Kannadasan

’என் கடமை’ என்றொரு படம். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடல் வரிகள் கண்ணதாசன்.

ஒரு சுபதினத்தில் எம்.எஸ்.வி.யும் கண்ணதாசனும் இசையமைக்க அமர்ந்தார்கள். இவர் மெட்டுப்போட, அவர் விறுவிறுவென்று எழுதினார், ஒரே நாளில் எல்லாப் பாடல்களும் தயார். ‘நாங்க கிளம்பறோம்’ என்று புறப்பட்டார்கள்.

இதைப்பார்த்த இயக்குநருக்கு (படத்தின் தயாரிப்பாளரும் அவரே) கோபம் வந்துவிட்டது. ‘என்னய்யா, அவனும் (எம்.எஸ்.வி.) யோசிக்காம ட்யூன் போடுறான், நீயும் யோசிக்காம பாட்டுப் போடுறே, நான் பணம் தரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.

எம்.எஸ்.வி.யும் கண்ணதாசனும் என்ன செய்தார்கள்?

ஏற்கெனவே பாடல்கள் தயாரானபிறகு என்ன செய்வது? இரண்டு நாள் சும்மா ஆர்மோனியத்தை உருட்டிக்கொண்டிருந்தார்கள், அதன்பிறகு, அதே பாடல்களை இசைத்துக்காட்ட, இயக்குநருக்குத் திருப்தி, காசும் வந்துசேர்ந்தது.

இது ஏமாற்றுவேலை ஆகாதா?

அதற்கும் கண்ணதாசனே (மறைமுகமாகப்) பதில் சொல்கிறார், ‘ஒரு பாட்டிற்கு இசையமைக்கும்போது ஒரு மெட்டு இயக்குநருக்கோ தயாரிப்பாளருக்கோ பிடிக்காவிட்டால், தம்பி விசுவநாதன் பத்து மெட்டுகள் போடுவான், மாமா மகாதேவனும் அதேமாதிரி, நானும் மற்றவர்களுக்குத் திருப்தி ஏற்படுகிறவரை மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருப்பேன்.’

ஆனால், ‘என் கடமை’ இயக்குநரின் பிரச்னை அதுவல்லவே. விரைவாகப் பணிசெய்தது தரமாக இருக்காதென்று அவர் சந்தேகப்பட்டார். ஒருவேளை ‘எனக்கு மெட்டுகள் பிடிக்கவில்லை/வரிகள் சரியாக இல்லை’ என்று அவர் சொல்லியிருந்தால், எம்.எஸ்.வி.யும் கண்ணதாசனும் வேறு மெட்டுகள்/வரிகளைத் தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

(நிகழ்வுகள்/மேற்கோள்கள் ‘கவியரசு கண்ணதாசனின் பாடல் பிறந்த கதை’ என்ற நூலில் வாசித்தவை. தொகுப்பு: ‘தேடல்’ எஸ். முருகன். கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு. விலை ரூ 70)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s