Marabu

மரபுக் கவிதை என்றாலே ‘பழந்தமிழ்’ என்று ஒரு கருத்து இருக்கிறது, அது உண்மையல்ல, எளிமையாகவும் மரபு எழுதலாம், என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

கொஞ்சம் Extremeஆக இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன், முதலில் பாரதிதாசன்.

சுற்றுலா செல்கிறவர்கள் கைவசம் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை Checklist போடுவோமே, அதை மரபுக் கவிதையாக எழுதியுள்ளார் பாரதிதாசன்.

சீப்பு, கண்ணாடி, ஆடை,
….சிறுகத்தி, கூந்தல் எண்ணெய்,
சோப்பு, பாட்டரி, விளக்கு,
….தூக்குக் கூஜா, தாள், பென்சில்,
தீப்பெட்டி, கவிகை, சால்வை,
….செருப்பு, கோவணம், படுக்கை,
காப்பு இட்ட பெட்டி ரூபாய்,
….கைகொள்க யாத்தி ரைக்கே!

இரண்டாவது உதாரணம், தமிழில் வெளிவந்த முதல் சில சமையல் நூல்களுள் ஒன்றான ‘அனுபோகமாகிய சைவ பதார்த்த முறை’. ஏகாம்பரம் என்பவர் எழுதியது.

மற்ற சமையல் புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம், எல்லாச் சமையல் செய்முறைகளும் செய்யுள் வடிவில் உள்ளன. உதாரணமாக, அதில் கத்தரிக்காய்ப் பொரியல் செய்வதைப்பற்றிய பாடல் இது:

இருபது தான் கத்தரிக்காய் கொண்டுவந்து,
….இன்பமுடன் ஒவ்வொன்றாய் நாலாய்க் கொய்து,
அரைப்படிதான் ஜலம்தனிலே வேகவைத்து,
….அரிமாவு போதுமான உப்பும் சேர்த்து,
பிரியமாக் கரண்டிதனில் நெய்விட்டுப்
….போடப்பா உளுந்துடன் மிளகாய் கிள்ளி,
திரமாக வறுத்துக் காயில் பெய்துஇறக்கி,
….தாட்டியமாய்ப் பத்தியத்திற்(கு) உண்ணலாமே!

இந்தப் பாடல்களில் கவித்துவம் போதவில்லையே என்று ஆரம்பிக்கக்கூடாது, மரபுக் கவிதையில் எதுவும் எழுதமுடியும் என்பதற்காகச் சொன்னேன்!

மற்றபடி பாரதிதாசனின் மரபுக் கவிதை லாகவத்துக்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு, For starters : http://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s