PanniraNdu

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு தொடங்குகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

கொஞ்சம் பொறுங்கள், பன்னிரண்டா, பனிரண்டா?

’பன்னிரு திருமுறைகள்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆக, பன்னிரண்டுதான் சரியாக இருக்கும் என்று குத்துமதிப்பாகப் புரிகிறது.

இருந்தாலும், தீர விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்வோம்.

இதற்கான நன்னூல் சூத்திரம்:

இரண்டு முன்வரின், பத்தின் ஈற்று உயிர்மெய்

கரந்திட, ஒற்று ன ஆகும்

அதாவது, பத்து என்ற சொல்லை அடுத்து இரண்டு என்ற சொல் வந்தால், பத்து என்ற சொல்லின் நிறைவில் இருக்கும் உயிர்மெய் எழுத்து (அதாவது, ‘து’) காணாமல் போய்விடும்:

பத்து + இரண்டு = பத் + இரண்டு

அடுத்து, அந்த ஒற்று, அதாவது ‘த்’ மாறி, ‘ன்’ ஆகிவிடும்.

பத் + இரண்டு = பன் + இரண்டு

அடுத்து, பன் + இரண்டு ஆகியவை சேரும்போது, புணர்ச்சி விதிப்படி ‘ன்’ என்ற எழுத்து இருமுறை வரும்.

பன் + இரண்டு = பன்ன் + இரண்டு = பன்னிரண்டு

ஆக, 12 என்பதைப் பன்னிரண்டு என்று எழுதுவதே நமக்குச் சரி.

கவிஞர்களுக்கு, அல்லது ஓசை நயத்தோடு எழுத விரும்புகிறவர்களுக்குமட்டும் இதில் விதிவிலக்குண்டு. காரணம், பன்னிரண்டு என்பது வேறு ஒலி, பனிரண்டு என்பது வேறு ஒலி. இந்த இரு வாக்கியங்களைச் சொல்லிப்பாருங்கள்:

1.

பன்னிரண்டு நாளாய்க்

கன்னியுன்னை நெஞ்சில்

உன்னியே காத்திருந்தேன்

2.

பனிகொட்டும் ஊரில்

பனிரண்டு நாளாய்

கனியுனை எண்ணினேன்

ஓசைநயம் கருதி, இரண்டாவது வாக்கியத்தில் பன்னிரண்டைப் பனிரண்டு என்று எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s