Singer

FreeCycle என்ற குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். தங்களுக்குப் பயனற்ற பொருள்களைப் பிறருக்கு வழங்க விரும்புவோருக்கானது இது.

உதாரணமாக, நீங்கள் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்கப்போகிறீர்கள் என்றால், பழையதை இதன்மூலம் மின்னஞ்சல் அனுப்பி யாருக்காவது தரலாம். அது இயங்கும் நிலையில் இல்லாவிட்டாலும், தேவையுள்ள சிலர் அதனை வாங்கிச் சரி செய்து பயன்படுத்துவர்.

அதற்கு நீங்கள் “OFFER: OLD TELEVISION" என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பவேண்டும். ஆர்வமுள்ளோர் பதில் அனுப்புவார்கள்.

இன்று அந்தக் குழுவிலிருந்து ஓர் ஈமெயில் “OFFER: Sixty (60) years old Singer” என்று இருந்தது. திகைத்துப்போனேன்.

நல்லவேளையாக, அது 60 வயதான சிங்கர் தையல் மெஷினாம்! செம டென்ஷனில் இருந்தவனைச் சிரிக்கவைத்துவிட்டார் இந்த முகம் தெரியாத கபில் பார்கவா :))

Advertisements