Children’s Day

நண்பர் உமாநாத் செல்வன் குழந்தைகள் தினச் சிறப்புப் பதிவாகத் தனது சில பொதுவான கேள்விகளுக்குப் பதில் தரச்சொல்லி என்னை அழைத்திருந்தார். அதற்காக எழுதியது:

* பள்ளிக்கு செல்லும் வழியில் அனுபவித்த மறக்கமுடியாத விஷயம்?

வேர்க்கடலை 🙂 ஐம்பது பைசாவா ஒரு ரூபாயா என்று நினைவில்லை, பாக்கெட் நிறைய வேர்க்கடலை தருவார்கள். சாப்பிட்டுக்கொண்டே பள்ளிக்கு நடப்பேன். இன்றும் என்னைக் குஷிப்படுத்தவேண்டுமென்றால் டப்பா நிறைய வறுத்த வேர்க்கடலை தந்தால் போதும்!

* மறக்க முடியாத புத்தகம்? ஏன்?

’சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய சிறுகதைப் புத்தகம் (சிறுகதை எழுதுவதுபற்றிய கையேடு அல்ல)

காரணம்: சுஜாதாவின் மயக்கும் நடை இந்தப் புத்தகத்தில்தான் எனக்கு அறிமுகமானது. அதன்பிறகு அநேகமாக அவருடைய எல்லாப் புத்தகங்களையும் வாசித்திருப்பேன்.

* எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்?

எதிலுமில்லை. கிரிக்கெட் விளையாடுவேன், ஆனால் அதிலும் சுமார்தான். ஓரமாக உட்கார்ந்து படிப்பதும் எழுதுவதும்தான் இன்றுவரை என்னுடைய பொழுதுபோக்குகள்.

* பால்யத்துக்குத் திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்?

எதையுமில்லை