும் இந்த ‘டபுள் தூது’க் கவிதை, நம்மாழ்வார் எழுதியது (@ திருவிருத்தம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்)

அன்னம் செல்வீரும், வண்டானம் செல்வீரும், தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி, ‘அவர் இடை நீர்
இன்னம் செல்லீரோ, இதுவோ தகவு?’ என்று இசைமின்களே!

’நெஞ்சு’ இல்லை, ‘நெஞ்சினார்’. சோம்பேறியாகவே இருந்தாலும், கல்யாணம் நடக்கும்வரை தூதுவரைப் பகைத்துக்கொள்ளமுடியாதல்லவா, எக்ஸ்ட்ரா மரியாதை 😉

’அவரிடை நீர் இன்னும் செல்லீரோ? இதுவோ தகவு!’ என்னதான் சொந்த மனம் என்றாலும், எத்துணை அழகான அதட்டல்!

Advertisements

4 thoughts on “Thoothu

  1. அருமையான விவரிப்பு சொக்கன் சார். எளிதில் புரியும் வண்ணம் பதம் பிரிச்சு கொடுத்துட்டீங்க..நன்றிகள்

  2. If you don’t mistake me,- நம்மாழ்வார் தமிழ் கொஞ்சும் தூதுக்கு என்னாத்துக்கு இங்கிலீஷ் ‘தூத்து.’

    • This blog post is created automatically from Email, So needs an English title 🙂 Else the URL will become too long, So I give English titles to all the posts in this blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s