ThaNdamizh

தண்மை + தமிழ் = தண்டமிழ் என்று எப்படி மாறியது என்று நண்பர் ராமன் கேட்டிருந்தார்.

‘தண்மை’ என்பது பண்புச்சொல், புணர்ச்சியின்போது அதிலிருக்கும் ‘மை’ கெடும்.

உதாரணமாக, தண்மை + நீர் = தண் + நீர் = தண்ணீர், இங்கே ‘மை’யைக் காணவில்லை, இதனைப் பண்புத்தொகை என்பார்கள், அதாவது பண்பைச் சுட்டிக்காட்டும் ‘மை’ என்ற எழுத்து மறைந்துள்ளது.

அதுபோல, தண்மை + தமிழ் => தண் + தமிழ்

அடுத்து, ‘ண்’ என்ற எழுத்துக்குப்பிறகு வரும் ‘த’ என்ற எழுத்து, ‘ட’ என்ற எழுத்தாக மாறும், இதற்கான நன்னூல் சூத்திரம்:

‘ண, ள முன் ட, ணவும் ஆகும்
த, நக்கள்.’

ஆக, தண் + தமிழ் => தண் + டமிழ் => தண்டமிழ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s