ASaNja

பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் மிக அருமையான எழுத்தாளர், குறிப்பாகக் கம்பன், பெரிய புராணம்பற்றி அவர் எழுதிய நூல்கள் அற்புதமானவை.

அசஞாபற்றிய ஒரு சுவாரஸ்யமான துணுக்கை இந்த மாதம் அமுத சுரபி இதழில் வாசித்தேன்.

மாணவப் பருவத்திலேயே அவருக்குத் தமிழ்மீது மிகுந்த ஆர்வம். ஆனால், கல்லூரியில் தமிழ் படிக்காமல் இயற்பியல் படிக்கச் சேர்ந்தார்.

இதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறது, ‘நீ ஏன் தமிழ் பட்டப் படிப்பில் சேரவில்லை?’

அசஞா சொன்னாராம், ‘ராகவய்யங்கார் சுவாமி கம்ப ராமாயணப் பாடம் நடத்தினால்தான் நான் தமிழ்ப் பிரிவில் சேர்வேன்.’

ஒரு மாணவரின் பிடிவாதத்துக்கு, பல்கலைக்கழகம் செவி சாய்த்திருக்கிறது. கம்பன் பாடத்துக்கு அவர் விரும்பிய வாத்தியார் நியமிக்கப்பட்டார்!

பின்னர், அசஞா தமிழ் படித்து MA பட்டம் பெற்றார். பல அருமையான நூல்களை எழுதினார். அவற்றை இங்கே இலவசமாக வாசிக்கலாம்: http://tamilvu.org/library/nationalized/html/naauthor-41.htm

Leave a comment