Kavinjar KavithaigaL

கண்ணதாசன் கவிதைகள் முழுத் தொகுப்பு வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முதல் பக்கம், ஏன் முன்னுரை தொடங்கி அதகளம்! என்னவொரு வார்த்தை வளம்!

முன்னுரையில் அவர் சொல்லும் ஒரு சுவாரஸ்யமாஅன் விஷயம் (என் சொற்களில்): ‘நான் கழகத்தில் இருந்தேன், பிறகு விலகினேன், ரெண்டு நிலையிலும் கவிதைகள் எழுதியுள்ளேன், எல்லாம் இந்தத் தொகுப்பில் உண்டு. இது எதற்காக என்று கேட்கிறீர்களா? ஒரே தலைவரைத் திட்டும்போதும் புகழும்போதும் என் தமிழ் எப்படி விளையாடியிருக்கிறது என்பதைப் படியுங்கள்.’

இப்படி ஒரு முன்னுரை இன்னொருவர் எழுதிவிடமுடியுமா? செம ஆர்வத்துடன் மீதிப் புத்தகத்தைப் படிக்கிறேன்!

Advertisements

Nambi & Kambi

நேற்று நாமக்கல் சுவரொன்றில் ‘நம்பி கட்டுற கம்பி’ என்று ஒரு விளம்பரம் பார்த்தேன். இதன் அர்த்தம், நம்பி என்பவர் கட்டுகிற கம்பி.

ஒருவேளை அவர்களுக்கு ‘நம்பிக்கையோடு கட்டுகிற கம்பி’ என்ற பொருள் வேண்டுமானால் ‘நம்பிக் கட்டுற கம்பி’ என்று இருக்கவேண்டும். க்கன்னா மிஸ்ஸிங், அர்த்தம் கோயிங்.